side Add

பசு வதைக்கு எதிராகக் கொக்கரிப்போருக்கு…!

2018ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­க­ளுக்­குப் பிறகு, இறைச்சி விற்­ப­னைக்­குத் தடை, மாடு வெட்­டத் தடை என்று பல வகை­யான போராட்­டங்­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. சில பிர­தேச சபை­கள் இறைச்சி விற்­ப­னைக்­குத் தடை­யும் விதித்­துள்­ளன.

இருந்தும், இந்த வீணர்­க­ளின் கொக்­க­ரிப்பு ஓய்ந்­த­தாக இல்லை. கட்­டாக் காலி­க­ளின் தொல்­லை­யும் ஓய்ந்­த­தாக இல்லை. விவ­சா­யத்தை மட்­டும் நம்பி வாழும் விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தையே அழித்து விடு­கின்­றன கட்­டாக் காலி­கள். இதை எல்­லாம் இந்த அகிம்­சா­வா­தி­கள் கண்­டு­கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை.

இவர்­க­ளின் பொழு­து­போக்­குத்­தான் இந்­தக் கொக்­க­ரிப்பு. சில பிர­தேச சபை­க­ளும் இந்த வீணர் கூட்­டத்­தின் பங்­கா­ளி­க­ளா­கவே இருக்­கின்­றன. நிலமை இவ்­வாறே போனால், அழி­வு­க­ளைச் சந்­திக்­கின்ற விவ­சா­யி­கள் பட்­டி­னிச் சாவைச் சந்­திக்க வேண்­டி­ய­து­தான். இந்­தக் கூட்­டத்­தி­ன­ருக்­குப் பின்­னால், சில அர­சி­யல்­வா­தி­க­ளும், சம­ய­வா­தி­கள் பல­ரும் இருப்­ப­து­தான் வேடிக்­கை­யானதா­கும்.

ப.யேசு­பா­தம் – வட்­டக்­கச்சி

You might also like