துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் விஜய்!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் 100- ஆவது நாளில், திடீரென வன்முறை வெடித்தது. அதில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேற்றிரவு தூத்துக்குடிக்குச் சென்றார் விஜய். உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, தலா 1 லட்ச ரூபா(இந்திய) நிவாரணம் வழங்கினார்.

காலையில் வந்தால் ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்பதால் இரவில் வந்ததாகவும், தவறாக எண்ண வேண்டாம் என்றும் குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டார் விஜய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
திருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close