நீர்த் தேக்­கத்­தை­யும் விட்­டு­ வைக்­காத – பெரும்­பான்மை­யி­னர்!!

வவு­னி­யா­வில் குடி­தண்­ணீர்த் தேவை­க்­காக அமைக்­கப்­ப­டும் நீர்த் தேக்­கத்­தி­லும் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் மீன் பிடி நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டுள்­ள­னர். இத­னால் அந் நீர்த் தேக்­கம் பாதிக்­கப்­படும் என்று மக்­கள் அஞ்­சு­கின்­ற­னர்.

வவு­னியா சாஸ்­தி­ரி­கூ­ழாங்­கு­ளம் பகு­தி­யில் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யின் நிதி உத­வி­யின் கீழ் வவு­னியா மக்­க­ளுக்­கான குடி­தண்­ணீர்த் தேவை­யைப் பூர்த்தி செய்­யும் வகை­யில் நீர் தேக்­கம் ஒன்று உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது.

நீர்ப் பாசன வடி­கா­ல­மைப்­புச் சபை­யின் மேற்­பார்­வை­யில் உரு­வாக்­கப்­பட்டு வரும் இந்­தத் திட்­டம் கிட்­ட­தட்ட 900 மில்­லி­யன் ரூபாய் நிதி­யில் அமைக்­க­பட்டு வரு­கின்­றது. நீர்த் தேக்­கம் இன்­னும் ஓரிரு மாதங்­க­ளில் பாவ­னைக்கு விடப்­ப­ட­வுள்­ளது.

இந்த நிலை­யில் வெளி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மீன­வர்­கள் வள்­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்தி அங்கு மீன் பிடி நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர் என்று அந்­தப் பகுதி மக்­கள் குற்­றஞ் சாட்­டி­னர்.
தடை செய்­ய­பட்ட தங்­கூசி வலை­க­ளைப் பயன்­ப­டுத்தி மீன் பிடி­யில் ஈடு­ப­டு­கின்­ற­னர். டைன­மற் பாவிக்­கப்­பட்­டும் மீன் பிடி நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.

இத­னால் மீன்­கள் இறந்து மிதப்­ப­து­டன் நீர் மாச­டை­கின்ற நில­மை­யும் ஏற்­ப­டு­கி­றது என்­றும் மக்­கள் தெரி­வித்­த­னர்.

‘‘குறித்த நீர் தேக்­கம் குடி தண்­ணீ­ருக்­காக மட்­டுமே அமை­க­்கப்­பட்டு வரு­கி­றது. வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளுக்கு இங்கு மீன் பிடி­யில் ஈடு­ப­டு­வ­தற்கு யார் அனு­மதி கொடுத்­த­னர். நீர்த்தேக்கம் அமைப்­ப­தற்­காக அத­னைச் சுற்றி­யுள்ள கிராம மக்­க­ளா­கிய நாங்­கள் எமது பூர்­வீக விவ­சா­யக் காணி­களை வழங்­கி­யுள்­ளோம். நீர்த் தேக்­கத்­தின் மூலம் நன்மை கிடைப்­ப­தாயின், அதன் பயனை அனு­ப­விப்­ப­தா­யின் அது நாங்­கள் தான் அனு­ப­விக்க வேண்­டும். சகோ­தர இனத்­தைச் சேர்ந்­த­வர்­கள் இங்கு வந்து எமது பெண்­க­ளு­டன் தவ­றாக நடக்க முற்­ப­டும் சந்­தர்ப்பங்­க­ளும் பல இடம்­பெற்­றுள்­ளன. எனவே குறித்த நீர்­தேக்­கத் தைப் பாது­காக்க அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் இது இரு சமூ­கத்­துக்கும் இடை­யி­லான பிரச்­சி­னை­ யாக உரு­வாக முன்னர் தீர்க்கப்­பட வேண்­டும் ” என்­ற­னர்.

இது தொடர்­பாக நீர் வழங்­கல் வடி­கா­ல­மைப்­புச் சபை­யின் பொறி­யா­ளர் உத­ய­சீ­ல­னி­டம் கேட்ட போது,

குறித்த நீர் தேக்­கத்­தில் மீன் பிடிப்­பதற் கான அனு­மதி ஒருபோதும் வழங்க முடி­யாது. மேற்­கு­றித்த சட்­டத்­துக்கு மாறான செயற்­பா­டு­கள் தொடர்­பாக நான் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளேன். வவு­னியா மாவட்­டச் செய­லருக்­கும் இது தெடர்­பா­கத் தெரி­ யப்­ப­டுத்தி, பொலிஸ் நிைல­யத்­தி­லும் முறைப்­பாடு பதிவு செய்­ய­வுள்­ளேன் –என்­றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close