பதவி துறந்தவர்களுக்கு எதிராக 11 முறைப்பாடுகள்!!

பதவியை இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முறைப்பாடுகளில் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 7 முறைப்பாடுகளும், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக ஒரு முறைப்பாடும், அசாத் சாலிக்கு எதிராக மூன்று முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்று இறுதி நாளாக இருப்பதால் இன்றைய நாளிலும் முறைப்பாடுகள் பதியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like