புதிய அரசமைப்பு உருவாக்கமும் ஆட்சியாளர்களின் கலக்கமும்

0 367

ஒற்­றை­யாட்சி, பெளத்த மதத்­துக்கு முன்­னு ­ரிமை ஆகி­ய­வற்­றைத் தூக்­கிப்­பி­டிப்­பதே பெளத்த மகா­நா­யக்­கர்­க­ளின் வேலை­யா­கப் போய்­விட்­டது. இவை­யி­ரண்­டு­ட­னும் சிங்­க­ளத்­தை­யும் சேர்த்­துப் பார்க்க வேண்­டும் என்­பதே அவர்­க­ளின் பெரு­வி­ருப்­பா­கும். இந்த மூன்­றும் இல்­லாத எதை­யும் ஏற்­றுக் கொள்­வ­தற்கு இவர்­கள் தயா­ரா­கவே இல்லை என்­பது வெளிப்­ப­டை­யான விட­ய­மா­கும்.

அண்­மை­யில் அஸ்­கி­ரிய மகா­நா­யக்­க­ரைச் சந்­தித்த அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல புதிய அர­ச­மைப்­பில் ஒற்­றை­யாட்­சிக்­கும் பெளத்­தத்­துக்­கும் உரிய இடம் அளிக்­கப்­ப­டும்­என்ற உறு­தி­மொ­ழியை வழங்­கி­யி­ருந்­தார்.

ஏனென்­றால் மல்­வத்து பீடத்­தின் மகா­நா­யக்­கர் நாட்­டைப் பிள­வு­ப­டுத்­தாத வகை­யி­லான அதி­கா­ரப் பகிர்­வுக்­குத் தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த நிலை­யில், அஸ்­கி­ரிய பீடத்­தின் மகா­நா­யக்­கர் இதற்கு முற்­றி­லும் எதி­ரான நிலைப்­பாட்­டைக் கொண்­டி­ருந்­தார்.

 

ஒற்­றை­யாட்­சி­யில் எந்­த­வி­த­மான மாற்­ற­மும் இருக்­கக் கூடாது என்­பது அவ­ரது உறு­தி­யான நிலைப்­பா­டா­கும். அவ­ருக்கு மேல­திக விவ­ரங்­க­ளைத் தெரி­வித்து அவ­ரது இணக்­கப்­பாட்­டைப் பெற்­றுக் கொள்­வதே அமைச்­ச­ரின் நோக்­க­மா­கக் காணப்­பட்­டது. ஆனால் இதில் அவர் வெற்­றி­பெற்­றாரா? என்­பதை இப்­போது கூற முடி­ய­வில்லை.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான
தமது நிலைப்­பாட்­டில் கூட்­ட­மைப்பு உறுதி

இதே­வேளை தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் தொடர்­பான இடைக்­கால அறிக்­கைக்­குத் தமது ஆத­ர­வைத் தெரி­வித்­துள்ளனர் என்று அமைச்­சர் கிரி­யெல்ல தெரி­வித்­துள்­ளமை ஏற்­றுக் கொள்ள முடி­யா­தது.

ஏனென்­றால் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மூன்று விட­யங்­க­ளில் பிடி­வா­த­மான நிலைப்­பாட்­டைக் கொண்­டி­ருக்­கின்­றது. வடக்­கும் கிழக்­கும் இணைக்­கப்­ப­டு­தல், வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­கள் மீளப்­பெற முடி­யா­த­வா­றான இறுக்­க­மான பொறி­முறை, மாகா­ணங்­க­ளுக்கு முழு­மை­யான நிதிச் சுதந்­தி­ரம் ஆகி­ய­வையே அந்த மூன்று விட­யங்­க­ளா­கும்.

ஆனால் இன­வா­தி­க­ளும் பெளத்த பீடங்­க­ளும் இவற்­றுக்­குத் தமது ஆத­ரவை வழங்­குமா? என்­பது முற்­று­மு­ழு­தான சந்­தே­கத்­துக்­கு­ரிய விட­ய­மா­கும்.
இந்த நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில் அரச தலை­வரோ அல்­லது தலைமை அமைச்­சரோ அர­சின் சார்­பான திட்­டங்­க­ளைச் சுதந்­தி­ர­மா­கச் செயற்­ப­டுத்த முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது.

இதற்­குப் பல தடை­களை இவர்­கள் தாண்ட வேண்­டி­யுள்­ளது. நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்­மைப் பலம் இருந்­தா­லும் கூட, சில விட­யங்­களை நிறை­வேற்­றிக் கொள்­வ­தில் தடை­கள் இருக்­கத்­தான் செய்­கின்­றன. குறிப்­பாக இன­வா­தத்­தையே தமது மூல­த­ன­மா­கக் கொண்டு செயற்­பட்டு வரு­கின்ற இன­வா­தி­க­ளைச் சமா­ளிப்­பது என்­பது தலை­வலி தரு­கின்ற விட­ய­மா­கவே மாறி­விட்­டது. பெளத்த பீடங்­க­ளும் தமது விருப்­பத்தை நிறை­வேற்­றிக் கொள்­வ­தற்­காக ஆட்­சி­யா­ளர்­கள் மீது­அ­ழுத்­தங்­க­ளைப் பிர­யோ­கித்து வரு­கின்­றன. ஒற்­றை­யாட்­சி­யை­யும் பெளத்­தத்­தை­யும் முன்­னி­லைப்­ப ­டுத்­து­வ­தில் இவை விடாப் பிடி­யாக நிற்­கின்­றன.

தமிழ் மக்­க­ளது அபி­லா­சை­களை தென்­ப­குதி மக்­கள் கணக்­கில் எடுக்­காத போக்கு

தமிழ் மக்­கள் தமது உரி­மை­க­ளைப் பெறு­வ­தற்­காக நடத்­திய சகல போராட்­டங்­க­ளும் தற்­போது மறக்­க­டிக்­கப்­பட்­டு­விட்­டன. ஆயு­தப் போராட்­டத்­தைக் கூட மறந்­து­விட்­ட­னர். இன்­னொரு ஆயு­தப் போராட்­டம் உரு­வா­வதை விரும்­பு­ வது போன்றே தெற்­கில் உள்­ள­வர்­க­ளது செயற்­பா­டு­கள் அமைந்­துள்­ளன.

தமி­ழர்­கள் இப்­போது தனி­நாடு கேட்­க­வில்லை. நாட்­டைப் பிள­வு­ப­டுத்­து­வ­தற்­கும் அவர்­கள் விரும்­ப­வில்லை.
ஒன்­று­பட்ட நாட்­டில் சகல உரி­மை­க­ளை­யும் பெற்­ற­வர்­க­ளா­கவே தாம் வாழ வேண்­டும் என்­ப­தையே இவர்­கள் வலி­யு­றுத்­திக் கூறி வரு­கின்­ற­னர்.

ஆனால் ஒற்­றை­யாட்­சி­யின் கீழ் தமது உரி­மை­கள் நிலை­நாட்­டப்­பட முடி­யாது என்­ப­தை­யும் இவர்­கள் உணர்ந்­துள்­ள­னர். இத­னால்­தான் ஒற்­றை­யாட்சி என்ற பதத்தை இவர்­கள் விச­மெ­னக் கரு­து­கின்­ற­னர்.
கூட்­டாட்­சி­யைக் கோரி நிற்­கின்­ற­னர்.

இதே­வேளை தமி­ழர்­க­ளில் ஒரு சாரார் புதிய அர­ச­மைப்பு உரு­வா­கி­விட்­டால் தமது அர­சி­யல் பிழைப்­புக்­குப் பங்­கம் நேர்ந்­து­வி­டு­மென அஞ்­சு­கின்­ற­னர். புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் தொடர்­பா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் தீவி­ர­மா­கச் செயற்­பட்டு வரு­கின்­ற­னர்.

கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் தமது தள்­ளாத வய­தி­லும் பல­ரை­யும் சந்­தித்து புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பா­கக் கருத்­துப் பரி­மாற்­றம் செய்து வரு­கின்­றார். இதன் அவ­சி­யத்தை உணர்த்தி வரு­கின்­றார்.

இதன் கார­ண­மாக வெளி­நா­டு­கள் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் குறித்­துப் புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­தொரு சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. ஆனால் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­கள். கூட்­ட­மைப்­பைக் குறை கூறு­வ­தி­லேயே தமது நேரத்தை விர­யம் செய்து வரு­கின்­ற­னர்.

புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டு­விட்­டால் கூட்­ட­மைப்­பின் செல்­வாக்கு உயர்ந்­து­வி­டும், தமது நிலை தாழ்ந்­து­வி­டும் என இவர்­கள் நினைக்­கின்­ற­னர்.
தமிழ் மக்­கள் பேரவை ஏற்­க­னவே புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரித்­து­ விட்­டது. பேர­வை­யில் அங்­கம் வகிப்­ப­வர்­களை மக்­கள் நன்கு அறி­வார்­கள்.

தென்­ப­குதி மக்­கள் அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சியை ஆத­ரிக்க வேண்­டும்

இந்த நாடு அமை­தி­யா­க­வும் ஒற்­று­மை­யா­க­வும் இருக்க வேண்­டு­மெ­னத் தெற்­கில் உள்­ள­வர்­கள் விரும்­பு­வார்­க­ ளாக இருந்­தால், புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­கின்ற அர­சின் முயற்­சி­க­ளுக்கு முட்­டுக்­கட்டை போடாது தமது முழு ஆத­ர­வை­யும் வழங்க வேண்­டும். மகா­சங்­கத்­தி­னர் மனம் வைத்­தால் எல்­லாமே சுமு­க­மாக முடிந்­து­
வி­டும்.

அர­சைப் பொறுத்­த­வ­ரை­யில் மகா சங்­கத்­தி­ன­ரின் விருப்­பமே முதன்மை நோக்­கப்­ப­டு­கின்­றது. ஆகவே அவர்­கள் அர­சுக்கு உத­வு­வ­தில் பின்­நிற்­கக்­கூ­டாது. அகிம்­சை­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டிய அவர்­கள் இந்த நாட்­டில் அமைதி ஏற்­ப­ட­வும் உழைக்க வேண்­டும்.

இன­வா­தி­களை இவர்­கள் தீண்­டத்­த­கா­த­வர்­க­ளென ஒதுக்கி வைத்­து­விட்­டால் அதன் பின்­னர் எவ­ருமே அவர்­க­ளைக் கணக்­கில் எடுக்­க­மாட்­டார்­கள். ஆகவே நாட்­டின் உயர்­வும் தாழ்­வும் மகா சங்­கத்­தி­ன­ரின் கைக­ளி­லேயே உள்­ள­தென்­ப­தை­யும் எவ­ருமே மறந்­து­விட முடி­யாது.

அதே­வேளை தான் எதிர்­த­கொள்­ளும் தடைக­ளைத் தாண்டி உறு­தி­யாக நின்று செயற்­பட வேண்­டிய கட்­டா­யத்­தி­லும் அரசு உள்­ளது. வெறும் சாக்­குப்­போக்­கு­க­ளைக் கூறிக் கொண்­டி­ருப்­ப­தால் எது­வுமே நடக்­கப் போவ­தில்லை.

You might also like