தீக்கிரையான தேவாலயம்!!

பிரான்ஸ் தலை­ந­கர் பரீ­ஸில் யுனெஸ்­கோ­வின் பாரம்­ப­ரிய சின்­னங்­க­ளில் ஒன்­றான 850 ஆண்­டு­கள் பழ­மை­யான நாட்­ரே-­டாம் தேவா­ல­யத்­தின் பெரும் பகுதி நேற்­று­முன்­தி­னம் தீக்­கி­ரை­யா­னது. தீய­ணைப்பு வீரர்­க­ளின் தீவி­ர­மான முயற்­சி­யால், தேவா­ல­யத்­தின் முக்­கி­ய பகு­தி­கள் சில சேத­ம­டை­யா­மல் காப்­பாற்­றப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்துள்­ள­னர். குறிப்­பாக கற்­சி­லை­கள் அமைந்­தி­ருக்­கும் பகுதி, மணி­கள் அமைக்­கப்­பட்டு இருக்­கும் பகுதி ஆகி­யவை மீட்­கப்­பட்­டுள்­ளன.

உல­கப் பாரம்­ப­ரி­யம்
12ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த நாட்­ரே-­டாம் தேவா­ல­யம் யுனெஸ்கோ உலக பாரம்­ப­ரிய சின்­னங்­க­ளில் ஒன்­றா­கத் திகழ்­கி­றது. பிரான்­ஸில் உள்ள ரோமன் கத்­தோ­லிக்க மக்­கள் மட்­டு­மின்றி உல­கம் முழு­வ­தும் உள்ள கிறிஸ்­தவ மக்­கள் ஆண்டு தோறும் கோடிக்­க­ணக்­கில் இந்­தத் தேவா­ல­யத்­துக்கு வருகை தரு­கின்­ற­னர்.

1163ஆம் ஆண்­டில் அடிக்­கல்
கடந்த 1163ஆம் ஆண்டு காலத்­தில் மூன்­றாம் போப் அலெக்­சான்­ட­ரால் நாட்­ரே-­டாம் தேவா­ல­யத்­துக்கு அடிக்­கல் நடப்­பட்­ட­தாக வர­லாற்று ஆவ­ணங்­கள் கூறு­கின்­றன. 13ஆம் நூற்­றாண்­டில் இந்­தத் தேவா­ல­யம் கட்டி முடிக்­கப்­பட்­டுள்­ளது. 1800களில் பிரான்ஸ் பேர­ர­ச­ரர் நெப்­போ­லி­யன் போனா­பர்டே இந்தத் தேவா­ல­யத்­தில்­தான் மூடி­சூட்­டிக்­கொண்­டார் என்று வர­லாற்­றுச் சான்­று­கள் தெரி­விக்­கின்­றன.
பிரான்­ஸின் கோதிக் கலாசார கட்­டி­டக் கலைக்கு மிகச்­சி­றந்த எடுத்­துக்­காட்­டாக இந்­தத் தேவா­ல­யம் அமைந்­துள்­ளது. தேவா­லா­யம் முழு­வ­தும் மரத்­தால், பல்­வேறு வேலைப்­பா­டு­க­ளு­டன் கூடிய அழ­கிய ஓவி­யங்­க­ளு­ட­னும், கண்­ணாடி ஓவி­யங்­கள், மரச்­சிற்­பங்­கள் ஆகி­ய­வற்­றா­லும் அழ­குற அமைக்­கப்­பட்­டுள்­ளது.

தீவி­பத்து
தற்­போது இந்த நாட்­ரே-­டாம் தேவா­ல­யத்­தில் சீர­மைப்பு பணி­கள் நடந்து வந்­தன. இந்த நிலை­யில், உள்­ளூர் நேரப்­படி திங்­கட்­கி­ழமை மாலை 6.30 மணி அள­வில் திடீ­ரென தேவா­லா­யத்­தில் தீவி­பத்து ஏற்­பட்­டது. தீவி­பத்து ஏற்­பட்­ட­வு­டன் தீ மள­ம­ள­வென ஏனைய பகு­தி­க­ளுக்கு பர­வி­யது

உட­ன­டி­யாக தீய­ணைப்பு வீரர்­க­ளுக்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்டு வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர். மேலும், அரு­கில் இருக்­கும் தேவா­ல­யங்­க­ளும் தொடர்ந்து மணி­களை ஒலிக்­க­விட்டு உத­விக்கு வரக் கோரி­னார்­கள். இந்த தீவி­பத்­தில தேவா­ல­யத்­தின் மரத்­தி­லான முக்­கிய கூரை எரிந்­தது.

400க்கும் மேற்­பட்ட தீய­ணைப்பு வீரர்­கள் அரை­ம­ணி­நே­ரத்­துக்­குள் வந்து தீயை அணைக்­கும் பணி­யில் ஈடு­பட்­ட­னர். தீய­ணைப்பு பணி­கள் துரி­த­மாக நடந்­த­தால், தேவா­ல­யத்­தின் முக்­கிய பகு­தி­க­ளான மணி அமைந்­தி­ருக்­கும் பகுதி, கற் சிலை­கள் வைக்­கப்­பட்­டுள்ள பகு­தி­கள் சேதமின்றி மீட்­கப்­பட்­டன.

உலக மக்­க­ளி­டம் உதவி
இது குறித்து பிரான்ஸ் அதி­பர் இம்­ம­னு­வல் மக்­ரோன் நிரு­பர்­க­ளி­டம் கூறு­கை­யில், ‘மிக­மோ­ச­மாக ஏற்­பட வேண்­டிய சேதம் தவிர்க்­கப்­பட்­டது. தீய­ணைப்பு வீரர்­கள் மிகச்­சி­றப்­பாக பணி­பு­ரிந்து தீயை அணைத்­துள்­ளார்­கள். தற்­போது கட்­டி­டங்­களை குளிர்­விக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். தேவா­ல­யம் மீண்­டும் மறு­கட்­ட­மைப்பு செய்­யப்­ப­டும். இதற்­கான நிதியை திரட்­டும் பணி­யில் பிரான்ஸ் அரசு ஈடு­ப­டும். நாட்­ரே-­டாம் தேவா­லயம் எமது பாரம்­ப­ரி­யம், கலா­சா­ரம். இதைக் காக்க பிரான்ஸ் அரசு உதவி கோரும்.

உல­கம் முழு­வ­தும் உள்ள மக்­க­ளி­டம் இருந்து தேவா­ல­யத்தை புன­ர­மைக்க நிதி கோரப்­ப­டும். அனை­வ­ரும் இணைந்து இந்த தேவா­ல­யத்தை மறு­கட்­ட­மைப்பு செய்­வோம்’ எனத் தெரி­வித்­தார்.

பரீஸ் நகர் தீய­ணைப்பு தடுப்­புத்­து­றை­யின் தலை­வர் ஜீன் கிளாட் கேலட் கூறு­கை­யில், ‘தேவா­ல­யத்­தின் முக்­கி­யப் பகுதி முற்­றி­லும் சேத­ம­டை­வ­தில் இருந்து பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டது. தீ கட்­டுக்­குள் வந்து, முற்­றி­லும் அணைக்­கப்­பட்­டு­விட்­டது. தற்­போது கட்­டிங்­களை குளிர்­வித்து வரு­கி­றோம். தீவி­பத்­துக்­கான கார­ணம் தெரி­ய­வில்லை விசா­ரித்து வரு­கி­றோம்’ எனத் தெரி­வித்­தார்.

அதிர்ச்சி, வேதனை
பரீஸ் நகர மக்­கள் மட்­டு­மல்­லாது, உல­கம் முழு­வ­தும் உள்ள கிறிஸ்­தவ மக்­க­ள் முக்­கிய தேவா­ல­யத்­தில் தீவி­பத்து ஏற்­பட்­ட­வு­டன் சோகத்­தில் மூழ்­கி­னார்­கள். இந்த தீவி­பத்து குறித்து அறிந்து வாடி­கன் தலைமை அதிர்ச்­சி­யும் வேத­னை­யும் தெரி­வித்­துள்­ளது. கிறிஸ்­த­வ­மக்­க­ளின் அடை­யா­ள­மாக போற்­றப்­ப­டும் நாட்ரே டாம் தேவா­ல­யத்­தில் தீவி­பத்து நடந்­தது சோகத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது எனத் தெரி­வித்­துள்­ளது.

ஜேர்­ம­னி­யின் அதி­பர் ஏஞ்­சலா மெர்­கல், இங்­கி­லாந்து தலைமை அமைச்­சர் தெரஸா மே, அமெ­ரிக்க அதி­பர் டொனால்ட் ட்ரம்ப் ஆகி­யோர் நாட்­டே-­டாம் தேவா­லா­யத்­தில் நடந்த தீவி­பத்­துக்கு ஆழ்ந்த வருத்­தங்­க­ளை­யும், வேத­னை­யை­யும் பகிர்ந்­துள்­ள­னர்.

You might also like