நம்பிக்கை தருவார்களா நாட்டின் அரசியல் தலைவர்கள்?

நாட்டில் நிச்­ச­ய­மற்­ற­தொரு நிலை காணப்­ப­டு­கின்­ற­போ­தி­லும் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னங்­ களை நிறை­வேற்­று­வ­தில் அர­சி­யல்­வா­தி­கள் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­தைக் காண முடி­கின்­றது.

அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக மகிந்த தலை­மை­யி­லான எதி­ர­ணி­யி­னர் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­ன­மொன்றை சபா­நா­ய­க­ரி­டம் கைய­ளித்­துள்­ள­னர். இது சபா­நா­ய­க­ரால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதே­வேளை ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­அ­ர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னால் சபா­நா­ய­க­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த இரண்டு தீர்­மா­னங்­க­ளும் அர­சைக் கவிழ்க்­கின்ற நோக்­கத்­தைக் கொண்­டன. ஏனென்­றால் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னங்­கள் நிறை ­வேற்­றப்­ப­டு­மா­னால் அரசு பதவி வில­கு­வ­தைத் தவிர வேறு வழியே கிடை­யாது.

அடுத்­தது என்ன?
அவ்­வாறு ஒரு நிலை ஏற்­ப­டு­மா­னால் அடுத்­தது என்ன? என்­பதே இன்று எழுந்­துள்ள மிகப்­பெ­ரிய கேள்­வி­யா­கும். உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொ­லை­தா­ரி­க­ளின் குண்­டு­வெ­டிப்­பு­ க­ளால் ஏது­ம­றி­யாத அப்­பாவி மக்­கள் கொல்­லப்­பட்­ட­தை­யும் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தை­யும் எந்த வகை­யி­லும் மன்­னிக்க முடி­யாது. இந்­தத் தாக்­கு­தல்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளும் தாக்­கு­தல் தாரி­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கி­ய­வர்­க­ளும் தண்­ட­னைக்­கு­ரி­ய­வர்­கள்.

ரிசாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளை­ யும் தம்­மால் ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பிக்க முடி­யு­மென மகிந்த தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான உதய கம்­மன்­பில தெரி­வித்­துள்­ளார்.
ஆனால் ரிசாத் பதி­யு­தீன் பதவி விலக வேண்­டிய அவ­சி­யமே ஏற்­ப­ட­வில்­லை­யென தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்­ளார். ரிசாத் பதி­யு­தீன் பதவி வில­கி­னால் சுமார் ஐந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவை அரசு இழந்­து­வி­டு­மெ­னத் தலைமை அமைச்­சர் அஞ்­சு­கின்­றார் எனத் தெரி­கின்­றது.

இந்த நிலை­யில்­தான் கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வைப் பெறு­வ­தற்கு றிசாத் பதி­யு­தீன் முயற்சி செய்­கின்­றமை தெரி­ய­வந்­துள்­ளது. அவர் இது­தொ­டர்­பாக கூட்­ட­ மைப்­பின் தலை­மைப் பீடத்­து­டன் தொடர்­பு­கள் மேற்­கொண்­ட­தா­க­வும் தெரி­கின்­றது. அர­சுக்கு ஆத­ர­வைத் தெரி­வித்து வரும் கூட்­ட­ மைப்­பின் நிலைப்­பாடு நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மானத்­துக்கு எதி­ரா­ன­தா­கவே இருக்­கு­மென்­பதை எதிர்­பார்க்க முடி­கின்­றது. ஆனா­லும் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் விருப்­பத்­தைப் பொறுத்தே கூட்­ட­மைப்­பின் தலைமை இறுதி முடி­வொன்றை எடுக்க முடி­யும்.

எதி­ரும், புதி­ரும்
அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் இணைந்து செயற்­ப­டும் போதே அரசு என அழைக்­கப்­ப­டு­தல் பொருத்­த­மாக இருக்­கும் ஆனால் இன்­றுள்ள நிலை­யில் இவர்­க­ளி­ரு­வ­ரும் எதி­ரும் புதி­ரு­மா­கக் காட்­சி­ய­ளிக்­கின்­ற­னர். தலைமை அமைச்­சரை அந்­தப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்­டுத் தமக்கு வேண்­டிய ஒரு­வரை அந்­தப் பத­வி­யில் அமர்த்­து­வதே அரச தலை­வ­ரின் நோக்­க­மா­கக் காணப்­ப­டு­கின்­றது. முன்பு ஒரு தடவை அவர் இந்த முயற்­சி ­யில் ஈடு­பட்­ட­போ­தி­லும் அது தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­தது. இத­னால் அர­சி­யல் குழப்­பங்­க­ளும் ஏற்­பட்­டன. நாட்­டின் கீர்த்­திக்­கும் களங்­கம் ஏற்­பட்­டது. உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொ­லைத் தாக்­கு­தல் தொடர்­பான புல­னாய்­வுத் தக­வல்­கள் ஏற்­க­னவே கிடைத்த போதி­லும் அதைத் தடுத்து நிறுத்­த­வில்லை என்று எதி­ர­ணி­யி­னர் குற்­றம் சுமத்­துகின்­ற­னர். ஆனால் அரசு தரப்­பி­லி­ருந்து ஆக்க பூர்­வ­மான பதில் எது­வும் இது­வ­ரை­யில் வழங்­கப்­ப­ட­வில்லை.

ஏற்க முடி­யாத செயல்
இந்த நிலை­யில் சில முஸ்­லிம் தரப்­பி­னர் சிங்­கள மக்­க­ளி­டம் காணப்­ப­டும் தமது இனத்­த­வர்­கள் தொடர்­பான வெறுப்­பை­யும் கோபத்­தை­யும் தணிக்­கும் பொருட்டு தமி­ழர்­கள் தொடர்­பான தவ­றான கருத்­துக்­களை அவர்­க­ளி­டம் பரப்­பு­வ­தில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­னர். போர் இடம்­பெற்ற போதும் அண்­மை­யில் இடம்­பெற்ற தற்­கொ­லைக்­குண்­டுத் தாக்­கு­த­லின்­போ­தும் ஏரா­ள­மான தமி­ழர்­கள் கொல்­லப்­பட்­ட­போது அது தொடர்­பாக எள்­ள­ள­வும் அக்­கறை காட்­டாத இவர்­கள் தற்­போது தமி­ழர்­க­ளைக் காட்­டிக்­கொ­டுப்­ப­தற்கு முயற்­சிப்­ப­தைப் பார்க்­கும்­போது வேத­னை­தான் மன­தில் ஏற்­ப­டு­கின்­றது.

நாடு இருக்­கின்ற நிலை­யில் அர­சி­யல்­வா­தி­கள் நடந்­து­கொள்­கின்ற விதம் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தா­கத் தெரி­ய­வில்லை. நாடா­ளு­மன்­றத்­தில் அமளி தும­ளி­யில் ஈடு­ப­டு­வ­தும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தகாத வார்த்­தை­க­ளால் திட்­டித் தீர்ப்­ப­தும் மக்­க­ளால் ஏற்க முடி­யாத விட­யங்­க­ ளா­கும். மக்­கள் எவ்­வ­ளவோ எதிர்­பார்ப்­பு­க­ளு­டன் இவர்­களை நாடா­ளு­மன்­றம் அனுப்பி வைத்­துள்­ள­னர். ஆனால் அவர்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பொய்­யாக்­கும் வகை­யில் இவர்­கள் நடந்­து­கொள்­வதை ஏற்க முடி­யாது.

இதுவே அவ­சி­யம்
நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த வழக்­கில் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வந்த ஞான­சார தேரர் அரச அதி­ப­ரின் பணிப்­பின் பேரில் சிறை­யி­லி­ருந்து வௌியே வந்­துள்­ளார். ஒரு குற்­ற­வா­ளி­யான அவர் புனி­த­மான பௌத்த மதக் கட­மை­க­ளில் ஈடு­ப­டு­வாரா என்­ப­தைப் பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்க வேண்­டும். நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னங்­களை விட மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளிக்­கும் வகை­யில் நடந்­து­கொள்­வ­து­தான் அர­சி­யல் வாதி­க­ளின் இன்­றைய பிர­தான பணி­யா­கும்.

You might also like