நம்பினால் நம்புங்கள்!!

பெண்ணாக இருந்து ஓரினச் சேர்க்கைக்காக ஆணாக மாறிய நபருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மருத்துவத் துறையின் வளர்ச்சி காரணமாக, இன்றைய உலகில் முடியாதது எதுவும் இல்லை என்றாகியுள்ளது. ஆணாக பிறந்த நபர் மருத்துவ சிகிச்சை உதவியுடன், தன்னைப் பெண்ணாக மாற்றிக் கொள்ள முடியும். இவர்களை திருநங்கை என அழைக்கின்றனர்.

இதேபோல, பெண்ணாக பிறந்த நபர் ஆணாக மாற்றிக் கொள்ள முடியும். அவர்களை திருநம்பி என அழைக்கின்றனர். திருநங்கைகளுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற போதிலும், திருநம்பிகளுக்கு இத்தகைய மருத்துவ அதிசயங்கள் நிகழ்வது உண்டு. இதுபோன்ற சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோ பகுதியைச் சேர்ந்தவர் வைலே சிம்ப்சன். இவர், தனது 21 ஆவது வயதில் அறுவை சிகிச்சை மூலமாக, பெண்ணாக இருந்து ஆணாக, சமீபத்தில் மாறினார். தற்போது 28 வயதாகும் இவர், ஸ்டீபன் கீத் என்பவருடன் இணைந்து வாழ்கிறார்.

இந்நிலையில் திருநம்பி சிம்ப்சன் கருத்தரித்து, கடந்த 6 மாதங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தையும், சிம்ப்சனும் உடல்நலத்துடன் உள்ளனர். இந்த தகவல் தற்போதுதான் வெளியாகியுள்ளது. முகத்தில் மீசை, தாடியுடன் குழந்தையை சுமக்கும் சிம்ப்சனின் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

You might also like