side Add

பாதை­யில் பய­ணிக்­கும் ­போது- எச்­ச­ரிக்கை உணர்­வோடு செயற்­ப­டல் சிறப்பு!!

கடந்த சில ஆண்­டு­க­ளாக வட­ப­கு­தி­யில், குறி்ப்­பாக குடா­நாடு உட்­பட்ட வட­க்கு மா­கா­ணத்­தின் ஏனைய மாவட்­டங்­க­ளி­லும் மோட்­டார் சைக்­கிள் விபத்­துக்­கள் கார­ண­மாக பலர் உயி­ரி­ழக்க நேர்ந்­த­து­டன், பலர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­க­வும், தமது உடல் அவ­ய­வங்­களை இழக்­க­வும் நேர்ந்­தது. அவற்­றி­லும், குறிப்­பாக இள­வ­ய­துக்காரர்­கள் செலுத்­திச் சென்ற மோட்­டார் சைக்­கிள்­கள் விபத்­துக்­க­ளில் சிக்­கி­யமை பற்­றியே அதி­கம் கேள்­விப்­பட்டுள்­ளோம்.

அத்­த­கைய சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்­லாம் கட்­டுப்­பா­டற்ற வேகத்­தில் மோட்­டார் சைக்­கிள்­க­ளைச் செலுத்தி விபத்­துக்­க­ளில் சிக்­கிக்­கொண்­டோர் பற்றி ஒரு புறம் அனு­தா­பப்பட்டாலும், அத்­த­கை­யோ­ரின் பொறுப்­பற்ற செயற்­பாடு குறித்து மன­துக்­குள் திட்­டித் தீர்த்­த­து­டன், அந்த இளை­யோ­ருக்கு மோட்­டார் சைக்­கிள் வாங்­கிக் கொடுத்து அவர்­க­ளைக் கெட்­டுக் குட்­டிச் சுவ­ராக்­கக் கார­ண­மா­கும் அவர்­க­ளது பெற்­றோர்­க­ளை­யும் மன­துக்­குள் வைது தீர்த்­துள்­ளோம்.

ஆனால் இன்­றைய கால­கட்டத்­தில் இயந்­தி­ர­மா­கி­விட்ட வாழ்க்­கைச் சூழ­லில், தொழில் நிமித்­த­மும், தமது அவ­சிய தேவை­க­ளுக்­கும் இள­வ­ய­துக்­கா­ரர்­கள் மோட்­டார் சைக்­கிள்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தால் அவர்­க­ளது தேவை­களை இல­கு­வா­க­வும் கால விர­ய­மின்­றி­யும் நிறை­வேற்­றிக்­கொள்ள முடி­கி­றது.

இவை ஒரு புற­மி­ருக்க எமது சிறு பரா­யத்­தில் இர­வில் வீட்­டுக்கு வெளி­யில் நாய்­கள் தொடர்ந்து ஊளை­யிட்­டால், எமது பாட்டி எவ­ரதோ உயி­ரைக் கவர்ந்து செல்­வ­தற்­காக யம­கிங்­கரர்­கள் வரு­வதே அறி­கு­றியே அது என எம்­மைப் பய­மு­றுத்­து­வ­துண்டு. நாங்­க­ளும் அப்­பா­வி­கள் போன்று, கதவை இறுக்­கிப் பூட்­டிக் கொண்டு அறைக்­குள் இருந்து விட்­டால் யம­கிங்­க­ரர்­க­ளால் எம்மை எதுவும் செய்­ய­மு­டி­யாதே என்று பதி­லுக்கு பாட்­டிக்கு மறுத்­தான் விடு­வ­துண்டு.

போருக்­குப் பின்­னர் வட மாகாணத்­தின் பெருந்­தெ­ருக்­கள் மட்­டு­மன்றி தரங்­க­ளில் குறைந்த வீதி­க­ளும், மகிந்த அர­சின் பத்து வீதம் (Ten percent) அமைச்­ச­ரால் திறம்­பட புன­ரமைப்­புக் கண்­டுள்­ளன என்­பது உண்­மையே. அமைச்­சர் ரென் பேர்சன்ட்,எதை இலக்­காக வைத்து வீதிப் புன­ர­மைப்­புக்­க­ளைத் திறம்­ப­டச் செய்­தாரோ என்­னமோ, அது எமது மோட்­டார் சைக்­கிள் ஓட்­டி­க­ளுக்கு தமது பய­ணங்­களை உற்­சா­க­மா­க­வும், விரை­வா­க­வும் மேற்­கொள்ள வாய்ப்பை ஏற்­படுத்திக் கொடுத்­துள்­ளது.

டிப்­பர் வாக­னங்­கள் எத்­த­கைய பயன்­பாட்டை நோக்­கா­கக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­பி­னும், வட மாகாண வீதி அபி­வி­ருத்­திப் பணி­கள் மகிந்த அர­சால் மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தை­ ய­டுத்தே அவை வட­ப­குதி வீதி­க­ளில் பெருந்­தொ­கை­யாக கடும் வேகத்­தில் பய­ணிப்­பது மட்­டு­மன்றி, பாத­சா­ரி­கள், மிதி­வண்­டி­க­ளில் பய­ணிப்­போர், மோட்­டார் சைக்­கிள்­க­ளில் பய­ணிப்­போர் என்ற வேறு­பாடு எது­வு­மின்றி முட்டி மோதித்­தள்­ளிப் பந்­தா­டி­வி­டு­கின்­றன.

வவு­னியா ஓமந்தையில் நேற்றுமுன்­தி­னம் மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்த இளை­ஞ­ரொ­ரு­வரை டிப்­பர் வாக­னம் முட்டி மோதிப் பந்­தா­டி­ய­தில் அவ­ரது ஒரு கால் தொடை­யு­டன் துண்­டிக்­கப்­பட்­டது என்­பது ஆகப்­பிந்­திய விபத்­துச் செய்­தி­யொன்று. இவற்றை நோக்­கும் போது, பாதை­யில் பய­ணிக்­கும்­போது எதிர்்த்­தி­சை­யி­லி­ருந்தோ பின்­பு­ற­மா­கவோ டிப்­பர் வாக­ன­மெ­து­வும் வரு­வ­தைக்­கண்­டால் எம­கிங்­க­ரர்­கள் பாசக்­க­யிற்­று­டன் வரு­வ­தாக எண்ணிக்கரை யொதுங்கி எமது பாது­காப்பை உறுதி செய்ய முயல்­வது புத்­தி­சா­லித்­த­ன­மா­கப்படு­கி­றது. ப.சிவம்

You might also like
X