தேவாலயத்துக்கு தீ வைப்பு- மத போதகர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!!

ஆப்பிரிக்க நாடான பேர்கினா பசோவின் டப்ளோ நகரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

20 முதல் 30 வரையிலான எண்ணிக்கையில் இருந்த தாக்குதல்தாரிகள் தேவாலயத்துக்கு தீ வைத்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

தேவாலய தாக்குதல் சம்பவத்தையடுத்து, மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதுடன், நகரத்தில் பதற்றம் நிலவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You might also like