side Add

பொறுப்­போடு செயற்­ப­டுங்­கள் அரச ஊட­கங்­க­ளுக்கு சபா­நா­ய­கர் அறி­வுரை

தற்­போ­துள்ள அர­சி­யல் நெருக்­க­டி­யில் அரச ஊட­கங்­கள் பொறுப்­பு­டன் செயற்­பட வேண்­டும் என்று சபா­நா­ய­கர் கரு­ஜ­ய­சூ­ரிய வலி­யு­றுத்­தி­யுள்­ளார். ஊடக அமைச்­சின் செய­லரை அழைத்து, சபா­நா­ய­கர் மேற்­படி அறி­வு­றுத்­தலை வழங்­கி­யுள்­ளார். இவ்­வாறு சபா­நா­ய­கர் அலு­வ­ல­கம் விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அந்த அறிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

நாடா­ளு­மன்ற அமர்வை நேரடி ஒளி­ப­ரப்பு செய்­யும் உரிமை இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு காணப்­ப­டு­கின்ற நிலை­யில் திடீ­ரென அந்த ஒளி­ப­ரப்பு நிறுத்­தப்­பட்­டுள்­ளது. மேலும், அரச ஊட­கங்­க­ளின் செயற்­பாடு தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் குற்­றச்­ச◌ாட்டு முன்­வைக்­கப்­பட்­டது.

அதற்கு அமை­வாக, ஊடக அமைச்­சின் செய­லர் சுனில் ஹெட்­டி­யா­ராச்சி மற்­றும் இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்­தின் தலை­வர் கலா­நிதி சோம­ரத்ன திஸா­நா­யக்க ஆகி­யோரை சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய நாடா­ளு­மன்­றத்­துக்கு நேற்று அழைத்­தி­ருந்­தார். தற்­போது நாட்­டில் காணப்­ப­டு­கின்ற அர­சி­யல் நெருக்­கடி நில­மை­யில் சுயா­தீன தன்­மை­யு­ட­னும் பொறுப்­பு­ணர்­வு­ட­னும் செயற்­பட வேண்­டிய தேவையை சபா­நா­ய­கர் வலி­யு­றுத்­தி­னார்.

இலங்கை ரூப­வா­ஹிணி கூட்­டுத்­தா­ப­னம், ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னம், சுயா­தீன தொலைக்­காட்சி சேவை மற்­றும் பத்­தி­ரிகை நிறு­வ­னங்­க­ளின் செயற்­பா­டு­கள் தொடர்­பில் சபா­நா­ய­கர் அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­னார். இத­னைக் கவ­னத்­தில் கொண்டு அரச ஊட­கங்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தாக ஊடக அமைச்­சின் செய­லர் சபா­நா­ய­க­ரி­டம் உறு­தி­ய­ளித்­துள்­ளார். அதே போன்று இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்­தின் நேரடி ஒலி­ப­ரப்பு நிறுத்­தப்­பட்­டமை தொடர்­பில் கவ­லை­ய­டை­வ­தாக தெரி­வித்த கூட்­டுத்­தா­ப­னத்­தின் தலை­வர் அதனை சீர் செய்­வ­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

You might also like