தெரிவுக் குழு ஒரு நாடகம் – ஊடகங்களிடம் ஜனாதிபதி!!

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் முன்னிலையாகுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுத்தாலும் நான் முன்னிலையாகப் போவதில்லை. தெரிவுக்குழு அலரி மாளிகையால் கதை எழுதப்பட்ட ஒரு நாடகம்“ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘அடுத்த ஜனாதிபதியாக யார் வந்தாலும் நாட்டை நேசிப்பவராக இருந்தால் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே நாட்டுக்குச் சிறந்தது. நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்மைக்கு காரணமே இந்த 19 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம்.

இன்னும் 4 மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் எந்தவொரு கட்சியும் இன்னமும் இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை. கட்சிகளுக்குள் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும். நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்குவதற்காக
கையொப்பம் இட்டுள்ளேன்.“ என்றும் அவர் தெரிவித்தார்.

You might also like