பாம்பு படத்தில் ராகவா லாரன்ஸ்!!

இதுவரை பேய்க்கதைகளை காமெடி மற்றும் த்ரில் கலந்து இயக்கி வந்த ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பேயை கைவிட்டு பாம்புகளை தனது படத்தில் இணைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது

ராகவா லாரன்ஸ் இயக்கவுள்ள அடுத்த படத்துக்கு ‘கால பைரவா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலும் அவரே முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். பாம்பு பாத்திரத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார்.

ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா’ திரைப்படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அவர் ‘காலபைரவா’ படப்பிடிப்பைத் தொடங்குவார்.

இந்தப் படத்திலும் அவருடைய முக்கிய நட்சத்திரங்களான கோவை சரளா,தேவதர்ஷினி, ஸ்ரீமான், ஆகியோர் நடிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like