தொடருந்துடன் மோதி- யானை உயிரிழப்பு!!

முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் பனிக்கங்குளம் பகுதியில் விவசாயிகளின் வயல் நிலங்கள் மற்றம் மக்களின் மேட்டுநில பயிர்செய்கை,பயன்தரு மரங்களை கடந்த சில நாள்களாக அழித்து வந்து, தொந்தரவு கொடுத்த ஆண் யானை ஒன்று இன்று அதிகாலை தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் தொடருந்தடன், பனிக்கன்குளம் 303 ஆம் கட்டைப்பகுதியில் யானை மோதுண்டுள்ளது.

உயிரிழந்த யானையை வனஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவர் பரிசோதனை மேற்கொண்டு பின்னர் புதைக்கவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like