தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மேலும் நெருக்கடி!!

0 29

மாகாண சபைக்கான தேர்தல் நடாத்துவது தொடர்பில் பிரதம நீதியரசரின் ஆலோசணை இன்றி தீர்ப்பைப் பெறுவதே உசிதமானது என்ற நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இலங்கையின் 9 மாகாண சபைகளில் 6 மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவுற்றுள்ளது.
அதற்கான தேர்தலை நடாத்த முயற்சிக்கும் நிலையில் தேர்தல் சட்ட திட்ட நெருக்கடியை பயன்படுத்தி காலம் கடத்தப்படுகின்றது.

இதன் காரணமாக சட்டமா அதிபரின் ஊடாக பிரதம நீதியரசரின் ஆலோசணையைப் பெற்று தேர்தலை நடாத்த முடியுமா என ஆராய்ந்துள்ளனர். அவ்வாறு ஆலோசணையை பெற்றாலும் தேர்தல் நடாத்துவதில் தடங்களே நீடிக்கும் சாத்தியமே கானப்படுவதனால் ஆலோசணை ஒன்றை பெறுவதிலும் உத்தரவு அல்லது கட்டாணை ஒன்றை விதிப்பதன் ஊடாகவே பணியை விரைவு படுத்த முடியும்.

இதன் காரணமாக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து அதற்கான தீர்ப்பைப் பெற்றால் எந்தவொரு காரணத்துக்காகவும், காலத்தை வீண்டிக்க முடியாத நிலமையை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்க முடிகிறது.

இதற்காக வழக்கிடும் பணியை முன்னெடுப்பதனால் அதனைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் வழக்குத் தாக்கல் செய்ய முடியுமா எனவும் ஆராயப்பட்டதில் அங்கும் சில தடங்கள்களே கானப்படுகின்றது.

அதாவது குறித்த வழக்கில் ஓர் எதிரியாக ஜனாதிபதியின் பெயரையும் ஆணைக்குழு குறிப்பிட வேண்டும். அதேநேரம் ஆணைக்குழுவின் சார்பில் வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களமே நடாத்த வேண்டும்.

இவ்வாறு ஆணைக்குழுவின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நடாத்தும் வழக்கில் ஓர் எதிராளியாக ஜனாதிபதி குறிப்பிடப்பட்டால் ஜனாதிபதிக்காகவும் சட்டமா அதிபர் திணைக்களமே முன்னிலையாக வேண்டிய நிலையில் சட்ட நெருக்கடி எதிர்கொள்ளப்படும் சூழல் கானப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இதற்குத் தீர்வாக தனி ஒருவரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் அங்கு ஆணைக்குழுவும் தமது நிலைப்பாட்டினை தெரிவித்து வழக்கினை விரைவு படுத்த முடியும்.்எனக் கண்டறியப்பட்டுள்ளது.

You might also like