பொலிஸாரின் ஜீப் கடத்தல்- நால்வர் சற்றுமுன்னர் கைது!!

0 12

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸாரின் வாகனத்தைக் கடத்திய குற்றச்சாட்டில் சற்றுமுன்னர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோத­லைத் தடுக்­கச் சென்ற பொலி­ஸா­ரின் துப்­பாக்­கி­யைப் பறித்து, பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வ­ரு­டன் பொலிஸ் வாக­னத்­தைக் கடத்­திய  சம்­ப­வம் ஒன்று நேற்று இரவு  யாழ்ப்­பா­ணம் கொடி­கா­மம், பாலா­விப் பகு­தி­யில் இடம்­பெற்­றது.

இந்­தச் சம்­ப­வத்­தால் சாவ­கச்­சேரி, கொடி­கா­மம்  பொலி­ஸார் பாலா­விப் பகு­தி­யில் குவிக்­கப்­பட்­ட­ னர். இத­னால் அங்கு பதற்­றம் ஏற்­பட்­டது.

இதன்­போது அங்கு நின்­ற­வர்­க­ளுக்­கும் பொலி­ஸா­ருக்­கும் இடை­யில் முறு­கல் நிலை ஏற்­பட்­டது. கைது நட­வ­டிக்­கையை நிறுத்­து­மாறு பொலி­ஸா­ரைக் கோரி­யுள்­ள­னர். எனி­னும் பொலி­ஸார் மோத­லில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்ய முயன்­ற­னர். அவர்­க­ளில் ஒரு­வர் பொலி­ஸா­ரைத் தாக்­கி­விட்டு, விரைந்­து சென்று நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த பொலி­ஸா­ரின் ஜீப் வண்­டியை எடுத்­துக் கொண்டு சென்­றுள்­ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like