தாய்ப்பாலூட்டுவதன் முக்கியத்துவம்!!

தாய்ப்­பா­லானது ஒவ்­வொரு உயி­ரி­னத்­துக்­கும் தனித்­து­வ­மா­னது. தாய்ப்­பா­லூட்­ட­லா­னது இந்த உல­கத்­தி­லுள்ள ஒவ்­வொரு பெண்­ணுக்­கும் உரித்­தான உரிமை மட்­டு­மன்றி, தனித்­து­வ­மான தாய்­மை­யைப் பூர­ணப்­ப­டுத்­தும் செய­லா­க­வும் அமை­கின்­றது. தாய்ப்­பா­லூட்­டு­வ­தால் சிசு, தாய் இரு­வ­ரும் பல நன்­மை­கள் அடை­கின்­ற­னர்.

ஆண்­டு­தோ­றும் தாய்ப்­பா­லூட்­ட­லின் முக்­கி­ யத்­து­வத்தை உணர்த்­தும் வித­மாக, ஓகஸ்ட் மாதத்­தில் வரு­கின்ற முதல் வார காலப்­ப­குதி தாய்ப்­பா­லூட்­டல் வார­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

சிசு­வுக்கு ஏற்­ப­டும் நன்­மை­கள்
•குழந்­தை­யின் வளர்ச்­சிக்­குத் தேவை­யான சகல ஊட்­டச் சத்­துக்­க­ளும் உரிய அள­வில் அடங்­கி­யுள்­ள­தால் குழந்­தை­யின் சீரான வளர்ச்­சிக்கு உத­வு­கின்­றது.

•இலங்கை போன்ற அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­க­ளில் கிரு­மித் தொற்று அற்ற தூய்­மை­யான உண­வைக் குழந்­தைக்கு வழங்­கு­கி­றது.
•எளி­தா­கச் சமி­பா­ட­டை­யக் கூடி­யது.
•இயற்­கை­யான நீர்ப்­பீ­ட­னச் சக்­தியை வழங்­கு­கி­றது.
•அதிக புத்­திக்­கூர்­மை­யு­டன் குழந்தை வளர்­வ­தற்கு
உத­வு­கின்­றது.
•தாய் – சிசு இடை­யே­யான பிணைப்பு வலுப்­பெ­று­வ­தற்கு உத­வி­பு­ரி­கின்­றது.
•முகத் தசை­கள் மற்­றும் தாடை­க­ளின் விருத்­திக்கு
உத­வு­கின்­றது.
•எதிர்­கா­லத்­தில் நீரி­ழிவு, உயர்­கு­ருதி அமுக்­கம் மற்­றும் அதி­கூ­டிய உடற் பரு­மன் ஏற்­ப­டு­வ­தைத் தடுக்­கி­றது.

தாய்க்கு ஏற்­ப­டும் நன்­மை­கள்
•தாய் – சிசு இடை­யே­யான பிணைப்பு வலுப்­பெ­று­வ­தற்கு உத­வி­பு­ரி­கின்­றது.
•இயற்­கைக் கருத்­தடை நிலையை ஏற்­ப­டுத்­து­வ­தால் அடுத்த குழந்­தை­யின் பிறப்பை உரிய காலத்­துக்கு தாம­த­மாக்­கு­கி­றது.
•எதிர்­கா­லத்­தில் மார்­பகப் புற்­று­நோய் மற்­றும் சூல­கப் புற்­று­நோய் ஏற்­ப­டும் வாய்ப்­பைக் குறைக்­கின்­றது.
•பிர­ச­வத்­துக்­குப் பின்­னான மன உளைச்­ச­லைக் குறைத்து மகிழ்ச்­சி­யான சூழ்­நி­லைக்கு வித்­தி­டு­கின்­றது.

தாய்ப்­பா­லூட்­டும் காலம்
சாதா­ரண குழந்­தைக்கு அதன் தேவைக்கு ஏற்­பவே பாலூட்ட வேண்­டும். குழந்­தைக்கு எப்­போது உணவு தேவை என்­பதை அதன் நடத்தை வெளிப்­பா­டு­களை வைத்தே இனங்­கண்டு கொள்­ள­லாம். அவை, ‘ஆரம்­ப நிலை அறி­குறி,இடை­நிலை அறி­குறி, பிந்­திய அறி­குறி’ என்ற வகை­யில் அமைந்­தி­ருக்­கும்.

ஆரம்­ப­நிலை அறி­குறி
•குழந்தை அடிக்­கடி கண்­க­ளைத் திறந்து மூடு­தல்.
•வாயை அடிக்­கடி திறத்­தல்.
•தலை­யைத் திருப்­பு­தல்.

இடை­நிலை அறி­குறி
•சோம்­பல் முறித்­தல்.
•அசை­வு­கள் அதி­க­ரித்­தல்.
•விரலை வாயில் வைத்­தல்.

பிந்­திய அறி­கு­றி­கள்
•அழு­தல்
•முகம் சிவக்க அழு­தல்.
இங்கு, ஆரம்­ப­நிலை அறி­கு­றி­கள் தொடர்­பில் அறிந்­து­கொண்ட உட­னேயே குழந்­தைக்­குப் பால் வழங்க வேண்­டும். குழந்தை அழு­வ­தென்­பது மிக­வும் பிந்­திய அறி­கு­றி­யா­கும்.

சரி­யான தாய்ப்­பா­லூட்­டும் முறை
•குழந்தை வாயை அக­லத் திறந்­தி­ருத்­தல்.
•கீழ் உதடு வெளிப்­பு­ற­மா­கப் பிதுங்­கி­யி­ருத்­தல்.
•குழந்­தை­யின் நாடி தாயின் மார்­பில் தொட்­டுக்­கொண்­டி­ருத்­தல்.
•முலைக்­காம்­பைச் சுற்­றி ­யுள்ள பகு­தி­யில் பெரும் பகுதி குழந்­தை­யின் வாயி­னால் பற்­றப்­பட்­டி­ருத்­தல்.

ஒழுங்­கான தாய்ப்­பா­லூட்­டலை அறிந்­து­கொள்­ளு­தல்
•குழந்தை தாய்ப்­பால் அருந்­திய பின் நீண்ட நேரத்­துக்கு உறங்­கு­தல்.
•குழந்­தை­யின் வளர்ச்சி சீராக இருத்­தல்.
• குழந்­தை­யின் விருத்­திப்­ப­டி­கள் சீராக இருத்­தல்.
•குழந்தை ஆரோக்­கி­ய­மா­க­வும் மகிழ்ச்­சி­யா­க­வும் இருத்­தல்.
•குழந்­தைக்­குச் சீரான இடை­வெ­ளி­யில் சிறு­நீர் வெளி­யேற்­றம் காணப்­ப­டல்.

மருத்­து­வர்,
நீரி­ழி­வுச் சிகிச்சை நிலை­யம்,
யாழ்.போதனா மருத்­து­வ­மனை.

You might also like