பெல்­ஜி­யம் முத­லி­டம்!

பன்­னாட்டு கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்­தின் (பிபா) தரப்­ப­டுத்­த­லில் முத­லி­டம் பிடித்­தது பெல்­ஜி­யம். ஏற்­க­னவே முத­லி­டத்­தில் இருந்த உல­கச்­சம்­பி­ய­னான பிரான்ஸை அது பின்­தள்­ளி­யது.

பன்­னாட்­டுக் கால்­பந்­தாட்­டச் சம்­மே­ள­னம் தனது தர­வ­ரி­சைப் பட்­டி­யலை நேற்­றுப் புதுப்­பித்­தது. பெல்­ஜி­யம் ஆயி­ரத்து 733 புள்­ளி­க­ளைப் பெற்று முத­லி­டத்­தில் உள்­ளது.

ரான்ஸ் ஆயி­ரத்து 732 புள்­ளி­க­ளைப் பெற்று இரண்­டா­வது இடத்­தை­யும், பிரே­சில் ஆயி­ரத்து 669 புள்­ளி­க­ளைப் பெற்று மூன்­றா­வது இடத்­தை­யும், குரோ­சியா ஆயி­ரத்து 635 புள்­ளி­க­ளைப் பெற்று நான்­கா­வது இடத்­தை­யும், இங்­கி­லாந்து ஆயி­ரத்து 619 புள்­ளி­க­ளைப் பெற்று ஐந்­தா­வது இடத்­தை­யும் கைப்­பற்­றின.

ஆறு முதல் பத்து வரை­யி­லான இடங்­க­ளில் முறையே உரு­குவே, போர்த்­துக்­கல், சுவிற்­சர் லாந்து, ஸ்பெய்ன், டென்­மார்க் ஆகிய அணி­கள் உள்­ளன.

You might also like