side Add

பிறப்­ப­தற்கு ஆபத்­தான இட­மாக -மாற்­ற­ம­டை­கி­றது தென்னாசியா!!

பிறந்து சொற்ப நாள்­க­ளுக்­குள்­ளாக இறக்­கும் குழந்­தை­க­ளின் வீதம் உயர்­வாக உள்ள தென்­னா­பி­ரிக்க நாடு­க­ளைப் போன்று தற்­போது தெற்­கா­சி­யா­வும் மாறி வரு­கின்­றது என்று யுனி­செப் நிறு­வ­னத்­தின் தெற்­கா­சி­யப் பிராந்­தி­யப் பணிப்­பா­ள­ரான ஜீன் கோஹ் தெரி­வித்­தார்.

இந்த விட­யம் தொடர்­பாக அவர் விடுத்­துள்ள விவ­ரக் குறிப்­பொன்­றி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-:

தெற்­கா­சியா பிறப்­ப­தற்கு ஆபத்­தான பிராந்­தி­ய­மா­கத் தற்­போது இருக்­கின்­றது. பிராந்தி­ யத்­தில் 2018ஆம் ஆண்டு பிறந்த குழந்­தை­க­ளின் சுமார் 10 இலட்­சம் குழந்­தை­கள் ஒரு மாதத்தை அடை­யும் முன்­னர் உயி­ரி­ழந்­துள்­ளன.

ஒவ்­வொரு குழந்­தை­யின் உயி­ரி­ழப்­பும் குடும்­பத்­தி­ன­ருக்கு ஒரு இடரே. கடந்த ஆண்டு பன்­னாட்டு ரீதி­யில் பிறந்த சொற்ப நாள்­க­ளில் இறந்த குழந்­தை­க­ளின் எண்­ணிக்­கை­யில் தெற்­கா­சி­யா­வின் எண்­ணிக்கை 40 சத­வீ­த­மா­கும். பிறக்­கும் குழந்­தை­கள் சொற்ப நாள்­க­ளில் இறக்­கும் அபா­யம் ஆபி­ரிக்­கா­வின் தென்­பி­ராந்­திய நாடு­க­ளைப் போன்றே தெற்­கா­சி­யா­வி­லும் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது.

பெண்­கள் 20 வயதை அடை­யும் வரை கருத்­த­ரிப்­ப­தைத் தவிர்ப்­ப­தன் ஊடாக பிறந்து சொற்ப நாள்­க­ளில் குழந்­தை­கள் இறப்­பதை குறைக்க முடி­யும். மருத்­துவ நிலை­யங்­க ­ளும், மருத்­து­வ­ம­னை­க­ளும் போதி­ய­ள­வில் இல்­லாது இருப்­ப­தும், உரிய நேரத்­துக்­குக் கர்ப்­பி­ணி­களை மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­வ­தற்­கான போக்­கு­வ­ரத்து வச­தி­கள் தெற்­கா­சி­யா­வில் இன்­மை­யும் இந்த நிலமைக்­கான முக்­கிய கார­ணங்­க­ளாக இருக்­கின்­றன.

உயிர்­வாழ்­வ­தற்­கான உரிமை ஒவ்­வொரு குழந்­தைக்­கும் உள்­ளது. புது வரு­டத்­தில் தெற்­கா­சி­யக் குழந்­தை­கள் அவர்­க­ளுக்கு உரித்­தான கவ­னத்­தைப் பெறு­வார்­கள் என்று வாழ்த்­து­கின்­றேன். ஒவ்­வொரு புதிய குடும்­ப­மும் ஆரோக்கி­ய­மான குழந்­தை­ க­ளைப் பெற்று மகிழ்ச்­சி­யாக வாழ வேண்­டும். – என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

You might also like