side Add

நண்பன் நீரில் மூழ்கி உயிரிழந்ததை மறைத்த சிறுவர்கள்!!

நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். எனினும் சிறுவன் உயிரிழந்த விடயத்தை நண்பர்கள் மறைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா கடலில் நடந்துள்ளது.

செங்கலடி குமார வேலியார் கிராமத்தைச் சேர்ந்த குவேந்தின் ஹரீஸ்வருத்தன் (வயது- 13) என்பவர் கரையொதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பாடசாலை சென்று வீடு திரும்பிய சிறுவன், பகலுணவை உட்கொண்ட பின்னர், தாயிடம் தலை முடி வெட்டி வருவதாக கூறிச் சென்றுள்ளார்.

மாலை 06.00 மணி வரைக்கும் முடிவெட்டச் சென்ற மகன் வீடு திரும்பாததால், பெற்றோர் மகனைத் தேடினர்.

இரவெல்லாம் விழித்திருந்துமகனின் வரவுக்காக காத்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே கிடைத்தது.

ஏறாவூர் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். சிறுவனின் நண்பர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

ஹரீஸ்வருத்தன் தலைமுடிவெட்டிடியதும், நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து புன்னக்குடா கடலுக்குகட குளிக்கச் சென்றோம். குளித்துக் கொண்டிருக்கும் போது, ஹரீஸ்வருத்தன் நீரில் மூழ்கிவிட்டதால்
பயம் காரணமாக யாரிடமும் சொல்லாமல் இருந்து விட்டோம் என்று நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like