பிரசவத்துக்கு சைக்கிளில் சென்ற அமைச்சர்!!

நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த பென் அமைச்சர் ஒருவர்  தனது பிரசவத்துக்காக மருத்துவமனைக்குத் துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

நியூஸிலாந்தின் இணை போக்குவரத்து துறை அமைச்சரான 38 வயதுடைய ஜூலி அன்னே ஜென்டர் தனது முதல் பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

வீட்டிலிருந்து சுமார் ஒரு கி. மீ தூரம் துவிச்சக்கர வண்டியில் சென்ற அவர்,  செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

ஜூலியின் மன தைரியத்தை பாராட்டி  பெண்கள் பலர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

You might also like