side Add

போதையற்ற உலகப் பொதுமை காண்போம்

போரும் போதை­யும்

தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யிலே அவர்­க­ளு­டைய வாழ்­வி­யல் சுற்­றோட்­டம் என்­பது தற்­கா­லத்­திலே இடர் மிகுந்த பய­ண­வெ­ளி­யா­கவே அமைந்­துள்­ளதை காண முடி­கி­றது.

ஆம், கடந்த மூன்று தசாப்த காலத்­தில் தமி­ழர்­கள் நிம்­ம­தி­யான, சுதந்­தி­ர­மான, அமை­தி­யின் களிப்­பு­டைய சூழல் இயல்­த­கவை உரிமை என்ற பற்­று­த­லின் வழி பெற்­றி­ருந்­த­னர்.

ஆனா­லும் போர் என்ற அகங்­கா­ரம் அவ்­வப்­போது கோர முகம் காட்டி வலிந்து அழி­வு­கள் பலதை தந்­தி­ருந்­தது.இறு­தி­யில் இனப்­ப­டு­கொ­லை­யாக அகங்­கா­ரத்­தின் மொத்த வடி­வ­மும் தமி­ழ­னத்­தையே அடி­மைப்­ப­டுத்தி விட்­டது.

இந்த அழிவு நிலை­க­ளின் ஆழத்­தில் இருந்து மீண்டு வரு­வ­தற்கு நீண்ட காலங்­கள் தேவைப்­ப­டு­கின்­றன.இந்த சந்­தர்ப்­பத்­திலே மீண்­டும் ஓர் அழிவு தரும் அகங்­கா­ரத்­தின் உரத்த தொனிப்பு ‘போதை’ என்ற விஷ­மாக தமிழ் சமூ­கத்­தின் பரம்­ப­லி­னுள் திட்­ட­மிட்டு தெளிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் வீரி­ய­மும், அள­வற்ற அகத்­து­றுஞ்­ச­லும் தமி­ழின இருப்பை வேரோடு அழித்­து­வி­டு­வ­தற்­கான காரண காரி­ய­மாக இருந்து செய­லாற்றி வரு­கி­றது.

இந்த பின்­ன­டை­வான சமூக நிலைத்­தி­ருப்­பில் இருந்து நாம் மீண்­டு­வ­ரு­வ­தற்கு ஒற்­று­மை­யும், முயற்­சி­யும், விடு­தலை என்­கிற ஒரு­மு­க­மான உணர்­வும் எல்­லோ­ரி­டத்­தி­லும் ஏற்­பட வேண்­டும்.

அதற்­கான பணிக்­கூ­று­களை நாம் வினைத்­திற­ னோடு மேற்­கொள்ள முன்­வர­ வேண்­டும்.

ஏழை­க­ளின் எதிரி

குறிப்­பாக கிரா­மப் புறங்­க­ளில் வாழ்­கின்ற மக்­கள் வறு­மை­யில் துன்­பங்­களை அனு­ப­விப்­ப­தற்கு போதைப்­பொ­ருள்­க­ளின் பாவ­னையே முதன்­மைக் கார­ண­மாக அமைந்­துள்­ளது.

இவற்­றின் நுகர்ச்சி வீதம் எல்லை மீறிச் செல்­கி­றது. போதைப் பொருள்­க­ளின் வகைப்­பாட்­டி­னுள் மது­சா­ர­மும் தன்­னி­லையை முன்­னி­லைப்­ப­டுத்­தி­யுள்­ளது.

மது­சா­ரத்தை அருந்­தி­விட்டு போதை தலைக்­கே­றி­ய­தும் அவர்­கள் கண்­டு­கொள்­கின்ற நடத்தை மாற்­றங்­களை சரித்துக்கொள்ள முடி­ய­வில்லை.

உண்­மை­யில் மனி­தர்­க­ளாக நடந்­து­கொள்­ளாது மிரு­கங்­களை விட­வும் கீழ்­மைக் குண­மு­டை­ யோ­ரா­க­இ­வர்­கள் நடந்து கொள்­கின்­ற­னர்.
இங்கு மது­சா­ரத்­துக்கு அடி­மை­யான கூலித்­தொ­ழி­லாளி ஒரு­வ­னின் வாழ்க்­கையை எடுத்து நோக்­கின், இவை அள­வின்றி வரை­யறை செய்­துள்ள தீமை­கள் தொடர்­பில் நன்கு அறிந்­து­கொள்ள முடி­யும்.

நாள் முழு­வ­தும் கடு­மை­யாக வேலை­க­ளைச் செய்து உடல் உழைப்பை வியர்­வை­யாக சிந்­து­கி­றான். வெயில் மழை என எந்­த­வி­த­மான கால­நிலை மாற்­றங்­க­ளை­யும் பொருள்­ப­டுத்­தா­மல் முயற்­சி­யு­று­கி­றான். ஆனா­லும் தனது உடல் அச­தியை இல்­லாது போகச் செய்ய வேண்­டும் என்ற கார­ணத்தை அடிப்­ப­டை­யாக்கி மாலை வேளை­யில் மது­சா­ரத்தை அருந்­து­கி­றான்.

மது­சா­ரம்­ஒ­ரு­போ­தும் தன்­னைத் தொட்­ட­வனை இல­கு­வில் விட்­ட­தில்லை. அதன் வழியே தனக்­குப் பூர­ண­மா­கப் போதை ஏறும் வரை­யில் மது­சா­ரத்தை அகத்­து­றிஞ்­சிக்­கொண்டே இருக்­கின்­றான்.

மது­சா­ரத்­தின் மயக்­கம் பணம் செல­வா­வது தொடர்­பில் அறி­வு­ரையை தர மறுக்­கி­றது. அன்­றைய தினம் உழைத்த பணம் முழு­வ­தை­யும் மது­சா­ரத்­துக்கு வாரி­வ­ழங்கி விடு­கி­றான்.குடும்ப உற­வு­களை முழு­வ­து­மாக மறந்­து­வி­டு­கி­றான். அவர்­க­ளுக்­கான உணவு, ஏனைய தேவைப்­பா­டு­கள் என அத்­த­னை­யும் முடி­வின்றி தொடர் கதை­யாக தொடர்ந்து கொண்டே இருக்­கின்­றன.
மது­சா­ரத்­துக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளின் அநே­க­மான குடும்­பங்­க­ளில் இவ்­வா­றா­ன­தொரு அவல நிலை­தான் காணப்­ப­டு­கின்­றது. நாக­ரிக மாற்­றத்­தில் வாழ்­வா­தா­ரச் சிறப்­பு­டைய மேற்­தட்­டுக் குடும்­பங்­க­ளுக்கு மது­சா­ரப் பாவனை ஒரு சாதா­ரண விட­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

ஆனால் ஏழ்­மை­நி­லை­யி­லுள்ள குடும்­பங்­க­ளுக்கு இது­வொரு உயிர்­போ­கின்ற விட­ய­மா­கவே மாறி­விட்­டது.

போதை­யில் இருந்து இளை­யோர்  விடு­தலை பெற வேண்­டும்

மது­சா­ர­மும் போதையை ஏற்­ப­டுத்­து­வ­தால் அதை­யொரு போதைப் பொரு­ளா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. ஆனால் அர­சின் அங்­கீ­கா­ரத்­து­டன் மது­சார விற்­பனை நிலை­யங்­க­ளில் இன்று சர்வ சாதா­ர­ண­மாக அவை விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.

உள்­நாட்டு உற்­பத்தி தவிர வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்ற மது­சார வகை­க­ளும் எமது நாட்­டில் தாரா­ள­மாக விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.

இவை கவர்ச்­சி­க­ர­மான போத்­தல்­க­ளில் அடைக்­கப்­ப­டு­வ­தால் மது­சார விற்­பனை நிலை­யங்­க­ளில் அவை அடுக்கி வைக்­கப்­ப­டும் போது அவற்­றைக் காண்­ப­வர்­க­ளின் மனங்­க­ளில் சல­னம் ஏற்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக இளை­ஞர்­கள் அதி­க­ள­வில் இவற்­றால் ஈர்க்­கப்­ப­டு­கின்­ற­னர். இள­வ­ய­தி­னர் மதுவை நாடிச் செல்­வ­தற்கு இது­வு­மொரு கார­ண­மா­க அமைந்துவிடுகிறது.

தவிர ‘கஞ்சா, அபின், ஹெரோ­யின், ஹவீஸ்’ போன்­றவை மோச­மான போதைப்­பொ­ருள்­க­ளாக அடை­யா­ளம் பெறு­கின்­றன. இவற்­றின் விலை­கள் மிக அதி­கம் என்­ப­தோடு இவற்­றால் ஏற்­ப­டு­கின்ற தீமை­க­ளும் மோச­மா­ன­வை­யாக அமை­கின்­றன.

இத்­த­கைய போதைப் பொருள்­க­ளுக்கு அடி­மை­யா­ன­வர்­கள் அவற்­றி­லி­ருந்து மீட்சி பெறு­தல் என்­பது இய­லாத காரி­யம். அவற்­றைப் பெற்­றுக் கொள்­வ­தற்கு இவர்­கள் அதீத முயற்­சியை மேற்­கொள்­வர்.

நுகர்ச்சி என்ற கார­ணத்­துக்­கா­கவே எதைச் செய்­வ­தற்­கும் இவர்­கள் தயா­ராகவே இருப்­பர்.கொலை செய்­வ­தற்­குக் கூட இவர்­கள் ஒரு­போ­தும் தயங்­க­மாட்­டார்­கள்.

போதைப் பொருள்­க­ளின்  பரம்­பலை தடை செய்ய  வேண்­டும்

எமது நாட்­டில் போதைப்­பொ­ருள்­க­ளின் வர்த்­த­கம் தடை­யின்றி இடம் பெற்று வரு­வ­தைக் காண­மு­டி­கின்­றது. உயர்­மட்ட அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் இதில் தொடர்பு இருப்­ப­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதன் கார­ண­மா­கவே இவற்­றின் பரம்­பலை தடை செய்­வ­தில் இடர்­பா­டு­கள் தோன்­றி­யுள்­ள­தாக ஆய்வு அடிப்­ப­டை­கள் தெரி­விக்­கின்­றன.

மது­சார வகை­க­ளின் விலை­கள் அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­வ­தால் கசிப்­புப் போன்ற கீழ் தரா­த­ர­மு­டைய மது­சார வகை­க­ளின் உற்­பத்­தி­யும் தடை­யின்றி இடம் பெற்று வரு­கி­றது.

கிரா­மப்­புற மக்­கள் இவை கொண்­டுள்ள விலைக் குறைவை கார­ணம்­காட்டியே இவற்றை நாடிச் செல்­கின்­ற­னர்.உடல் நலக் கேடு­க­ளால் விரை­விலேயே நோயா­ளி­க­ளாக மாறி­வி­டு­கின்­ற­னர்.

அண்­மைக் கால­மாக புகை­யி­லை­யின் உற்­பத்­தியை தடை­செய்­வது குறித்த செய்­தி­கள் வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன. புகை­யி­லைப்­பா­வனை புற்­று­நோயை ஏற்­ப­டுத்தி விடும் என்­ப­தால் இந்­தத் தடை நடை­மு­றைக்கு வர­வுள்­ள­தாக அதற்­கொரு கார­ண­மும் கூறப்­ப­டு­கின்­றது.

வட­ப­குதி விவ­சா­யி­களே புகை­யி­லைச் செய்­கை­யில் அதி­க­ள­வில் ஈடு­பட்டு வரு­வ­தால் அவர்­கள் நிச்­ச­ய­மா­கப் பாதிக்­கப்­ப­டவே செய்­வார்­கள். ஆனா­லும் பொது நன்­மை­யைக் கருத்­தில் கொண்டு அவர்­கள் இதை ஏற்­றுக் கொள்ள வேண்­டும்.

ஆனா­லும் சிக­ரெட் போன்ற புகைப் போதை ஊட்­டி­கள் புற்­று­நோயை ஏற்­ப­டுத்­து­கின்ற போதி­லும் அவற்­றின் விற்­ப­னைக்­குத் தடை எது­வும் விதிக்­கப்­ப­ட­வில்லை.

அர­சுக்கு அதிக வரு­வாயை ஈட்­டித் தரு­வ­தால் மது­சா­ரத்­துக்­கும், சிக­ரெட்­டுக்­கும் தடை­வி­திக்­கப்­ப­டாமை சரி­யான விட­ய­மா­கத் தெரி­ய­வில்லை. சந்­தர்ப்­பத்­துக்கு ஏற்­றற் போல் அரசு கொள்­கைளை வகுக்­கும் போக்­கும் ஏற்­பு­டை­ய­தல்ல.

பொறுப்­புக் கூற­லும் வினைத்­தி­ற­னான  செயற்­பா­டு­க­ளும் வேண்­டும்

ஆக,மது­சா­ரப் பாவனை ஏழை­களை மேலும் ஏழை­க­ளாக்கி அவர்­க­ளின் வாழ்க்­கை­யையே சீர­ழித்து விடு­கி­றது. ஏனைய போதைப்­பொ­ருள்­க­ளும் மக்­க­ளின் வாழ்­வி­யல் சுற்­றோட்­டத்­தையே நாச­மாக்கி விடு­கின்­றன.

இந்த விட­யங்­கள் குறித்து ஆழ்ந்து சிந்­திப்­போம். உல­கம் முழு­வ­தும் ஒன்­றி­ணைந்து பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரா­கப் போராட ஒன்­றி­ணை­வது போன்று போதைப்­பொ­ருள்­களை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கும் ஒன்­றி­ணைந்து செய­லாற்ற வேண்­டும்.

போதை இல்­லாத உலகை உரு­வாக்­கு­வதே அனை­வ­ர­தும் இலக்­காக இருக்­க­வேண்­டும்.

You might also like