நன்­றிக் கட­னைத் தீர்ப்­பாரா மைத்திரி!!

வட­கி­ழக்­கில் பாது­காப்­புத் தரப்­பி­னர் ஆக்­கி­ர­மித்த காணி­க­ளில் 90 சத­வீ­த­மா­னவை விடு­விக்­கப்­ப ட்­டுள்­ளன. எஞ்­சி­யுள்ள காணி விடு­விப்பு தொடர்­பில் கீழ் மட்­டத்­தில் பேசித் தீர்த்­துக் கொள்­ள­லாம். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

அரச தலை­வர் செய­ல­ணி­யின் கூட்­டத்­தில், கூட்­ட­மைப்­பி­னர் காணி விடு­விப்­புக்­கள் தொடர்­பில் காட்­ட­மா­கக் கேள்வி எழுப்­பிய பின்­னர் அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யி­ருந்­தார்.

பாது­காப்­புத் தரப்­பி­னர் காணி விடு­விப்­புத் தொடர்­பான விவ­ரங்­களை அரச தலை­வர் முன்­பாக முன்­வைத்­த­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி ­னர், பாது­காப்­புத் தரப்­பி­னரை தக­வல்­கள் வழங்­கு­மாறு கோரி­ய­போ­தும் அவர்­கள் வழங்­க­வில்லை என்று குற்­றம் சுமத்­தி­னர். பாது­காப்­புத் தரப்­பி­னர் பொய்­யான தக­வல்­களை முன்­வைக்­கின்­ற­னர் என்­றும் குறிப்­பிட்­ட­னர். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, பாது­காப்­புத் தரப்­பி­னர் கூறி­யதை மாத்­தி­ரம் வேத­வாக்­காக எடுத்­துக் கொண்­டார்.

காணி, – நிலம் என்­பன தமி­ழர்­க­ளின் வாழ்­வி­ய­லோடு இரண்­ட­றக் கலந்தவை. தமது சொத்­தாக காணி­யைக் கரு­து­ப­வர்­கள் தமிழ் மக்­கள். தங்­க­ளின் பரம்­பரை, அப்பு ஆச்­சி­யர் ஆண்ட பூமியை யாருக்­கும் தாரை வார்க்க தமி­ழர்­கள் ஒரு­போ­தும் விரும்­ப­மாட்­டார்­கள். எவ்­வ­ளவு காலம் சென்­றா­லும், தங்­கள் காணி­க­ளில் வாழ்­வதே அவர்­க­ளின் விருப்­பம்.

பாது­காப்­புத் தரப்­பி­னர் தேசிய பாது­காப்பு என்ற பெய­ரில் தமிழ் மக்­க­ளின் காணி­களை காலம் கால­மாக ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருக்­கின்­றார்­கள். பாது­காப்பு நோக்­கத்­தை­யும் தாண்டி, பாது­காப்­புத் தரப்­பி­னர் தமிழ் மக்­க­ளின் காணி­க­ளில் விவ­சா­யம் செய்­கின்­றார்­கள். சிங்­கள மக்­க­ளைக் குடி­யேற்­று­கின்­றார்­கள். பௌத்த சிலை­களை நிறு­வு­கின்­றார்­கள். தமி­ழின பரம்­பலை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு முயல்­கின்­றார்­கள்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தமிழ் மக்­க­ளின் வாக்­கு­க­ளால்­தான் இன்று உயி­ரோடு இருக்­கின்­றேன் என்­பதை மறந்து, பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் அநீ­தி­யான செயற்­பா­டு­க­ளுக்கு உத்­வே­கம் வழங்­கும் வகை­யில் செய­லாற்றி வரு­கின்­றார்.

கடந்த ஒக்­ரோ­பர் 26ஆம் திகதி, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அர­சி­யல் சூழ்­சியை முறி­ய­டித்­த­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு பெரிய பங்கு உண்டு. அதற்­குப் பழி­வாங்­கும் செயற்­பாட்­டில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஈடு­ப­டு­கின்­றார். தமிழ் மக்­க­ளின் ஏக பிர­தி­நி­தி­க­ளாக இருக்­கின்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை புறக்­க­ணித்து, அவர்­க­ளைப் புற­மொ­துக்கி அரச தலை­வர் செயற்­ப­டு­வது பொருத்­த­மாக அமை­யாது.

தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மான, தமிழ் மக்­கள் எவற்றை ஏற்­றுக் கொள்ள மாட்­டார்­களோ அவற்­றைச் செய்­வ­தில் அரச தலை­வர் குறி­யாக இருக்­கின்­றார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இருக்­கின்ற மக்­கள் ஆத­ர­வை­யும் இழக்­கச் செய்­யும் வகை­யி­லும் மைத்­தி­ரி­யின் நட­வ­டிக்­கை­கள் அமைந்­தி­ருக்­கின்­றன.

ஜெனி­வாத் தீர்­மா­னத்­துக்கு அனு­ச­ரணை வழங்கி விட்டு அதை ஏற்­றுக்­கொள்­ளப் போவ­தில்­லை­யென அரசு கூறி வரு­வ­தில் அரச தலை­வ­ருக்­கும் முக்­கிய பங்கு உள்­ளது. நாட்­டின் அரச தலை­வர் என்ற வகை­யில் பொறுப்­புக் கூற வேண்­டி­ய­வர் அவர்­தான் என்­பதை மறுத்­து­ரைக்க முடி­யாது. ஆனால் அவரே இலங்கை அனு­ச­ரணை வழங்­கிய அந்­தத் தீர்­மா­னத்தை ஏற்க முடி­யா­தெ­னக் கூறு­கி­றார்.

மைத்­தி­ரியை அமை­தி­யா­ன­வர், நேர்­மை­யா­ன­வர், வார்த்தை தவ­றா­த­வர் ஏன்­றெல்­லாம் கூறு­வார்­கள். ஆரம்­பத்­தில் இவை யாவும் அவ­ருக்­குப் பொருத்­த­மா­கத்­தான் இருந்தது. ஆனால் மகிந்­த­வு­டன் உற­வு­க­ளைப் பேணு­வ­தற்கு அவர் முற்­பட்­ட­தன் பின்­னர் யாவுமே தலை கீழாக மாறி­விட்­டன. அவர் தன்னை மாற்­றிக்­கொண்டு விட்­டா­ரெ­னவே கூற­வேண்­டும். நாட்­டில் மிக மோச­மான அர­சி­யல் குழப்­ப­மொன்று ஏற்­ப­டு­வ­தற்­கும் அவர் கார­ண­மாக இருந்­துள்­ளார். அவரது நற்­பெ­ய­ருக்­குக் களங்­கம் ஏற்­பட்­டதை ஒப்­புக்­கொள்­ள­தான் வேண்­டும். அது­மட்­டு­மல்­லாது நாட்­டின் அபி­வி­ருத்­தி­யும் பின்­தள்­ளப்­பட்­டு­விட்­டது. இதி­லி­ருந்து நாடு மீளுமா என்ற வினா­வும் எழுந்­துள்­ளது.

இவை­யெல்­லா­வற்­றை­யும் பார்க்­கும் போது அவ­ரொரு சாதா­ரண அர­சி­யல்­வா­தி­யாக மாறி­விட்­டாரா? என்ற சந்­தே­கமே எழு­கின்­றது. இது ஒரு நாட்­டின் தலை­வ­ருக்கு நல்­ல­தெ­னக் கருத முடி­ய­வில்லை.
தமது இறு­திக் காலத்­தி­லா­வது அவர் தமிழ் மக்­க­ளுக்கு உரிய நீதியை வழங்­கு­வ­தற்கு முன்­வ­ர­வேண்­டும். இது தன்­மைப் பத­வி­யில் அமர்த்­திய மக்­க­ளுக்கு ஒரு நன்­றிக் கட­னா­க­வும் அமைந்து­வி­டும்.

You might also like