side Add

புதிய வீதிகள்- மக்கள் பாவனைக்கு!!

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை ,குச்சவெளி, நிலாவெளி ஆகிய பகுதிகளில் புதிய வீதிகள் மற்றும் வடிகான்கள் மக்கள் பாவனைக்காக நேற்றுக் கையளிக்கப்பட்டன.

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அல்ஹாஜ் அப்துல்லா மஹரூப்பின் ஏற்பாட்டின் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

புல்மோட்டை மையவாடி கொங்ரீட் வீதி, ரஹ்மான் நகர் வடிகான், நாவலடி வடிகான் உட்பட குச்சவெளி ஜாயா நகர் கொங்ரீட் வீதி, இக்பால் நகர் புதுக் குடியிருப்பு வீதி வடிகான், இறக்கக் கண்டி பாடசாலை கொங்ரீட் வீதி, நிலாவெளி கோபால புரம், நிலாவெளி அடம்போடை கொங்ரீட் வீதிகள் என்பன மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ஹில்மி முகைதீன் பாவா, கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட், முன்பள்ளி பாலர் பாடசாலை திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் ஆதம்பாவா தௌபீக், பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் உட்பட குச்சவெளி பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், வட்டார உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

You might also like