side Add

நாட்­டின் உறு­திப்­பாட்­டைக் காக்க சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தலை­மை­யேற்­க­வேண்­டும்

ஐ.தே.கட்சி எம்.பி. வலி­யு­றுத்து

நாடா­ளு­மன்­றத்­தின் கருத்­துக்கு அரச தலை­வர் மதிப்­ப­ளிக்­கின்­றார் இல்லை. வர­லாற்­றில் முதல் தட­வை­யாக தலைமை அமைச்­சர், அமைச்­சர்­கள் இன்றி பணி­கள் இடம்­பெ­று­கின்­றன. இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் நீங்­கள் தலை­மை­யேற்று நாட்டை உறு­திப்­பா­டான நிலைக்கு கொண்டு செல்­ல­வேண்­டும். இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல தெரி­வித்­த◌ார்.

நாடா­ளு­மன்­றத்­தில் சிறப்­புரை ஆற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

போலித் தலைமை அமைச்­சர் மகிந்த ராஜ­பக்ச பெரும்­பான்­மை­யைக் க◌ாட்ட முடி­யாது போன சந்­தர்ப்­பத்­தில், தலைமை அமைச்­ச­ரும் இல்லை அமைச்­ச­ர­வை­யும் இல்லை என்று நீங்­கள் (சபா­நா­ய­கர்) அறி­வித்­தீர்­கள். அந்­தத் தீர்­மா­னத்தை நீதி­மன்­ற­மும் ஏற்­றுக் கொண்­டுள்­ளது.

இதே­வேளை நாளாந்­தாம் அர­ச­மைப்பு மீறப்­ப­டு­ கின்­றது. நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­டமை இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளது. போலித் தலைமை அமைச்­சர் மற்­றும் அமைச்­ச­ரவை இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள னர். நாடா­ளு­மன்­றத்­தில் 225 பேரும் கூறி­னா­லும் நான் ஏற்­றுக்­கொள்ள மாட்­டேன் என்று நிறை­வேற்­றுத் து­றை­யால் கூறப்­பட்­டுள் ளது.
இது நாடா­ளு­மன்­றத்­துக்­குச் செய்­யும் அவ­ம­திப்­பா­கும்.

அர­ச­மைப்­புக்கு அமைய நிறை­வேற்­றுத் துறை நாடா­ளு­மன்­றத்­துக்­குப் பொறுப்பு கூற வேண்­டும்.
நாடா­ளு­மன்­றம் கூறு­வ­தையோ நீங்­கள் கூறு­வ­தையோ மைத்­திரி கணக்­கில் எடுப்­ப­தில்லை. நீதி­மன்­றம் கூறு­வ­தை­யும் கணக்­கில் எடுப்­ப­தில்லை -– என்­றார்.

You might also like