side Add

புதிய அமைச்சர்கள் நியமனம்!!

புதிய அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள் இருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்களாக ரவீந்திர சமவீர (தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு), வி.ராதாகிருஷ்ணன்(சிறப்பு பிரதேச அபிவிருத்தி அமைச்சு ) ஆகியோரும், பிரதியமைச்சராக அப்துல்லாஹ் மஹ்ரூப்பும்(- துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

You might also like