நல்லிணக்கம் தொடர்பாக -மாணவர்களுக்கு விழிப்பூட்டல்!!

நிலை மாறு கால நீதி மற்றும் மதங்கள் ஊடாக நல்லிணக்கம் தொடர்பாக தெளிவூட்டும் விசேட நிகழ்வு மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மற்றும் அல்ஹஸ்கார் தேசிய பாடசாலை ஆகியவற்றில் இன்று நடைபெற்றது.

தேசிய சமாதான பேரவை மற்றும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்கான செயற்பாடுகள் அடங்கிய சுவரொட்டிகள் மாணவர்கள் மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டன.

You might also like