புதையல் தேடிய மூவர் கைது!!

மொனராகல, குருஹெல பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மூவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

மொனராகல பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும், பூசைப் பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மொனராகல மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close