பொலிஸ் விசாரணையில் கொடூரம்- பரபரப்பான வீடியோ!!

0 211

குற்றவாளி ஒருவரிடம் பொலிஸார் நடத்திய கொடூரமான விசாரணை குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் செல்போன் திருடிய குற்றச்சாட்டில் ஒருவரைப் பப்புவா பொலிஸார் கைது செய்தனர். விசாரணையில் குற்றத்தை குறித்த நபர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் மௌனமாக இருந்ததை அடுத்து பொலிஸார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மலைப்பாம்பு ஒன்றைக் கொண்டு வந்து, அவரது கழுத்தில் சுற்றி விசாரணை நடத்தினர். பாம்பின் வாய்ப் பகுதியை குற்றவாளியின் முகத்திடம் கொண்டு சென்றனர். பின்னர் அவனது ஆடைக்குள் நுழைய வைக்க முயற்சித்தனர்.

இதனால் சம்பந்தப்பட்ட குற்றவாளி பயத்தில் அலறியுள்ளார். இந்தச் சம்பவத்தை மற்றொரு பொலிஸார் வீடியோவாக எடுத்துள்ளார். இது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் பப்புவா பொலிஸார் மன்னிப்புக் கோரியுள்ளனர். இருப்பினும் குற்றவாளியின் கழுத்தில் சுற்றப்பட்ட மலைப்பாம்பு விஷத்தன்மை கொண்டது இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

You might also like