புலிக்கதை தொடரப் போகின்றது!!

0 19

அர­ச­னொ­ரு­வன் வேட்­டைக்­குப் புறப்­ப­டத் தயா­ரா­கின்­றான். தனது அமைச்­சரை அழைத்து, ‘‘இன்று மழை வருமா?’’ எனக் கேட்­கின்­றான். ‘‘வராது’’ என அமைச்­சர் கூறி­வி­டு­ கின்­றார்.

ஆனால் வழி­யிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்­டி­ருந்த கிரா­மத்­த­வன் ஒரு­வன் ‘‘அர­சரே, இந்தநே­ரத்­தில் எங்கு செல்­கி­றீர்­கள்? கொஞ்ச நேரத்­தில் மழை பெய்­யப்­போ­கி­றது அல்­லவா?’’ என எச்­ச­ரிக்­கின்­றான். அதைப் பொருட்­ப­டுத்­தா­மல் சென்ற அர­சன், வேட்­டை­யா­டிக் கொண்­டி­ருந்­த­போது கடும் மழை பெய்து நன்­றாக நனைந்து போனான்.

அத­னால் உடனே அரண்­மனை திரும்­ப­வேண்டி ஏற்­பட்­டது. திரும்­பும் வழி­யில் மழை­வ­ரு­மென முன்னர் எச்­ச­ரித்த குடி­யா­ன­வ­னைச் சந்­திக்­கின்­றான். ‘‘மழை வரு­மென்று உனக்கு எப்­ப­டித் தெரிந்­தி­ருந்­தது’’ எனக் கேட்­கின்­றான். கிரா­மத்­த­வனோ ‘‘அரசே, அது­பற்றி எனக்­கு எதுவும் தெரி­யாது.

ஆனால், என்னுடைய கழு­தைக்­குத் தெரி­யும். மழை பெய்­வ­தற்­கான அறி­கு­றியை அது உணர்ந்­தால், அது தன் காது­களை முன்­னுக்கு நீட்­டிக் கொள்­ளும்’’ என்­றான். உடனே அர­சன் தனது அமைச்­ச­ரைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டு அந்­தக் கழு­தையை அமைச்­ச­ராக்­கி­னான்!

மேற்குறிப்பிட்ட கதை அமெ­ரிக்க முன்­னாள் அர­ச தலை­வர் ஆபி­ர­காம் லிங்­க­னால் சொல்­லப்­பட்­ட­தா­கும். இந்­தக் கதையை ஆபி­ர­காம் லிங்­கன் கூறி­விட்டு ‘‘கழு­தையை அமைச்­ச­ராக்­கி­ய­தில்­தான் அர­சன் ஒரு தவறு செய்­து­விட்­டார்! என்­ன­வெ­னில், அது முதற்­கொண்டு எல்­லாக் கழு­தை­க­ளும் ஏதா­வது பதவி வேண்­டும் என அலை­கின்றன என அந்­தக் கதையைக் கூறி­மு­டித்­தா­ராம்!

பதவி தேடி அலை­யும் மனிதர்கள்
அன்று ஆபி­ர­காம் லிங்­கன் சொன்ன அந்­தக் கதை இன்­றைய அர­சி­யல் சூழ­லுக்கு மட்­டு­மல்ல, சமு­தாய சமய, சூழ­மை­வு­க­ளுக்­கும் நன்கு பொருத்­த­மு­டை­ய­தா­கவே தெரி­கின்­றது.

பத­வி­மோ­கம் பிடித்து பல வடி­வங்­க­ளில் திரி­கி ன்­றார்­கள் இன்­றைய மனி­தர்­கள். காலா­தி­கா­ல­மா­கப் பேசப்­பட்­டு­வ­ரும் மூவா­சை­க­ளான மண்­ணாசை, பெண்­ணாசை, பொன்­னாசை என்­ப­வற்­றை­விட நான்­கா­வதான பதவி ஆசை­யால் இன்­றைய சமூ­தா­யம் மிக மோச­மாக நோய்­வாய்ப்­பட்­டுப் போய்க் கி­டக்­கி­றது!

‘‘மர­ணம் முற்­றுப்­புள்ளி அல்ல’’ என்ற கவிதை நூலில் ‘‘சிம்­மா­சன நோய்’’ என்ற கவி­தை­யில், எழுத்­தா­ளர் அப்­துல் ரகு­மான் பின்­வ­ரு­மாறு தெரி­விக்­கின்­றார்.‘‘மூவா­சை­க­ளை­வி­டப் பெரிய ஆசை, சிம்­மா­சன ஆசை, அத­னால்­தான் மூன்­றை­யும் கொடுத்­தா­வது, அதைப்­பெற முயல்­கின்­றான் மனி­தன். அதி­கா­ரம் விசித்­தி­ர­மான சாரா­யம். அதைக்­கு­டிக்­கி­ற­வன் தன்னை மறப்­ப­தில்லை, பிறரை மறந்­து­வி­டு­கின்­றான்’’ என்­கின்­றார்.

படிப்­புக்கு ஏற்ற பதவி
இந்­தக் கருத்­துக்கு அணி­சேர்ப்­ப­து­போல நண்­பர் ஒரு­வர் இந்த ஆண்­டின் தொடக்­கத்­தில் மின்­னூ­ட­ கத்­தில் பகிர்ந்­து­கொண்ட விட­யம் ஒன்று அமைந்­தி­ருக்­கின்­றது. இந்த ஆண்டு உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் நடை­பெற இருந்த காலகட்டத்தில், யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து இளம் குடும்பஸ்தரொருவர் அம்­பா­றைக்­குப் பய­ணம் செய்­தி­ருக்­கின்­றார்.

அவ­ருக்கு அரு­கில் இருந்த இருக்­கை­யில் நடுத்­தர வய­தான ஒரு­வர் கூடவே பய­ணம் செய்­தி­ருக்­கின்­றார். நீண்ட பய­ணம் என்­ப­தால் இரு­வ­ரும் பல்­வே­று­பட்ட விட­யங்­களை உரை­யா­டிக்­கொண்டு சென்­றி­ருக்­கின்­ற­னர். இவர்­க­ளின் உரை­யா­ட­லின் ஆரம்­பத்­தில், நடுத்­தர வய­தா­ன­வர் இளம் குடும்­பஸ்­த­ரின் குடும்­பத்­தைப் பற்றி வின­வி­யி­ருக்­கின்­றார். அவ­ரும் தனது வளர்ந்­து­வ­ரும், சிறு­வ­ய­து­க­ளு­டைய மூன்று குழந்­தை­க­ளைப் பற்­றிக் கூறி­யி­ருக்­கின்­றார்.

பதி­லுக்கு, இளம் குடும்­பஸ்­த­ரும், மற்றைய­வ­ரின் குடும்­பத்­தைப் பற்றி கேட்­டி­ருக்­கின்­றார். அவர், ‘‘எனக்கு மூன்று பிள்­ளை­கள் தம்பி’’ எனத் தொடங்­கி­ய­வர், ‘‘மூத்­த­வன், கல்­வி­யி­யற் கல்­லூரி முடிச்­சுப்­போட்டு ஆசி­ரி­ய­ராய் வேலை பாக்­கி­றான்.
இரண்­டா­வது, பல்­க­லைக்­க­ழ­கத்­திலை படிச்­சிப் பட்­டம் பெற்­றிட்டு, வேலை தேடிக்­கொண்­டி­ருக்­கி­றான்.

மூன்­றா­ம­வன், எட்­டாம் ஆண்­டோட படிப்பை நிறுத்­திப்­போட்டு, வீட்­டிலை இருந்­தான்! இப்­ப, இந்த வட்­டா­ரத் தேர்­த­லிலை, அவன்ர
படிப்­புக்கு ஏற்­ற­மா­திரி, ஒரு வேட்­பா­ள­ராய் நிக்­கி­றான்!’’ என நிதா­ன­மா­கச் சொல்லி முடித்­தா­ராம்!

சிம்­மா­சன நோய்
‘‘சிம்­மா­சன நோய்’’ இன்று பல தரத்­தா­ரை­யும், திறத்­தா­ரை­யும் பீடித்­தி­ருக்­கின்­றது என்­பதை அனைத்து மட்­டங்­க­ளி­லும் அவ­தா­னிக்­க­லாம். அத­னால்­தான், இன்று கதி­ரை­க­ளைத் தேடி அலை­கின்­றார்­கள் ஒரு பெரும் கூட்­டத்­தி­னர். எங்­கள் நிலை எந்­த அள­வுக்­குத் தாழ்ந்­து­போய்­விட்­டது என்­ப­தற்கு மேற்­சொன்ன அநு­ப­வம் ஓர் உதா­ர­ணமே!

பணி­க­ளைச் செய்து, அதன் ‘‘பரி­ணாம வளர்ச்­சி­யில்’’ பத­வி­களை அடை­வ­தில் எவ்­வித தவ­றும் இல்லை. அத­னால் இன்­னும் அதி­க­மான பணி­க­ளைப் புரி­ய­லாம். ஆனால், இன்­றைய சூழ­லில் எப்­பா­டு­பட்­டா­வது, எவர் காலைப் பிடித்­தா­வது, பத­வி­களை அடை­வ­தையே -, கதி­ரை­க­ளைக் கைப்­பற்­று­வ­தையே பலர் குறி­யா­கக் கொண்டு திட்­டம்­போட்­டுச் செயற்­ப­டு­வ­தைக் காண­மு­டி­கின்­றது.

நடந்­து­மு­டிந்த உள்ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லின் பின்­னர், பல இடங்­க­ளில் நடந்த ‘‘சங்­கீ­தக் கதிரை’’ போட்டி இதற்கு ஓர் உதா­ர­ணம். இது­போல இன்­னும் பல உதா­ர­ணங்­களை ஏனைய சமூ­கத் தளங்­க­ளில் நின்று நோக்­கு­கின்­ற­போது, இந்த நிலை நன்கு புரி­யும். அந்­தப்­ப­த­வி­க­ளைக்­கூட மக்­க­ளுக்­கா­கத் தொண்­டு­கள் ஆற்­றப் பயன்­ப­டுத்­தி­னா­லும் பர­வா­யில்லை!

ஆனால், பத­வி­க­ளைப் பெற்று எந்­த அள­வுக்­குத் தங்­க­ளது வரு­வாயை உயர்த்­திக் கொள்­ள­லாம் என்­ப­தில்­தான் இவர்­கள் கருத்­தாக இருக்­கின்­றார்­கள். இப்­ப­டிப்­பட்­ட­வர்­கள் பொது­வா­கத் திற­னற்­ற­வர்­க­ ளாக,பேராசை கொண்­ட­வர்­க­ளா­கத்­தான் இருப்­பார்­கள். இவர்­க­ளால் சமூ­கத்துக்கு என்ன நன்மை கிடைக்­கப் போகின்­றது?

அபி­வி­ருத்தி வேலை­க­ளும் அரை­கு­றை­தான்!
மத்­திய அர­சின் அமைச்­சுப் பத­வி­களை ஏற்க முடி­யாத சூழ­லில்,தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இருக்­கின்­றார்­கள். சரி, அது போகட்­டும்! அடுத்து, மாகா­ணத்துக்காக ஒதுக்­கப்­ப­டும் நிதி முழு­மை­யா­கச் செல­வி­டப்­ப­டு­கின்­றதா என்­றால், அது­வும் இல்லை. ‘‘வடக்­குக்­கான அபி­வி­ருத்­திக்கு நிதி போதாது’’ எனக் கூச்­ச­லி­டு­கின்­றார்­கள்.

ஆனால், ஒதுக்­கப்­ப­டும் நிதி­யில் ஒரு­ப­குதி மீண்­டும் திருப்பி அனுப்­பப்­ப­டு­கின்ற அவல நிலை­தான் தொடர்ந்து நீடிக்­கின்­றது. அல்­லது ஆண்­டின் இறுதி மாதத்­தில் பணம் திரும்­பப்­போ­கின்­றதே என அவ­ச­ரப்­பட்டு, அவ­திப்­பட்டு செய்­யப்­ப­டு­கின்ற செயற்­பா­டு­க­ளா­கவே அவை அமைந்­து­வி­டு­கின்­றன. 2017ஆம் ஆண்­டில் மார்­கழி மாதத்­தின் கடைசி இரு கிழ­மை­க­ளில் சில பிர­தேச செய­ல­கங்­கள் நடத்­தி­ மு­டித்த பண்­பாட்டு விழாக்­கள் இதற்கு ஒரு சான்று.

ஏன், இத்­த­கைய விழாக்­களை ஆண்­டின் ஏனைய காலப்­ப­கு­தி­யில் அழ­கா­கக் திட்­ட­மிட்டு நடத்­தி­னால் என்ன? ஏன் ஆண்­டின் இறுதி நாள்க­ளில் அவ­ச­ரப்­பட்டு நடத்­த­வேண்­டும்? மேலும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் ஊடாக அபி­வி­ருத்­திப் பணி­க­ளுக்கு ஒதுக்­கப்­ப­டும் நிதி எப்­ப­டிச் செல­வி­டப்­ப­டு­கின்­றது என்­பது மக்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யா­கத் தெரி­விக்­கப்­ப­டும்­போ­து­தான், தமது பிர­தி­நி­தி­க­ளின் நிதி எப்­படிப் பங்­கி­டப்­ப­டு­கின்­றது என்­பதை மக்­கள் அறிந்­து­கொள்­வார்­கள்.

பொது­வா­கப் பார்த்­தால் எமது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கட­மை­க­ளைப்­பற்றி யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து வெளி­வ­ரும் ஒரு தின­ச­ரிப் பத்­தி­ரி­கை­யின் ஆசி­ரி­யர் தலை­யங்­க­மொன்­றில், ‘‘…தமக்கு வரு­கின்ற நிதி ஒதுக்­கீட்­டில் விளை­யாட்­டுக் கழ­கங்­க­ளுக்கு நிதி­யு­தவி, பாட­சா­லை­க­ளுக்கு உப­க­ர­ணக் கொள்­வ­ன­வுக்கு நிதிப்­பங்­க­ளிப்பு, சன­ச­மூக நிலை­யங்­க­ளின் கட்ட­டத் திருத்­தத்­துக்கு நிதி வழங்­கல் என்­ப­தோடு தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கடமை முடிந்து போகின்­றது.

இதை­யும் கடந்­தால் பரி­ச­ளிப்பு விழா­வில் பங்­கேற்பு, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உரை என்­ப­தோடு அவர்­க­ளின் பணி முடிந்து விடு­வ­தாக அவர்­க­ளும் நினைக்­கின்­றார்­கள். அதன்­வழி மக்­க­ளும் நம்­பு­கின்­றார்­கள்…’’ என்ற பார்வை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் அவ­தா­னிப்­புக்­கும் மக்­க­ளின் கவ­னத்துக்கும் உரி­யது.

பொது­வாக, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் ஆங்­காங்கே ஐம்­பது அறு­பது கதி­ரை­களை ஏதா­வது ஒன்­றி­யங்­க­ளுக்கோ அல்­லது சங்­கத்­தி­ன­ருக்கோ கொடுப்­ப­தும், சில துவிச்­சக்­க­ர­ வண்­டி­களை மாண­வர்­க­ளுக்­குக் கைய­ளிப்­ப­தும் அல்­லது சில தள­பா­டங்­க­ளையோ அல்­லது சில இசைக்­க­ரு­வி­க­ளையோ கொள்­வ­னவு செய்ய நிதி ஒதுக்­கு­வ­தும் என இவர்­க­ளு­டைய அபி­வி­ருத்­திப் பணி­கள் முடிந்­து­வி­டு­கின்­றன.

இதற்­கு­மேல் அவர்­க­ளால் செய்­வ­தற்கு நிதி ஒதுக்­கீடு இருக்­கின்­றதோ என்­பது இன்­னொரு பக்­கம். உள்ளூ­ராட்­சிச் சபை­களை எடுத்­துக்­கொண்­டால் அவை­கள் உள்­ளுர் மட்­டங்­க­ளில் செய்­ய­வேண்­டிய அபி­வி­ருத்­திப் பணி­களை விட்­டு­விட்டு, உல­க­ளா­விய அபி­வி­ருத்­திக்கு என்­ன­செய்­ய­லாம் என்­ப­து­போல அவர்­கள் தங்­கள் தங்­கள் சபை­க­ளில் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றிக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். இவ்­வா­றெ­னின் எவ்­வாறு அபி­வி­ருத்­திப் பணி­கள் இடம்­பெ­றும்?

முயல் பிடிக்­கும் நாயை…
இப்­ப­டியே, ஒன்­று­மாறி ஒன்­றைக் கதைத்­துக் கதைத்து, பேசிப் பேசி காலத்தை ஓட்­டி­வி­டு­வார்­கள் போலத்­தான் தோன்­று­கின்­றது. ‘முயல் பிடிக்­கும் நாயை மூஞ்­சி­யில் பார்த்­தால் தெரி­யும்’ என என் பேர­னார் கூறு­வதைச் சிறு­வ­ய­தில் கேட்­டி­ருக்­கின்­றேன். எமது தலை­வர்­க­ளைப் பார்க்­கும்­போது எனது பேர­னார் கூறிய அந்த முது­மொ­ழி என்னுடைய நினை­வுக்கு அடிக்­கடி வரு­வது தவிர்க்­க­மு­டி­யாது போகி­றது!

இனி­வ­ரும் காலங்­க­ளில் தமி­ழ­ரின் பிரச்­சி­னை­க­ளைப்­பற்றித் தமிழ்த் தலை­வர்­கள்­கூட அவ்­வப்­போது பேசு­வார்­கள், ஏதும் அசம்­பா­வி­தங்­கள் நடக்­கின்­ற­போது அறிக்கை விடு­வார்­கள் அல்­லது வெளி­நாட்டு அதி­தி­கள் வரு­கின்­ற­போது ஏதா­வது அர­சி­யல் தீர்வு குறித்­துப் பேசி­விட்டுத் தங்­கள் வாழ்க்­கையை நடத்­து­வார்­கள் என்­ப­தா­கவே தெரி­கின்­றது.

ஆகக்­கு­றைந்­தது, இந்­தக் கா­ல­கட்­டத்­தில் தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள், பிர­தி­நி­தி­ க­ளி­டையே ஒன்­று­பட்ட, ஒற்­று­மைப்­பட்ட நிலை­மை­யா­வது நில­வும் என நினைத்­தால், அது­வும் அந்தா, இந்­தா­வென்று அறுந்­து­வி­ழும் நிலை­யில்­தான் தொங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது! இருக்­கின்ற ஒற்­றுமை(?), வரப்­போ­கும் மாகா­ண­ச­பைத் தேர்­த­லோடு முடி­வுக்கு வந்­து­வி­டுமோ என்ற ஆதங்­கமே அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது! இன்­றைய எமது தலை­வர்­க­ளின் இந்தப்­ப­ரி­தாப நிலையை அவ­தா­னிக்­கும் சாதா­ரண மக்­கள் ‘‘பிலாக்­கா­யைப் பாத்த பேயன்­மா­திரி’’ விழி­பி­துங்­கிப்­போய் நிற்­கின்­றார்­கள்!

வேற்­று­மை­க­ளுக்கு விடை­கொ­டுக்­க­வேண்­டும்!
‘‘எம்­மி­டையே இருக்­கும் வேற்­று­மை­க­ளைக் களைந்­தாலே அடக்­கு­மு­றை­க­ளில் இருந்து நாம் மீள­லாம்’’ என உல­கத் தமி­ழர் பேர­வை­யின் தலை­வ­ரும், பேரா­சி­ரி­ய­ரு­மான எஸ்.ஜே.இம்­மா­னு­வல் அடி­க­ளார், தந்தை செல்­வா­வின் நாற்­பத்­தோ­ரா­வது ஆண்டு நினைவு நாளில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போது குறிப்­பிட்­டி ­ருக்­கின்­றார். அடி­க­ளார் குறிப்­பிட்­ட­து­போல தங்­க­ளுக்­கி­டையே நில­வும் வேற்­று­மை­க­ளுக்கு இவர்­கள் விடை கொடுக்­கா­த­வரை, விடிவு கிடை­யாது என்­பது நிறுத்­திட்­ட­மான உண்மை.

‘‘எங்­கள் அர­சி­யல்­வா­தி­கள், தலை­வர்­க­ளுக்குச் சிறப்­புப் பொறுப்­பும் கட­மை­யும் உண்டு. ஒரு­வரை ஒரு­வர் தட்டி வீழ்த்­து­ப­வர்­க­ளாக இருக்­காது. ஒரே இலட்­சி­யத்­து­டன், ஒரே நோக்­கத்­து­டன், விளை­யா­டும் கால்பந்­தாட்ட வீரர்­கள் போன்று ஒரே இலட்­சி­யத்­துக்­காக ஒத்­து­ழைக்க வேண்­டும்’’ என மேலும் அழைப்பு விடுத்­தி­ருக்­கி ன்­றார். ‘‘நாங்­கள் எமது சகல

திற­மை­க­ளை­யும் பயன்படுத்தி எதிர்ப்­புப் போராட்­டங்­களை நடத்­தி­னால் போதாது. எமது சமூ­கத்­துக்­குள்ளே, எமக்­குள்ளே ஆழ­மாக வேரூன்­றி­யி­ருக்­கும் வேற்­று­மை­கள், அடக்கு­மு­றை­க­ளில், இருந்து விடு­ த­லை­பெற வேண்­டும்’’ என­வும் கோடிட்­டுக் காட்­டி­யி­ருக்­கின்­றார்.

இலட்­சி­யத்­தோடு
இருக்­கின்­றார்­களா?
மேலும், ‘‘இலட்­சி­யத்துக்காக ஒத்­து­ழை­யுங்­கள் என்­பதே என் பணி­வான வேண்­டு­கோள்’’ என்­றும், ‘‘எம் மத்­தி­யில் இருக்­கும் சமூ­கத்­த­லை­வர்­க­ளும், புத்­தி­ஜீ­வி­க­ளும், உத்­தி­யோ­கத்­தர்­க­ளும், மதத்­த­லை­வர்­க­ளும் பார்­வை­யா­ளர்­க­ளா­கவோ, மௌன­மா­கவோ இருப்­பது தவ­றா­னது.

அது எமது இனத்­துக்­குத் துரோ­கம் இழைப்­ப­தா­கும். நாங்­கள் மௌன­மாக இருந்­தால் சில அர­சி­யல்­வா­தி­கள் மக்­கள் நல­னைக் கைவிட்டுச் சுய­ ந­லத்­து­டன் நடக்­கின்­ற­னர்’’ என­வும் மேற்­சொன்ன நிகழ்­வில் சமூ­கப் பொறுப்­பி­லுள்ள அத்­தனை பேருக்­கும் அழைப்­பு­வி­டுத்து அறி­வுரை கூறி­யி­ருக்­கின்­றார். புத்­தி­ஜி­வி­க­ளும் சமய , சமூ­கத் தலை­வர்­க­ளும் சமூக வாழ்­வி­லி­ருந்து தள்­ளி­யி­ருக்­கும்வரை அர­சி­யல்­வா­தி­க­ளின் ஆட்­டம் அதி­க­மா­கவே இருக்­கும் என்­ப­தைக் குறிப்­பாக சமய – சமூ­கத் தலை­வர்­கள் மன திருத்திச் செயற்பட முன்­வ­ரு­வார்­களா?

‘‘பிரி­வோ­மாக இருந்­தால் அழிந்து­வி­டு­வோம். நாட்­டின் தற்­போ­தைய நிலை­யைக் கருத்­திற்­கொண்டு, கருத்து வேறு­பா­டு­க­ளைக் களைந்து, நாம் ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­ட­வேண்­டும். இதை விடுத்து பிரிந்து செயற்­ப­டு­வோ­மாக இருந்­தால்,எமது மக்­களை நாமே அழிப்­ப­தாக அமை­யும் ’’ என எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திக­தி­யன்று வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் வட­மா­காண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனின் ‘‘நீதி­ய­ர­சர் பேசு­கி­றார்’’ என்ற நூல்­வெ­ளி­யீட்டு நிகழ்ச்­சி­யில் உரையாற்றியபோது தெரி­வித்­தி­ருக்­கின்­றார்.

பிரிந்­தால் பெரும் ஆபத்து விளை­யும் எனத் தெரி­கி­றது. பின், ஏன், பிரிந்­து­போ­வ­ தற்கே பெரும் எடுப்­பி­லான ஆயத்­தங்­க­ளைச் செய்­கின்­றீர்­கள்? என இவர்­க­ளி­டம் கேட்­க­வேண்­டும்­போல் இருக்­கின்­றது! கார­ணம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் மூன்று கட்­சி­க­ளுள் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் அர­சி­யல் தலை­வர்­கள் ஏனைய கட்­சித் தலை­வர்­களை மாற்­றான்­தாய் மன­நி­லை­யோடு பார்ப்­பது தமிழ்த் தேசிய நீண்ட நெடிய அர­சி­யல் பய­ணத்துக்கு எந்த வ­கை­யி­லும் உகந்­த­தல்ல, ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல என்­பதை அவர்­கள் சிந்­திக்­க­வேண்­டும்!

அதே­வேளை,தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் தமி­ழ­ர­சுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்­சி­க­ளான ரெலோ, புளொட் ஆகி­யவை ஒத்­தி­சைந்து ஓர­ணி­யில் நின்று செயற்­ப­டும் மன­நி­லை­யை­யும் உரு­வாக்­கிக்­கொள்ள முன்­வ­ர­ வேண்­டும்.

புலிக்­கதை தொட­ரத்­தான்
போகின்­றது
எது எப்­ப­டி­யி­ருந்­தா­லும், இந்த ஆண்டு ஐப்­ப­சித் திங்­கள் மாகா­ண­சபை கலைக்­கப்­பட்டு, தேர்­தல் அறி­விக்­கப்­பட்­டால், மீண்­டும் புலிக்­கதை தொடங்­கி­வி­டும் என உறு­தி­ப­டக் கூற­லாம்.

ஏனென்­றால், கடந்த காலங்­க­ளில் நடை­பெற்ற உள்ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­கள், மாகா­ண­ச­பைத் தேர்­தல்­கள், ஏன், அரச தலை­வ­ருக்­கான தேர்­தல்­கள் என எடுத்­துக்­கொண்­டா­லும் நாட்­டின் வடக்­கி­லும், தெற்­கி­லும், கிழக்­கி­லும், மேற்­கி­லும் தமி­ழீழ விடு­த­லைப் புலி­களை நேர்­ம­றை­யா­கவோ, எதிர்­ம­றை­யா­கவோ தொடர்­பு­ப­டுத்­தியே அவை வெற்றி கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.

குறிப்­பாக, வடக்குக் கிழக்கு மாகா­ணங்­க­ளைச் சேர்ந்த தமிழ் அர­சி­யல் பிர­மு­கர்­கள் தமி­ழீழ விடு­த­லைப் புலி­களை முன்­னி­றுத்­தியோ அல்­லது தாம் அவர்­க­ளின் இலட்­சியத் தடங்­க­ளில் பய­ணிப்­ப­தா­கக் கூறிக்­கொண்டோ தமது சிம்­மா­ச­னங்­க ­ளைப் பெற்­றுக்­கொள்­கின்­றார்­கள்.

சிம்­மா­ச­னங்­க­ளில் ஏறிய பின் வாக்­க­ளித்த மக்­கள் பற்­றிய அக்­க­றையோ, அல்­லல்­ப­டும் முன்­னாள் போரா­ளி­கள் பற்­றியோ அல்­லது அன்­றா­டம் மக்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­கள் பற்­றியோ இவர்­கள் பெரி­தாக அலட்­டிக்­கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை. அப்­படி இல்­லை­யென்று ஏதா­வது செய்­வ­தாக இருந்­தால் போராட்­டங்­க­ளில் சில மணித்­து­ளி­கள் நிற்­பது, மேடை­க­ளில் மத்­திய அர­சைத் தாக்­கிப்­பே­சு­வது, அறிக்கை விடு­வ­து­, பேட்­டி­ய­ளிப்­பது என இவர்­க­ளின் செயற்­பா­டு­கள் முடிந்­து­வி­டு­ வ­தா­கவே தெரி­கின்­றது.

இரு­பது, முப்­பது ஆண்­டு­க­ளாக நடை­பெற்ற எந்­தத் தேர்­த­லி­லா­வது, தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் பெயரைப் பயன்­ப­டுத்­தாது எந்­தக்­கட்­சி­யா­வது வெற்­றி­யீட்டி இருக்­கின்­றதா? இல்­லையே? இனி­வ­ரும் தேர்­தல்­க­ளி­லும் அவர்­க­ளின் பெயரே வெற்­றிக்­கான மந்­தி­ர­மாக இருக்­கப்­போ­கின்­றது என ஐயம்திரி­ப­றக் கூற­லாம்.

வேறென்ன? அவர்­க­ளின் பெயரே எமது அர­சி­யல்­வா­தி­க­ளுக்குத் துருப்­புச் சீட்­டாக இருக்­கப் போவ­தோடு, மீண்­டும் ஒரு­த­டவை வழ­மை­போன்று புலிக்­கதை தொட­ரத்­தான் போகின்­றது. மக்­கள் அவ­தா­ன­மாக இருந்­தால் புலிக்­கதை பேசி, ‘புலுடா’ விட்­டுத்­தி­ரி­வோ­ரைப் புறந்­தள்­ளி­ விட முடி­யும்!

எவ்­வா­றா­யி­னும், வந்­தாக; போனாக; வாச­லில நின்­னாக, வாக்­கு­றுதி மந்­தி­ரத்தை வாய்­கி­ழி­யச் சொன்­னாக, வாய்­கி­ழி­யச் சொல்­லி­விட்டு வாக்­கு­க­ளைக் கேட்­டாக, வாக்­கு­களை வாங்­கிப்­புட்டு வந்­த­வழி போனாக, போன­வங்­க­ளைக் காண­லையே; போன இடம் தெரி­ய­லையே! என்ற சு.பாண்­டி­ய­னின் அவ­தா­னிப்பே இறு­தி­யில் நின்று நிலைக்­கப் போகின்­றது!

You might also like