தொலைவாகும் தமிழர்கள்…!!

யாழ்ப்­பா­ணத் தமி­ழர் மத்­தி­யில் நில­வி­வ­ரும் அபிப்­பி­ரா­யங்­க­ளில் ஒன்று யாழ்ப்­பா­ணம் இலங்­கைத் தீவின் தலை என்­பது. தலைப் பகு­தி­யில் வாழ்­ப­வர்­கள் நாட்­டின் போக்­கைத் தீர்­மா­னிப்­பர் என்று தமி­ழர்­கள் நினைக்­கின்­ற­னர். இது சற்று அப­ரி­மி­த­மான கற்­பனை என்­ப­தைத்­தான் கடந்த 70ஆண்­டு­கள் நிரூ­பித்­துள்­ளன.

யாழ்ப்­பா­ணத் தமி­ழ­ரின் 100வீதத் திற­மை­யை­யும் கொழும்­பு­டன் ஒப்­பி­டும்­போது 15வீத அடை­வு­கூட இல்லை. தென் னிந்­தி­யா­வில் இருந்து ஆரம்­பக் குடி­யி­ருப்­பு­கள் நிகழ்ந்­த­போது பூந­கரி, மன்­னார்ப் பகு­தி­க­ளுக்கு ஊடா­கவே மக்­கள் இலங்­கைத் தீவுக்­குள் நுழைந்­த­ தற்­கான ஆதா­ரங்­கள் உண்டு.
ஆதி மக்­கள் நீர் நிலை­களை அண்­மித்தே தமது குடி­யி­ருப்­பு­களை அமைத்­த­னர். அவ்­வாறு பார்க்­கும்­போது ஆறு­களோ, நீர்த் தேக்­கங்­களோ, குளங்­களோ இல்­லாத யாழ்ப்­பா­ணத்­தில் ஆதி மக்­கள் குடி­யே­ற­வில்லை. யாழ்ப்­பா­ணத்­தின் அமை­வி­டத்தை நோக்­கும்­போது அது ஒரு வகை­ யில் கொழும்­பின் கொல்­லைப் புறமே.

ஏனைய மக்­கள் இல­கு­வாக வந்­து­போ­கும் இட­மும் அல்ல(திரு­கோ­ண­மலை போல இல்லை). இந்­தக் கொல்­லைப்­புற வாழ்க்­கை­தான் யாழ்ப்­பா­ணத் தமி­ழரை ஓரம் கட்­டிய முக்­கிய கார­ணி­யா­கும்.

தமி­ழர்­க­ளுக்­குள் பிரி­வினை
யாழ்ப்­பா­ணத் தமிழ் மக்­கள் தமது உறக்­கா­ர­ரு­டன் பழ­கிக் கொள்­வது என்பது குறித்­துப் பல தீர்க்­கங்­க­ ளைக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ‘ஓடும் புளி­யம் பழ­மும்­போல’ எனும் பழ­மொ­ழி­யை­யும் அதன் ஓர் அங்­க­ மா­கக் குறிப்­பி­ட­லாம்.

புளி­யம்­ப­ழத்­தில், ஓடும் உள்­ளி­ருக்­கும் புளி­யும் ஒன்­றாக இருப்­ப­து­போல தெரிந்­தா­லும் அவை இரண்­டுக்­கும் ஒட்­டு­றவு இல்­லை­யென்­பதே அதன் அர்த்­தம். தமது சொந்­தக்­கா­ரர்­க­ளு­டன் ஓடும் புளி­யம் பழ­மும்­போல இருக்க நினைக்­கும் ஓர் இனம் ஏனைய மதத்­த­வர்­க­ளு­ட­னும், இனத்­த­வர்­க­ளு­ட­னும், வேறு மொழி­க­ளைச் சார்ந்­த­வர்­க­ளு­ட­னும், வேறு பிர­தே­சத் தைச் சார்ந்­த­வர்­க­ளு­ட­னும் நல்­லு­ற­வைப்­பேணி வாழ்­வார்­கள் என்­பதை முழு­வ­து­மாக எதிர்­பார்க்க முடி­யாது. இதுவே யாழ்ப்­பா­ணத் தமி­ழ­ரின் வீழ்ச்­சிக்கு வித்­திட்­டது. இதன் மறு­த­லை­யான ஒரு யதார்த்­தத்­தைக் கேரள மக்­க­ளி­டம் காண முடி­யும்.

சிங்­க­ளத்தை எதிர்த்­த­வர்­கள்
ஏன் ஆங்­கி­லம் கற்­க­வில்லை?
1956ஆம் ஆண்­டில் பண்­டா­ர­நா­யக்­கா­வால் தனிச் சிங்­க­ளச் சட்­டம் கொண்டு வரப்­பட்­டது. அதை எதிர்த்த தமி­ழர்­கள் சிங்­க­ளம் படிப்­ப­தில்லை என்று கூறி­யது நியா­ய­மா­னது. ஆனால், தமி­ழர்­கள் ஏன் ஆங்­கி­லத்­தைக் கற்­க­வில்லை? 2009 ஆம் ஆண்­டுக்­குப் பின்­பான வட மாகாண அலு­வ­ல­கங்­க­ளில் ஆங்­கில, சிங்­கள அறிவு இல்­லா­த­தன் கார­ண­த்தால் கொழும்பு நிர்­வா­கத்­துக்­குச் சம­தை­யா­கச் செயற்­பட முடி­ய­வில்லை.

வலி­கா­மம் கல்வி வல­யத்­தில் கட­மை­யாற்­றிய ஓர் ஆசி­ரியை 2016ஆம் ஆண்­டில் உரிய முறை­யில், உரிய வரை­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு ஓய்­வூ­தி­யத்­துக்­கான தகு­தி­யைப் பெற்­ற­போ­தி­லும் 2018ஆம் ஆண்­டில்­தான் (ஒன்­றரை வரு­டங்­க­ளின் பின்பு) அவ­ரால் தனக்­கான ஓய்­வூ­தி­யத்­தைப் பெற முடிந்­தது. இதற்­குக் கார­ணம் கல்வி வலய நிர்­வாக உத்­தி­யோ­கத்­த­ருக்­குத் தமி­ழைத் தவிர வேறு மொழி­கள் தெரி­யா­த­மை­யும், கொழும்­பி­லுள்ள அதி­கா­ரி­க­ளுக்­குத் தமிழ் தெரி­யா­மல் ஆங்­கி­ல­மும், சிங்­க­ள­மும் தெரிந்­தி­ருக்­கின்­ற­ மையுமே. குறிப்­பிட்ட ஆசி­ரி­யை­யின் ஆவ­ணங்­கள் கொழும்பு ஓய்­வூ­தி­யத் திணைக்­க­ளத்­தி­ட­ மி­ருந்து 4 தட­வை­கள் திருப்பி அனுப்­பப்­பட்டு இழு­ப­றி­நி­லைக்­குட்­பட்­டுள்­ளது. இந்த ஆசி­ரி­ய­ரைப்­போ­லத்­தான் இங்­குள்ள ஓய்­வூ­தி­யர்­கள் பல­ரின் ஓய்­வூ­தி­யங்­க­ளின் நிலை­யும் இருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை. ஓய்­வூ­திய விட­யம் மாத்­தி­ர­மன்றி இன்­னும் பல விட­யங்­கள் இத­னால் இழு­ப­றிக்­குட்­ப­டு­வது நிகழ்ந்தே வரு­கி­றது.

சிங்­க­ள­வர்­கள் இறக்­கு­மதி
செய்­யப்­ப­ட­லாம்…!
வடக்­குக்­கான புதிய ஆளு­ந­ரின் மும்­மொ­ழிக் கொள்­கையை நடை­றைப்­ப­டுத்­தும்­போது மேற்­கூ­றிய சிக்­கல்­க­ளைத் தவிர்க்க முடி­யும். ஆனால், இத்­த­கைய மும்­மொழி ஊழி­யர்­களை யாழ்ப்­பா­ணத்­துக்கு வெளி­யில் இருந்தே இறக்­கு­மதி செய்­ய­வேண்­டி­யி­ருக்கும். தற்­போ­துள்ள தமிழ் உத்­தி­யோ­கத்­தர்­கள் ஆங்­கி­லமோ, சிங்­க­ளமோ கற்­றுத்­தே­றிப் பணி­யாற்­று­வார்­கள் என்று எதிர்பார்ப்பது முயற்­கொம்பு. இந்த நிலை­யில் சிங்­கள மொழி­யில் பணி­யாற்­றக்­கூ­டிய ஒரு­வர் தமிழ்ப் பகு­தி­க­ளின் சகல அலு­வ­லகங்க­ளுக்­கும் நிய­மிக்­கப்­பட வாய்ப்­புண்டு.

இதன் மூலம் ஒய்­வூ­தி­யம் பெறு­வ­தில் ஒன்­றரை வரு­ட­கால தாம­தங்­கள் தவிர்க்­கப்­பட்டு ஒரு மாதத்­துக்­குள் அவற்­றைப் பெறும் வாய்ப்பு மக்­க­ளுக்கு ஏற்­ப­டும். இது விட­யத்­தில் தமி­ழர் ஆங்­கி­லம் கற்­கா­தது தமது தலை­யில் தாமே மண் அள்­ளிக் கொட்­டி­ய­தா­கவே இருக்­கும். தமி­ழ­ருக்கு உரி­மை­களை வழங்­கி­னால் அர­சு­டன் இணைந்து செயற்­ப­ட­லாம் என வடக்­கின் முன்­னாள் முதல்­வர் விக்­னேஸ்­வ­ரன் அண்­மை­யில் கூறி­னார். அவ­ரது கையில் ஐந்து வரு­டங்­க­ளாக அதி­கா­ரங்­கள் இருந்­த­போது மாகாண சபை ஓர் ஆடு­க­ள­மாக இருந்­ததே தவிர, மக்­க­ளுக்­குப் பணி­யாற்­றும் மைய­மாக இருக்­க­வில்லை என்­பதை அவர் சடு­தி­யில் மறந்து பேசிய பேச்சு அது.

இலஞ்­சம், ஊழ­லில்
தமி­ழர் கெட்­டிக்­கா­ரர்
வட பகு­தித் தமி­ழர்­கள் மிக நீண்ட கால­மா­கவே தேசிய அர­சி­ய­லிலோ, தேசி­யப் பொரு­ளா­தா­ரத்­திலோ பங்­கெ­டுக்­காது ஒதுங்­கிக் கொண்­ட­னர். இத­னாலோ என்­னவோ தேசிய ரீதி­யில் போட்­டி­யி­டக்­கூ­டிய வல்­ல­மை­யை­யும், அனு­ப­வத்­தை­யும் அவர்­கள் இழந்­துள்­ள­னர். ஆனால் இலஞ்­சம், ஊழல் ஆகிய விட­யங்­க­ளில் மிக­வும் வினைத்­தி­றன் மிக்­க­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர்.

இது தமிழ்ச் சமூ­கத்­துக்­குப் பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி­விட்­டது. அண்­மை­யில் சுன்­னா­கம் பகு­தி­யில் கைப்­பற்­றப்­பட்ட எத­னோல் என்­கிற சாராய ஸ்பிறிட் மூலம் பல கோடி ரூபாய்­களை ஒரு சிலர் உழைத்­தார்­களே தவிர யாழ்ப்­பா­ணத்து மக்­க­ளின் உடல் நிலை பாதிக்­கப்­ப­டும் என அவர்­கள் எண்­ண­வில்லை. ‘‘தம்பி முந்­நூறு ரூபா­யான் ஒண்டு தா’’ என்று கேட்டு வாங்கி இத்­த­கைய தரம் குறைந்த சாரா­யங்­க­ளைச் சாதா­ரண கூலித் தொழி­லா­ளர்­கள் குடிப்­பார்­களே தவிர, அது என்ன சாரா­யம் என்று அறி­யவோ, கேட்­கவோ போவ­தில்லை. குடித்­த­வு­டன் வெறிக்க வேண்­டும் என்­பது அவர்­க­ளின் இலக்கு.

ஆரம்­பத்­தில் யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள திரை­ய­ரங்­கு­க­ளில் ‘என்ர ரைமன் பார்’ என்ற பகுதி அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தது. பொழு­து­போக்கு என்ற ரீதி­யில் குறிப்­பிட்­ட­ளவு போதைக்­குட்­ப­டும்­ப­டி­யாக, நின்ற நிலை­யில் வாங்­கிக் குடிக்­கும் அனு­மதி மாத்­தி­ரமே வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அந்த அனு­ம­தியை முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்தி மேசை, கதிரை போட்டு ஆற அமர்ந்து ஆறு­த­லாகப் போதையை அளவு கணக்­கற்று ஏற்­றிக் கொள்­ளும் வச­தி­க­ளைத் திரை­ய­ரங்­கு­கள் தற்­போது ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­ன. மது வரித் திணைக்­க­ளத்­தி­னர் அதைக் கண்டு கொள்­ளாது இருக்­கின்­ற­னர். தமி­ழ­ரின் கையி­லி­ருந்த அதி­கா­ரங்­கள் முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டுவ­தால் தமிழ் மக்­களே பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். வய­தான தாயோ இளம் பெண்ணோ தங்­கச் சங்­கிலி போட்­டுக் கொண்டு வீதி­யில் நட­மாட முடி­யாத சூழலே இன்­றைய யாழ்ப்­பா­ணத்­தின் கந்த புரா­ணக் கலா­சா­ரம்.

சிங்­க­ள­வ­ரின் நகர்வு
தமி­ழ­ரின் நிலை இவ்­வா­றி­ருக்­கும்­போது 2009ஆம் ஆண்டு வரை அநு­ரா­த­பு­ரம் மகா­போ­தி­யு­டன் தமது வடக்கு நோக்­கிய பய­ணத்தை முடக்­கி­யி­ருந்த சிங்­கள மக்­கள் தமது புனித யாத்­தி­ரையை ஜம்­பு­கோ­ளம், கந்­த­ரோடை, நயி­னா­தீவு நாக­வி­காரை என நீட்­டி­யுள்­ள­னர். அண்­மை­யில் கிளி­நொச்சி ரயில் நிலை­யத்­துக்கு அரு­கில் அறி­வி­யல் நகரை மையப்­ப­டுத்­திப் புதிய ரயில் நிலை­யம் ஒன்று திறக்­கப்­பட்­டது. இது தற்­பொ­துள்ள கிளி­நொச்சி நக­ரின் முக்­கி­யத்­து­வத்­தைப் படிப்­ப­டி­யா­கக் குறைக்­கும். பல்­க­லைக் கழ­கம், வர்த்­தக முத­லீ­டு­கள், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி எனப் பல விட­யங்­கள் அறி­வி­யல் நக­ரு­டன் இணைக்­கப்­பட்­டுள்­ள­தால், அறி­வி­யல் நகர் கிளி­நொச்சி வாசி­கள் அல்­லாத

மக்­க­ளால், நிரப்­பப்­ப­ட­வுள்­ளது. இங்­குள்ள பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்­குத் தமிழ் மாண­வர்­கள் மிக­வும் குறை­வா­கவே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர். தமி­ழ­ரின் சனத் தொகைப் பெருக்­கத்­தி­லும் கல்­வி­யி­லும் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி கார­ண­மாக மிகக் குறைந்த வீதத்­தையே நிரப்ப முடி­யும். அத்­தோடு இந்­தப்­பெரு நக­ரத்­துக்­குத் தேவை­யான குடி­நீரை இர­ணை­ம­டுக்­கு­ளமே வழங்­க­ வேண்­டி­யி­ருக்­கும். வறட்­சி­யான பின் அரை­யாண்டு காலத்­துக்கு நீர் பற்­றாக்­குறை கிளி­நொச்சி எங்­கும் காணப்­ப­டு­வ­தால், இர­ணை­ம­டுக்­கு­ளத்­துக்கு மகா­வலி நீரைப் பாய்ச்ச வேண்­டிய யதார்த்­தம் உள்­ளது. இவை அனைத்­தும் கொழும்பு அர­சின் கட்­டுப்­பாட்­டில் உள்ள விட­யங்­கள் என்­ப­தால் அரசு மிக இல­கு­வா­கவே அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­தும்.

அநு­ரா­த­பு­ரம் பழைய நக­ரம் தமி­ழ­ருக்­குச் சொந்­த­மா­ன­தாக இருந்­தது. அதை முறி­ய­டிக்க 1977ஆம் ஆண்­டில் ஜே.ஆர் அரசு செய்த யுக்­தி­யின் கார­ண­மாக அநு­ரா­த­பு­ரம் புதி­ய­ந­க­ரம் உரு­வாக்­கப்­பட்­டது. அதைத் தொடர்ந்து தமி­ழ­ரின் முக்­கி­யத்­து­ வம் அநு­ரா­த­பு­ரத்­தில் குறைந்து போயிற்று. இது­போன்­ற­தொரு நகர்வே தற்­போது கிளி­நொச்சி நக­ரத்­துக்­கும் ஏற்­ப­ட­வி­ருக்­கி­றது. வட மாகாண சபை­யின் தலை­மைச் செய­ல­கத்தை மாங்­கு­ளத்­தில் அமைத்­தி­ருந்­தால், இத்­த­கை­ய­தொரு நக­ரத்­தைத் தமி­ழர்­க­ளால் உரு­வாக்­கி­யி­ருக்க முடி­யும். இர­ணை­ம­டுக்­குள விவ­கா­ரம், திணைக்­க­ளங்­க­ளின் செயற்­பா ­டின்மை, எத­னோல் சாராய விவ­கா­ரம், தமிழ் அர­சி­யல் வாதி­க­ளின் பினாமி மதுச்­சா­லை­கள் என ஒட்­டு­மொத்­த­மாக வடக்­குத் தமி­ழரை அச்­சு­றுத்தி வரு­கின்­றன.

தமி­ழர்­க­ளின் கையி­லி­ருந்த எச்ச சொச்ச அதி­கா­ரங்­க­ளும் தமி­ழ­ரின் திற­மை­ யின்­மை­யா­லும் இலஞ்ச ஊழ­லா­லும் கைந­ழு­விப் போய்க்­கொண்டி­ருக்­கின்­றன. இதன் பின்­னர் சிங்­க­ள­வர், அல்­லது முஸ்­லிம்­கள் உயர் அதி­கா­ரி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­லாம். அதன் பின்­னர் ஆர்ப்­பாட்­டம் செய்­வ­தால் தமி­ழர்­கள் எதை­யும் அடை­யப்­போ­வ­தில்லை.

You might also like