நகைக் கடையில் தீ விபத்து!!

மட்டக்களப்பு நகரில் உள்ள தங்க ஆபரண வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.

தீ பரவல் தொடர்பில் வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸார், மட்டக்களப்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் மின்சார சபை அதிகாரிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ பரவல் காரணம் கண்டறியப்படவில்லை. உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. சேத விவரங்களும் வெளியாகவில்லை.

You might also like