புத்தர் சிலையை அகற்ற தேரர்கள் எதிர்ப்பு!!

கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ சந்தியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்றுவதற்கு. தேரர்கள் சிலரும் பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

தங்கள் உயிரை கொடுத்தேனும் சிலை அகற்றும் நடவடிக்கையை நிறுத்துவதாக கூறி தேரர்கள் குழப்பம் ஏற்படுத்தினர்.

எனினும் சிலையை அகற்றுமாறு எந்தவொரு உத்தரவும் வழங்கப்படவில்லை என்று உறுதியாகிய பின்னர் தேரர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.

தற்போது அந்தப் பகுதிக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

You might also like