பையில் சுற்றப்பட்டு புதைக்கப்பட்ட சிசு மீட்பு!!

வாழைச்சேனை வாகனேரி குடாமுனைக் கல் பிரதேசத்தில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வசித்து வந்த வீடு மற்றும் வளவு போன்றவை தடவியல் பரிசோதனை செய்யப்பட்டதுடன், சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வளவின் ஒரு பகுதியில் குழியொன்றில் பொலித்தின் பை ஒன்றில் சுற்றி புதைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட சிசுவைப் பொலிஸார் மீட்டனர்.

You might also like