பாதாளசாக்கடை திட்டம் தொடர்பாக கலந்தாய்வு!!

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பாதாளசாக்கடை திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

கலந்துரையாடலில் நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் பிரதம பொறியியலாளர் விஜயகாந்த், பாதாளசாக்கடைத் திட்டத்திற்கான நிதி வழங்குனர்களின் சார்பில் அதன் பிரதிநிதிகள், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பிரதம பொறியியலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like