side Add

பெரு நாட்டில் பெரும் சோகம்- விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!!

பெரு நாட்டில் புனோ பகுதியில் டிடிகாகா ஏரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்தும், பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு குழந்தை மற்றும் 12 பெண்களும் அடங்குவர். மேலும் 39 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

You might also like