பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து- 29 பேர் உயிரிழப்பு!!

50 க்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்த பேருந்து 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 29 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இந்தியாவிலுள்ள ஆக்ரா அருகே இடம்பெற்றுள்ளது.

லக்னோவில் இருந்து டெல்லி நோக்கிப் பயணித்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரா யமுனா அதிவிரைவுச்சாலை அருகே தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 15 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், படுகாயமடைந்த 20 க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

You might also like