பெற்றோல் குண்டு வீசி காருக்குத் தீ வைத்த விசமிகள்!!

வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று பெற்றோல் குண்டு வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடருந்து வீதிக்கு அருகாமையிலுள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த,காருக்கு மூவரடங்கிய குழுவினர் பெற்றோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தினால் கார் முற்றாக எரிந்துள்ளது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like