பாகு­பா­டு­க­ளால் மழுங்­க­டிக்­கப்­ப­டும்- மக்களாட்சி!!

ஒரு சிங்­கள ரோமன் கத்­தோ­லிக்­க­ரான அப்­போது வவு­னி­யா­வின் பாது­காப்பு படைக் கெமாண்­டர், அப்­போ­தி­ருந்த தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­துக்கு ஒரு கடி­தம் எழு­தி­னார். அவர் வவு­னி­யா­வில் உள்ள எமது மூத்த தமிழ் உத்­தி­யோ­கத்­தர்­களை நீக்­கு­மாறு கோரி­னார். அத்­து­டன் உதவி மாவட்­டச் செய­லர்­கள் போன்ற அனைத்து சிங்­க­ள­வர்­கள் அல்­லாத உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் நீக்­கப்­பட வேண்­டும் என்­றும் கோரி­னார். இந்த நட­வ­டிக்கை, ஒரு தெளி­வான அதி­கா­ர முறை­கேடு என்­பது ஒரு புற­மி­ருக்க, மக்­க­ளின் வாக்­க­ளிப்­ப­தற்­கான உரி­மை­க­ளுக்­கும் தேர்­தல் ஆணைக்­கு­ழு­வின் சேவை­க­ளுக்­கும் மொழி மற்­றும் கலா­சார ரீதி­யான தடை­களை ஏற்­ப­டுத்­தி­யது. நாங்­கள் அதற்கு இணங்­க­வில்லை.

அத்­த­கைய சில அர­சி­யல் குறுக்­கீ­டு­க­ளின் கார­ண­மாக சில மாவட்­டச் செய­லர்­கள், 2015 ஆம் ஆண்­டில் தேர்­த­லின் போது எங்­க­ளைத் தோல்­வி­ய­டை­யச் செய்­தார்­கள். ஆட்­சி­யி­லி­ருந்த கட்சி பிர­தான தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்­க­ளி­டம் வாக்­கா­ளர்­க­ளின் தக­வல்­க­ளைக் கோரிய போது, வடக்கு கிழக்­கி­ லுள்ள பல மாவட்­டச் செய­லர்­கள் அத்­த­க­வல்­க­ளைக் கோரி எமது அலு­வ­லர்­க­ளுக்கு அழுத்­தம் கொடுத்­த­னர். ஒரு துணிச்­சல்­மிக்க அலு­வ­லர் அதனை நிரா­க­ரித்­த­த­னால் இந்த முறை­கேடு வெளிச்­சத்­துக்கு வந்­தது.

கால­னித்­து­வத்­திற்­கான எமது நான்­கா­வது
அலை சன­நா­ய­கத்­தைச் சீர­ழித்­துள்­ளது

சான்று
இவை அனைத்­தும் என்­னால் கற்­ப­னை­யாக உரு­வாக்­கப்­பட்­டவை என்று நிரா­க­ரிக்­கப்­பட முடி­யும். எவ்­வா­றா­யி­னும், இந்த இன­வாத குடி­யேற்­றம் செய்­த­வர்­க­ளின் இரண்­டா­வது பிரச்­சினை சதித்­திட்­டத்­தன்மை கொண்­டது. தமி­ழர்­களை இட­மாற்­று­வது என்ற பாது­காப்பு படை­க­ளின் தள­ப­தி­யின் மூல­மான அந்த ஆவண விசா­ரணை, நிரா­க­ரிக்­கப்­பட முடி­யா­தா­தா­கும். வாக்­கா­ளர் இடாப்­புக்­கள் மற்­றொரு ஆவண விசா­ர­ ணைக்­கான சான்­று­க­ளா­கும்.

வாக்­கா­ளர் இடாப்­புக்­கள் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான அறி­விக்­கப்­ப­டாத போருக்­கான சான்­று­க­ளா­கும். சிங்­கள குடி­யி­ருப்­பா­ளர்­கள் உள்ளே அழைத்து வரப்­பட்ட போது, தங்­க­ளது சொந்த வீடு­க­ளில் சுதந்­தி­ர­மாக மீள் குடி­யே­றிய தமி­ழர்­கள் அடித்­துத் துரத்­தப்­ப­டு­வதை இரா­ணு­வம் உறு­தி­செய்­தது. ஆனால் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான அறி­விக்­கப்­ப­டாத போரை தேர்­தல் ஆணைக்­கு­ழு­வின் பதி­வு­க­ளில் கண்டு கொள்ள முடி­யும். நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட குடி­யேற்­றங்­க­ளின் பின்­னர், அந்த குடி­யேற்­ற­வா­தி­ களை அவர்­க­ளின் வீட்டு முக­வ­ரி­கள் அக்­கு­டி­யேற்­றங்­க­ளில் இருப்­ப­தாக அவர்­களை வாக்­கா­ளர்­க­ளா­கப் பதி­வ­தற்கு தாங்­கள் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­தாக எனது உத்­தி­யோ­கத்­தர்­கள் கூறு­கின்­ற­னர்.

இது வவு­னியா மாவட்­டத்­தில் வவு­னியா தெற்கு பிர­தேச செய­லா­ளர் பிரி­வி­லுள்ள பிறப்­ப­மடு கிராம உத்­தி­யோ­கத்­தர் போகஸ்­வௌ­வின் கதை­யா­கும். 1989 ஆம் ஆண்­டில் 63 வாக்­கா­ளர்­க­ளைக் கொண்ட ஒரு முக்­கி­யத்­து­வ­மற்ற கலப்­புக் கிரா­ம­மாக இருந்து. 2000 ஆம் ஆண்­டில் முழு­மை­யா­கக் கைவி­டப்­பட்­டது. சிங்­க­ள­வ­ளர்­கள் மெது­மெ­து­வாக முழு­மை­யா­கக் குடி­யே­றி­ய­து­டன் திரு­மதி சால்ஸ் மாற்­றப்­பட்­ட­தன் பின்­னர் 2012 ஆம் ஆண்­டில் சிங்­க­ள­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் பாரிய வளர்ச்­சியை அவ­தா­னிக்க முடி­யும். 2017 ஆம் ஆண்­டில் அது இரண்­டா­கப் பிரிக்­கப்­பட்டு சில பகு­தி­கள் அநு­ரா­த­பு­ரத்­துக்கு மாற்­றப்­பட்­டி­ருப்­ப­த­னால் 2016 ஆம் ஆண்­டின் பின்­ன­ரான தக­வல்­கள் எனக்கு கிடைக்­க­வில்லை.

மறைக்­கப்­ப­டும் வவு­னியா தெற்கு கிரா­மங்­கள்
கிறிஸ்­த­வர்­கள் அரி­சிக்­காக மதம் மாறி­ய­வர்­கள் என்று கூறி கிறிஸ்­த­வர்­க­ளின் தேர்­தல் வேட்­பு­ரி­மை­யைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தன் மூலம் பல தேசி­ய­வா­தி­கள், மற்­றொரு வழி­யில் பாகு­பாடு காட்ட முயற்­சிக்­கின்­ற­னர். எனவே இது ஒரு ‘சிம்­மா­சன பௌத்­தர்­கள்’ யுக­மா­கும். அரச அதி­கா­ரத்­தைக் கைப்­பற்ற வேண்­டு­மா­யின், நாங்­கள் பௌத்­தர்­க­ளாக இருக்க வேண்­டும். கண்­டி­யின் தமிழ் நாயக்­கர் அர­சர்­கள் இந்­தக் கலையை மிக­வும் சிறப்­பா­கச் செய்­தார்­கள். அவர்­கள் தங்­கள் சொந்த இடங்­க­ளில் தமிழ் சைவர்­க­ளா­க­வும் வெளி­யில் பௌத்­தத்­தின் போச­கர்­க­ளா­க­வும் இருந்­தார்­கள்.

ரணில் இந்த சிம்­மா­சன சம­யத்­துக்கு முக்­கி­ய­மான இடம் வழங்­கு­வ­தாக வாக்­க­ளிக்­கி­றார்.

தனக்கு வெற்றி கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­காக திருப்­ப­தி­யில் கட­வுள்­க­ளுக்கு தனது பாரத்­துக்­குச் சம­னாக ஐம்­பொன் வழங்­கு­கி­றார்.
இத­னையே எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்­டா­ர­நா­யக, ஜேர்.ஆர். ஜய­வர்­தன ஆகிய இரு­வ­ரும் செய்­த­னர் – அங்­கி­லிக்­கன்­க­ளா­கப் பிறந்த வளர்ந்த அவர்­கள் பௌத்­தத்தை தழு­வி­னார்­கள். சிறிது காலத்­தில் ஆட்சி அதி­கா­ரத்­தைப் பெற்­றார்­கள்.

எவ்­வா­றா­யி­னும், பழைய சம­ய­மான இந்து மாதம் பல­வற்­றின் மீது ஆதிக்­கம் செலுத்­து­கின்­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒரு இந்து பக்­த­ரைப் போன்று தைக்­கப்­ப­டாத வேட்­டி­யும் தமி­ழர்­க­ளின் சால்­வை­யும் அணிந்து இந்­தி­யா­வில் வழி­பாட்­டில் ஈடு­ப­டும் போது படம் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. மகிந்த ராஜ­பக்ச இந்­துக் கோயில்­க­ளில் தேங்­காய் உடைப்­ப­தற்­கான எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தை­யும் தவ­ற­வி­டு­வ­தில்லை.

வடக்கு–கிழக்­கில் இந்­துக்­களை எதிர்க்­கும் இந்த கன­வான்­கள் எப்­போ­தும் இந்­தி­யா­வுக்­குச் சென்று இந்­துக்­க­ளைப் போன்று வழி­பாடு செய்­யு­ம­ள­வுக்கு ஏன் இந்து மதத்­தி­னால் கவ­ரப்­பட்­டுள்­ளார்­கள்? அவர்­க­ளு­டைய அர­சு­கள் ஏன் இந்­துக்­களை வேர­றுப்­ப­தற்­கும், அவர்­க­ளுக்கு வாக்­கு­ரி­மையை மறுப்­ப­தற்­கும், அவர்­க­ளு­டைய கோயில்­களை பௌத்த கோயில்­கள் என்று பெயர் மாற்­றம் செய்­வ­தற்­கும் முயற்­சின்­றன?

முடிவு
நாங்­கள் பாகு­பாட்­டுக்கு முடிவு கட்­டு­வோம். நாங்­கள் அனை­வ­ரும் நாங்­கள் விரும்­பும் மொழி­யைப் பேசு­வோம். எமது உண்­மை­யான சம­யத்­தைப் பின்­பற்­று­வோம். மக்­க­ளாட்சி வெற்­றி­ய­டைய வேண்­டு­மா­யின், சம­யம், மொழி வாழும் பிர­தே­சம் எது­வாக இருப்­பி­னும் அவற்­றைப் பொருட்­ப­டுத்­தாது திறமை மற்­றும் நேர்­மை­யின் அடிப்­ப­டை­யில் ஆட்­சி­யா­ளர்­க­ளைத் தெரிவு செய்­வ­தற்­கும் எங்­க­ளுக்கு அந்­தச் சுதந்­தி­ரங்­கள் தேவைப்­ப­டு­கின்­றன.

அதே­வேளை எமது ஆட்­சி­யா­ளர்­கள் தாம் பாகு­பா­டு­களை இல்­லா­தொ­ழிக்­கப் போவ­தா­கக் கூறும் போது அதனை இலங்­கை­யி­லுள்ள எவ­ருமே நம்­பு­வ­தில்லை. அவர்­கள் 30/1 தீர்­வுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக ஐக்­கிய நாடு­கள் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வின் முன்­னி­லை­யில் வாக்­கு­றுதி வழங்­கு­வ­தன் மூலம் ஒவ்­வொரு வரு­ட­மும் பொய்­யு­ரைக்­கி­றார்­கள். ஐக்­கிய நாடு­கள் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வால் இதனை காணா­மல் இருக்க முடி­யுமா? அல்­லது அவர்­க­ளது அமைப்­பும் எங்­க­ளுக்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஓர் ஏமாற்று வித்­தை­தானா?

பொய் கூறி­யது போதும்!! இந்த விட­யங்­கள் சிங்­க­ள­வர்­கள், தமி­ழர்­கள், முஸ்­லிம்­கள் ஆகிய அனைத்து இலங்­கை­யர்­க­ளும் கவ­னம் செலுத்த வேண்­டிய விட­யங்­க­ளா­கும். அவ்­வா­றில்­லா­வி­டால் தண்­டனை விடு­பாட்­டு­ரி­மை­யு­டன் எங்­க­ளைக் கொல்­வ­தற்­கும் எங்­க­ளில் சிறந்­த­வரை தேர்­தல் ஆணை­யா­ளர் நாய­க­மாக நிய­மிப்­ப­தைத் தடுப்­ப­தற்­கும் எமது ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு அதி­கா­ர­ம­ளிக்க விரும்­பு­கி­றோம் என்­பதே அதன் அர்த்­த­மா­கும்.

You might also like