துப்பாக்கியால் சுட்டு பிறந்த நாள் கொண்டாடியவர் சிக்கினார்!!

இந்தியா மத்திய பிரதேச பாஜக இளைஞரணி தலைவரான ராகுல் ராஜ்புட் என்பவர் தனது பிறந்தநாளில்  துப்பாக்கி ஒன்றால் வானை நோக்கி சுட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அந்த வீடியோ நேற்று வெளியாகியது .அந்த வீடியோவில் தான் மட்டுமில்லாமல் தன் ஆதரவாளர்கள் கையிலும் துப்பாக்கியை கொடுத்து சுடச் செய்துள்ளார்.

இது தொடர்பில் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில்காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் மாறன் என்பவர் பைராகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். அந்த முறைப்பாட்டில்  ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார்.

பொலிஸார் அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like