திலீ­பன் நினை­வேந்­தல்- யாழ்.மாந­கர சபை மீது பொலிஸ் வழக்கு!!

தியாகி திலீ­பன் நினை­வேந்­தலைத் தடுக்­கும் நோக்­கு­டன் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ரால் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

கொழும்­பி­லி­ருந்து பிர­யோ­கிக்­கப்­பட்ட அழுத்­தத்­தை­ய­டுத்தே பொலி­ஸார், யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன் றில் நேற்­று­முன்­தி­னம் மாலை வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ள­னர்.

இதற்கு அமை­வாக நாளை மறு­தி­னம் செவ்­வாய்க்கிழமை யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை ஆணை­யா­ளரை மன்­றில் முன்­னி­லை­யா­கு­மாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யப் படை­க­ளுக்கு எதி­ராக அகிம்சை வழி­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்த தியாகி தீலி­ப­னின் நினை­வு­நாள் தமிழ் மக்­க­ளால் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

திலீ­ப­னின் நினை­வுத் தூபி நல்­லூ­ரில் அமைந்­துள்­ளது. இந்­தத் தூபி கடந்த காலங்­க­ளில் இரா­ணு­வத்­தி­ன­ரால் உடைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­யில் அத­னைச் சுற்றி யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை பாது­காப்பு வேலி அமைத்­துள்­ளது.

திலீ­ப­னின் நினை­வேந்­தல் நாள் கடந்த 15ஆம் திகதி ஆரம்­ப­மா­னது. நினை­வுத் தூபி அலங்­க­ரிக்­கப்­பட்டு அந்த இடத்­தில் ஒவ்­வொரு நாளும் நினை­வு­கூ­ரல் நடை­பெற்று வரு­கின்­றது.

இந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ருக்கு கொழும்­பி­லி­ருந்து அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து நீதி­வான் நீதி­மன்­றில் பொலி­ஸார் வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ள­னர்.

தியாகி திலீ­பன் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் உறுப்­பி­னர். அவரை நினைவு கூரு­கின்­ற­னர். நல்­லூ­ரில் அமைந்­துள்ள தூபி­யைச் சுற்றி அமைக்­கப்­பட்­டுள் வேலி, அங்­குள்ள அலங்­கா­ரங்­கள் என்­ப­வற்றை அகற்ற உத்­த­ர­விட பொலி­ஸார் மன்­றில் கோரிக்கை முன்­வைத்­த­னர்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை ஆணை­யா­ளர், பொறி­யி­ய­லா­ளர், மாந­கர சபை பணி­யா­ளர்­கள் ஆகிய பத­வி­களை தமது வழக்­குப் பத்­தி­ரத்­தில் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

இந்த நிலை­யில் நாளை­ம­று­தி­னம் செவ்­வாய்க் கிழமை யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை ஆணை­யா­ளரை மன்­றில் முற்­ப­டு­மாறு நீதி­மன்­றம் பணித்­துள்­ளது.

You might also like