நீதியரசர் இன்னொரு முறை நீதிமன்றுக்குச் செல்ல வேண்டாம்!!

0 19

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன் மீண்­டும் நீதி­மன்­றம் செல்­லக்­கூ­டாது. அதற்கு முன்­ன­தாகஅமைச் சரவை விவ­கா­ரம் சுமு­க­மா­கத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டும். தமிழ் மக்­க­ளின் முத­லா­வது தன்­னாட்சி அதி­கார சபை­யான வடக்கு மாகாண சபை வர­லாற்­றில் அமைச்­ச­ரவை விட­யம் கரும்­புள்­ளி­யா­கப் பதி­வா­கி­விட்­டது. அமைச்­ச­ர­வைச் சர்ச்­சையை தீர்ப்­ப­தற்கு நான் முன்­வைக்­கும் யோச­னையை முத­ல­மைச்­சர் ஏற்­பார் என்று நம்­பு­கின்­றேன்.

இவ்­வாறு வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தெரி­வித்­தார்.
வடக்கு மாகா­ண­ச­பை­யின் இன்றைய அமர்­வில் அமைச்­ச­ரவை விவ­கா­ரம் மீண்­டும் சூடு­பி­டித்­த­போது பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அமைச்­ச­ர­வைக் குழப்­பத்தை அவைத் தலை­வர் என்­ப­தற்­கும் அப்­பால் சிவ­ஞா­ன­மா­கத் தீர்த்து வைக்­கும் பொறுப்பு எனக்­குள்­ளது. நீதி­மன்­றத் தீர்ப்பு வந்­த­தி­லி­ருந்து இந்­தச் சபை­யில் சட்­ட­ரீ­தி­யான அமைச்­ச­ரவை இல்லை.

அமைச்­ச­ர­வைப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்கு வடக்கு மாகாண ஆளு­நர், முத­ல­மைச்­ச­ரு­டன் பேச்சு நடத்­தி­னேன். அது வெற்­றி­ய­ளித்­தி­ருக்­க­வில்லை. ஆனா­லும் இப்­போ­துள்ள இந்த நிலமை தொட­ர­வேண்­டுமா என்­பதை அனை­வ­ரும் சிந்­திக்க வேண்­டும்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மீண்­டும் ஒரு தடவை நீதி­மன்­றப்­படி ஏறு­வதை நான் விரும்­ப­வில்லை. இந்­தச் சபை­யும் ஏற்­றுக் கொள்­ளாது என்று நம்­பு­கின்­றேன். எதிர்­வ­ரும் 18ஆம் திக­திக்கு முன்­ன­தாக (நீதி­மன்ற வழக்­குத் தவணை) அமைச்­ச­ரவை விட­யத்­துக்கு சுமு­கத் தீர்வு காணப்­ப­ட­வேண்­டும்.

முத­ல­மைச்­ச­ரி­டம் நான் ஏற்­க­னவே முன்­வைத்த யோச­னை­யைத்­தான் திரும்­ப­வும் கூறு­கின்­றேன். அனைத்து அமைச்­சர்­க­ளும் பதவி வில­கு­கின்­றார்­கள் என்று ஆளு­ந­ருக்கு கடி­தம் கொடுங்­கள். புதிய அமைச்­ச­ர­வை­யின் பெய­ரை­யும் குறிப்­பிட்டு அடுத்த கடி­தத்தை வழங்­குங்­கள். இந்­தப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டும்.

இப்­ப­டிச் செய்­வ­தால், டெனீஸ்­வ­ரன் தனது நிலு­வைப் பணத்­தைக் கேட்­பார் என்று நீங்­கள் யோசிக்­கத் தேவை­யில்லை. தான் அந்­தப் பணத்­தைக் கேட்­க­மாட்­டேன் என்று டெனீஸ்­வ­ரன் உறுதி வழங்­கி­யுள்­ளார்.

அவர் இப்­போது சபை­யில் இருக்­கின்­றார். அவர் அதனை மறு­த­லிக்­க­வில்லை. எனவே முத­ல­மைச்­சர் தாம­த­மின்றி இத­னைச் செய்­ய­வேண்­டும். இந்த விட­யத்­தின் தொடர் நட­வ­டிக்­கை­களை நான் கண்­கா­ணிப்­பேன் – என்­றார்.

You might also like