side Add

நடக்­கும் பேச்­சுக்கு என்­ன­தான் பொருள்?

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்­சிக்கு ஆத­ர­வ­ளிப்­பது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முடிவு செய்­துள்­ளது.

இதற்­கான கடி­தத்­தை­யும் அது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் கைய­ளித்­துள்­ளது. இதை­ய­டுத்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­குத் தேவை­யான பெரும்­பான்­மைப் பலம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­குக் கிடைத்­தி­ருக்­கி­றது.

இந்­தக் கடி­தம் கொடுக்­கப்­பட்­டதை அடுத்துத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் தலை­வர்­க­ளுக்­கும் இடை­யில் நேற்­று­முன்­தி­னம் பேச்சு நடந்­துள்­ளது.

அதா­வது ரணி­லின் ஆட்­சிக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா­கக் கூட்­ட­மைப்­புத் தெரி­வித்த பின்­னரே, அதற்­குப் பிர­தி­யீ­டாக அந்த ஆட்சி செய்­யப்­போ­கும் விட­யங்­கள் குறித்த பேச்சு நடத்­தப்­பட்­டுள்­ளது.

இதன் பொருள் ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்­சிக்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை நீடித்­துள்­ளது என்­ப­து­தான்.
ஏனெ­னில்,  ஆட்சி மாற்­றம் அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னர் இருந்த ஐக்­கிய தேசிய முன்­னணி தலை­மை­யி­லான அர­சுக்­குத் தமது ஆத­ர­வைத் தெரி­விக்­கின்­றோம் என்றே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது கடி­தத்­தில் தெரி­வித்­தி­ருக்­கி­றது.

அதன் பொருள் ஆட்­சிக் கவிழ்ப்­புக்கு முன்­ன­ரான நிலைக்­குத் திரும்­பு­வ­தைக் கட்சி ஆத­ரிக்­கின்­றது என்று வெளியே காட்­டிக்­கொள்­வ­து­தான். இதன் மூலம் அந்தக் காலப்பகுதிக்கு முன்­ன­ரான அர­சி­லி­ருந்து சுதந்­தி­ரக் கட்சி வெளி­யே­றி­ய­மைக்­குத் தாம் பொறுப்­பா­ளி­கள் அல்­லர் என்று வியாக்­கி­யா­னம் செய்­யும் வாய்ப்பு கூட்­ட­மைப்­புக்­குக் கிடைக்­கி­றது.

ஐக்­கிய தேசிய முன்­னி­ணி­யின் ஆட்­சிக்கு நேர­டி­யாக ஆத­ர­வ­ளித்­தால் தமிழ் மக்­கள் மத்­தி­யில் கடு­மை­யான எதிர்ப்­பைச் சம்­பா­திக்க வேண்டி வரும் என்­கிற கார­ணத்­தால் கூட்­ட­மைப்பு இத்­த­கைய ஒரு நாசூக்­கான நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யிக்­கும்.

எப்­ப­டி­யி­ருந்­தா­லும் நிபந்­த­னை­யின்றி ரணி­லுக்கு வழங்கி வந்த ஆத­ரவை நீடிப்­ப­தற்­குக் கூட்­ட­மைப்பு முடிவு செய்­து­விட்­டமை உறுதி.

இதை­ய­டுத்து ஐக்­கிய தேசிய முன்­ன­ணித் தலை­வர்­க­ளு­டன் நடந்த பேச்­சுக்­க­ளில் புதிய அர­ச­மைப்பு முயற்­சி­க­ளைத் தொடர்­வது, அர­சி­யல் கைதி­க­ளின் விடு­விப்பு, படை­யி­னர் வசம் உள்ள காணி­களை விடு­விப்­பது, பொறுப்­புக்­கூ­றல் என்­பன தொடர்­பாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இவை தொடர்­பில் கால அட்­ட­வணை ஒன்றை வகுத்து அதற்­குள் எல்­லா­வற்­றை­யும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஐ.தே.முன்­ன­ணித் தரப்பு இணங்­கி­யது.

இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக 30 வரு­டங்­க­ளா­கத் தீர்வு, தீர்வு என்று பேசிக் கொண்­டி­ருப்­பது நியா­ய­மா­னது அல்ல என்று ராஜித சேனா­ரத்ன போன்ற தலை­வர்­கள் அக்­க­றை­யோடு பேசி­னார்­கள் என்­றும் தெரி­கி­றது.

ஆனால், யதார்த்­தம் என்­ன­வென்­றால் ரணி­லும் ஐ.தே.முன்­ன­ணி­யும் என்­ன­தான் கால அட்­ட­வணை போட்­டா­லும் அரச தலை­வ­ராக மைத்­திரி இருக்­கும் வரை­யில் அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம், காணி விடு­விப்பு, பொறுப்­புக்­கூ­றல் என்­ப­வற்­றில் தீர்க்­க­மான முடிவை ரணில் தரப்­பால் எடுக்க முடி­யாது.

அமைச்­சுக்­களைப் பிரித்து, அமைச்­சர்­களை நிய­மிக்­கும் அதி­கா­ரம் அரச தலை­வ­ரி­டம்­தான் இருக்­கின்­றது. பாது­காப்பு அமைச்­சை­யும் சட்­டம் ஒழுங்கு அமைச்­சை­யும் மைத்­திரி தன் வசம் எடுத்­துக்­கொண்­டால், கால அட்­ட­வணை எல்­லாம் அர்த்­த­மற்ற விட­யம்.

அட்­ட­வ­ணையே போட்­டா­லும் அதனை ரணில் தரப்­பால் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது. அது­போன்றே புதிய அர­ச­மைப்பு முயற்­சி­யும். சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆத­ரவு இன்றி இந்த விட­யத்­தில் எந்த முன்­னேற்­ற­மும் ஏற்­ப­ட­மு­டி­யாது.

ஆக­மொத்­தத்­தில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யு­டன் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நடத்­தும் பேச்­சுக்கு என்ன பொருள் இருக்­கி­றது? யாரை ஏமாற்­று­வ­தற்கு இந்­தப் பேச்சு?

You might also like