பிறந்­த­நாள் கொண்­டாடிய வாள்­வெட்­டுக் குழு மடக்கிப் பிடிப்பு!!

வாள்­வெட்­டுக் குழு­வைச் சேர்ந்த ஒரு­வ­ரது பிறந்த நாள் கொண்­டாட்­டத்­தின் போது வாள்­வெட்டு வன்­மு­றை­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற குற்­றச்­சாட்­டில் 9 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

மானிப்­பாய் மற்­றும் நவா­லிப் பகு­தி­க­ளில் வைத்து அவர்­கள் 9 பேரும் நேற்­றுச் சனிக்­கி­ழமை மாலை கைது செய்­யப்­பட்­ட­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

‘தனு ரொக்­கின் பிறந்த நாள் என்ற தக­வல் அறிந்த யாழ்ப்­பா­ணம் மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் தினேஸ் கரு­ணா­ரத்­ன­வின் கீழ் இயங்­கும் சிறப்பு பொலிஸ் பிரி­வி­னர் மானிப்­பாய் பகு­தி­யில் சிவில் உடை­யில் கள­மி­றக்­கப்­பட்­ட­னர். மானிப்­பா­யில் தனு ரொக்­கின் வீடு அமைந்­துள்ள பகு­திக்கு பின்­பக்­க­மாக உள்ள குளக்­கட்­டுப் பகு­தி­யில் பிறந்த நாள் கொண்­டா­டிய ஐந்து பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அத­னை­ய­டுத்து நவாலி வயல் வெளி­யில் பகு­தி­யில் வைத்து தனு ரொக்­கின் மற்­றொரு பகு­தி­யி­னர் பிறந்த நாள் கொண்­டா­டிய போது நான்கு பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளில் தனு ரொக்­கும் அடங்­கு­வார். கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் இரு­வ­ருக்கு மட்­டும் நீதி­மன்­றங்­க­ளில் வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளன. அவர்­கள் இரு­வ­ரும் தலை­ம­றை­வா­கிய நிலை­யில் தேடப்­பட்டு வந்­த­னர். கைது செய்­யப்­பட்ட 9 பேரும் விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பின் மானிப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வார்­கள்’ என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

இதே­வேளை, வாள்­வெட்­டுக் குழு­வின் உறுப்­பி­னர் என்று பொலி­ஸா­ரால் கூறப்­ப­டும் மனோஜ் என்­ப­வ­ரு­டைய பிறந்த தினத்தை கடந்த புதன்­கி­ழமை யாழ்ப்­பா­ணம் நல்­லூ­ரில் உள்ள விடுதி ஒன்­றில் கொண்­டா­டிய போது, பொலி­ஸார் சுற்­றி­வ­ளைத்­த­னர். பொலி­ஸா­ரால் தேடப்­பட்­ட­வர்­கள் தப்பி ஓடிய நிலை­யில் ஐவர் மட்­டும் கைது செய்­யப்­பட்டு பின்­னர் விடு­விக்­கப்­பட்­ட­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like