நுண் நிதிக் கடன் தொல்லையைக் கட்டுப்படுத்துங்கள்!!

0 16

இலங்­கை­யின் நுண் நிதிக் கடன் நிறு­வ­னங்­க­ளின் தொல்லை விவ­கா­ரம் ஐக்­கிய நாடு­கள் அவை வரைக்­கும் எட்­டி­யுள்­ளது. ஐ.நாவின் சிறப்பு வல்­லு­ன­ரான ஜுவான் பப்லோ பொஹோஸ்­லவ்ஸ்கி நுண்­க­டன் நிறு­வ­னங்­க­ளால் பெண்­க­ளுக்கு ஏற்­ப­டும் பாதிப்­புக்­கள் குறித்து சுட்­டிக்­காட்­டி­ யி­ருக்­கி­றார்.

கடன்­கள் மற்­றும் மனித உரி­மை­கள் தொடர்­பாக ஐ.நாவில் பணி­யாற்­றும் சிறப்பு வல்­லு­நர் அவர். நீண்­ட­ கா­ல­மாக வடக்கு, கிழக்­கில் உள்­ள­வர்­க­ளால் குறிப்­பா­கப் பெண்­க­ளால் சுட்­டிக்­காட்­டப்­ப­டும் பிரச்­சி­னை­கள் குறித்து ஐ.நா. வல்­லு­ந­ரும் இப்­போது சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றார்.

30 ஆண்டு காலப் போரால் கடு­மை­யான பாதிப்­பைச் சந்­தித்த வடக்கு, கிழக்கு வாழ் மக்­கள் அதி­லி­ருந்து மீள்­வ­தற்­கும், உலக மய­மாக்­க­லுக்­கும் நுகர்­வுப் பண்­பாட்டு வேகத்துக்கும் ஈடு­கொ­டுப்­ப­தற்­கு­மாக கடன் பெறு­கி­றார்­கள்.

தமது வாழ்­வா­தா­ரத்­தை­யும் வாழ்க்­கைத் தரத்­தை­யும் உயர்த்­து­வ­தற்கு நடுத்­தர வர்க்­கத்­துக்­கும் நடுத்­த­ரத்­துக்­கும் குறைந்த வர்க்­கத்­தி­ன­ருக்­கும் கடன் வாங்­கு­வ­தைத் தவிர வேறு வழி­யில்லை. இதனை நன்கு உணர்ந்­துள்ள நுண் நிதிக் கடன் நிறு­வ­னங்­கள் வீடு வீடா­கச் சென்று தேனொ­ழு­கப் பேசி கடன்­களை வழங்­கி­விட்­டுச் செல்­கின்­ற­ன.

இந்த நிதி நிறு­வ­னங்­கள் சம்­ப­ளத்துக்கு நிய­மித்­துள்­ள­வர்­க­ ளுக்கு ஒவ்­வொரு மாத­மும் இலக்­கு­கள் முடிவு செய்­யப்­ப­டு­கின்­றன. அதா­வது குறிப்­பிட்ட தொகையை அவர்­கள் ஒவ்­வொரு மாத­மும் கட­னாக யாருக்­கா­வது வழங்­கி­யா­க­வேண்­டும்.

தமது இலக்கை எட்­டு­வ­தற்­காக எதை­யெ­தையோ மறைத்­தும் திரித்­தும் பிரச்­சி­னை­கள் ஏதும் வராது என்று பொய்­யு­ரைத்­தும் கடன்­க­ளைத் திணித்­து­விட்­டுச் செல்­கி­றார்­கள் பணி­யா­ளர்­கள். மாதாந்­தச் சம்­ப­ளம் பெறு­ப­வர்­கள் அல்­லாது ஒரு குழு­வா­கப் பெண்­களே தங்­க­ளுக்­குள் மாறி மாறி பிணை நிற்­பது இந்­தக் கடன் திட்­டத்­தின் பல­மும் பல­வீ­ன­மும்­கூட.

கடன்­க­ளைப் பெற்­றா­லும் அத­னைத் திரும்­பச் செலுத்­து­வ­தற்­கான போதிய வரு­மா­னம் இன்­மை­யால் குடும்­பங்­கள் சிக்­கல்­க­ளில் மாட்­டிக்­கொள்­கின்­றன. சிறு தொகைக் கடன்­தான் என்­றா­லும் தவ­ணைக் கட்­ட­ணத்­தைத் திரும்­பச் செலுத்த முடி­யாத நிலை­யில் அவர்­கள் பொறிக்­குள் அகப்­பட்­டுக்­கொள்­கின்­ற­னர்.

கடன் வசூ­லிக்க வரு­ப­வர்­கள் ஒரு கட்­டத்­திற்கு மேலே தொல்லை தரு­ப­வர்­க­ளாக மாறி­வி­டு­கின்­ற­னர். கடனை வசூ­லிப்­ப­தற்கு அவர்­கள் சாம, தான, தண்ட வழி­கள் அனைத்­தை­யும் உப­யோ­கிக்­கி­றார்­கள்.

இலங்கை மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் குமா­ர­சு­வாமி வடக்­குக்கு வந்­தி­ருந்­த­போ­தும் இந்­தப் பிரச்­சினை முக்­கி­ய­மாக அவ­ரி­டம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. நுண் நிதிக் கடன்­க­ளைத் தள்­ளு­படி செய்­ய­வேண்­டும் என்ற கோரிக்­கை­யும் முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால், அப்­ப­டிச் செய்­யப்­ப­ட­வில்லை.

இப்­போது அதிர்ச்­சி­யூட்­டும் வகை­யில் இந்த நுண் நிதிக் கடன் நிறு­வ­னங்­க­ளின் தவ­ணைக் கொடுப்­ப­னவு வசூ­லிப்­பா­ளர்­க­ளால் பெண்­க­ளுக்கு பாலி­யல் துன்­பு­றுத்­தல்­கள் இருப்­ப­தாக ஐ.நா. வல்­லு­நர் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

‘‘போரால் பாதிக்­கப்­பட்ட மற்­றும் வறு­மை­யில் வாடும் பெண்­கள் இந்த நுண் நிதி நிறு­வ­னங்­க­ளால் இலக்கு வைக்­கப்­ப­டு­வ­தாக அறி­கின்­றேன். எனவே பெண்­க­ளுக்கு எதி­ரான அநீ­தி­க­ளுக்கு எதி­ரான பன்­னாட்­டுச் சாச­னத்தை உரி­ய­மு­றை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு அர­சைக் கோரு­கின்­றோம். இது பொரு­ளா­தார ரீதி­யில் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுக்கு உத­வு­வ­தாக இருக்­கும்’’ என்­றும் அவர் தெரி­வித்­தார்.

ஒரு காலத்­தில் மக்­க­ளின் வாழ்க்­கைத் தர உயர்­வுக்கு இந்த நுண் நிதிக் கடன் பெரி­தும் உத­வி­யது. அப்­போது அது கூட்­டு­ற­வுத்­து­றை­யூ­டா­கச் செயற்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. எப்­போது அது பெரு வணிக நிறு­வ­னங்­க­ளி­டம் கைமாற்­றப்­பட்­டதோ அப்­போதே பிரச்­சி­னை­யும் ஆரம்­ப­மா­கி­விட்­டது.

லாபம் ஒன்றே குறிக்­கோள் என்று செயற்­ப­டும் பெரு வணிக நிறு­வ­னங்­கள் எத்­த­கைய சுரண்­டல்­க­ளுக்­கும் தயா­ராக இருப்­ப­தன் கார­ணத்­தால் இந்­தப் பிரச்­சினை பாலி­யல் தொல்லை வரை விரி­வாக்­கம் கண்­டுள்­ளது.

அரசு இதன் மீது உட­ன­டிக் கவ­னம் செலுத்தி இந்­தப் பிரச்­சி­னைக்கு ஒரு தீர்வு காண­வேண்­டும். பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் வடக்கு கிழக்­கி­லேயே அதி­கம் உள்­ள­னர் என்­கிற அடிப்­ப­டை­யில் வழக்­கம்­போல இந்த விட­யத்­தை­யும் கண்­டு­கொள்­ளா­மல் விடா­மல், உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.

You might also like