பாகிஸ்­தானை தோற்­க­டித்­தது நியூ­சி­லாந்து

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான ஒரு­நாள் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற முத­லா­வது ஆட்­டத்­தில் 47 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றது நியூ­சி­லாந்து அணி.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற நியூ­சி­லாந்து அணி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர்­மா­ னித்­தது. அந்த அணி நிர்­ண­யிக் கப்­பட்ட 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 9 இலக்­கு­களை இழந்து 266 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக ரெய்­லர் 80 ஓட்­டங்­க­ளை­யும், லாதம் 68 ஓட்­டங்­க­ளை­யும், முன்றோ 29 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் அப்­ரிடி, சடப் கான் இரு­வ­ரும் தலா 4 இலக்­கு­க­ளை­யும், இமாட் வசிம் ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய பாகிஸ்­தான் அணி 219 ஓட்­டங்­க­ளுக்­குச் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 47 ஓட்­டங்­க­ளால் தோல்­வி­ய­டைந்­தது. அதி­க­பட்­ச­மாக சர்­பி­ராஸ் அக­மட் 64 ஓட்­டங்­க­ளை­யும், இமாட் வசிம் 50 ஓட்­டங்­க­ளை­யும், இமாம் உல் ஹக் 34 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் போல்ட், பேர்­கு­சன் இரு­வ­ரும் தலா 3 இலக்­கு­க­ளை­யும், கிரான்ட்­கோம் 2 இலக்­கு­க­ளை­யும், சவுத்தி, சொட்கி இரு­வ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.
தொட­ரில் மூன்று ஆட்­டங்­கள். முத­லா­வது ஆட்­டத்­தில் நியூ­சி­லாந்து அணி வெற்­றி­பெற்­றுள்ள கார­ணத்­தால் அடுத்த இரண்டு ஆட்­டங்­க­ளி­லும் வெற்­றி­பெற்­றால் மட்­டுமே கிண்­ணம் வெல்ல முடி­யும் என்ற நெருக்­கடி பாகிஸ்­தா­னுக்கு ஏற்­பட்­டுள்­ளது. அதே­ நே­ரம் அடுத்த இரண்டு ஆட்­டங்­க­ளில் ஏதே­னும் ஓர் ஆட்­டத்­தில் வெற்­றி­பெற்­றா­லேயே பாகிஸ்­தான் அணி­யால் கிண்­ணம் வெல்ல முடி­யும்.

போல்ட் ஹற்­றிக்
இந்த ஆட்­டத்­தில் நியூ­சி­லாந்து அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர் போல்ட் ஹற்­றிக் படைத்­தார். ஆட்­டத்­தின் மூன்­றா­வது பந்­துப்­ப­ரி­மாற்­றத்தை வீசிய அவர், சமன், அசாம், ஹபீஸ் ஆகி­யோரை 2ஆவது, 3ஆவது, 4ஆவது பந்­து­க­ளில் வீழ்த்தி ஹற்­றிக் படைத்­தார்.

You might also like