நல்லூர் கந்தனைக் கைவிட்டார் ஆளுநர்!!

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நல்­லூர்க் கந்­த­னி­டம் செல்­லும் பக்­தர்­கள் இயந்­தி­ரம் மூல­மா­கச் சோதிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று வடக்கு மாகாண ஆளு­நர் தெரி­வித்து 5 நாள்­கள் கடந்­து­விட்ட பொழு­தும் எந்த முன்­னேற்­ற­மும் இல்லை என்று விச­னம் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அங்கு ஏரா­ள­மான பக்­தர்­கள் கூடு­வர் என்­பது அனை­வ­ருக்­கும் தெரிந்­தி­ருந்­தும் சோத­னைக் கெடு­பிடிகள்­ குறை­வில்லை. அத­னால் பொலி­ஸா­ரின் சோத­னைக்­குப் பக்­தர்­கள் மட்­டு­மன்றி பல­ரும் கடும் எதிர்ப்­புத் தெரி­விக்­கின்­ற­னர்.

நல்­லைக் கந்­த­னின் வரு­டாந்த மகோற்­ச­வம் கடந்த 6ஆம் திகதி கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்­ப­மான நிலை­யில் பொலி­ஸார் உடற்­ப­ரி­சோ­தனை யில் ஈடு­ப­டு­வ­தற்­குக் கடும் ஆட்­சே­பனை தெரி­விக்­கின்­ற­னர்.

கடந்த எட்­டாம் திகதி வடக்கு மாகாண ஆளு­நர் சுரேன் ராக­வன் நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில், உடற்­ப­ரி­சோ­தனை நிறுத்­தப்­பட்டு இயந்­தி­ரம் ஊடான பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­டும் என்று உறுதி அளித்­தி­ருந்­தார்.

இது­வரை எந்­த­வித முன்­னேற்­ற­மும் இல்லை என்று பக்­தர்­கள் விச­னம் தெரி­விக்­கின்­ற­னர்.

You might also like