போதையிலிருந்து மீட்டெடுக்க- யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை இல்லம்!!

மது,மற்றும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உடல், உள பாதிப்புகளிலிருந்து விடுதலையும் சிகிச்சையும் அளிக்கும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நம்பிக்கை இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், முதன்மை வீதியில் 211/1 எனும் இலக்கத்தில் இல்லம் திறக்கப்பட்டுள்ளது.

மது, போதைப் பொருள் பாவனையால் ஏற்படக்கூடிய மனஅழுத்தம், மனச்சோர்வு, மறதி, அங்கலாய்ப்பு, வீட்டு வன்முறை போன்ற பாதிப்புக்களிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள், உடல், உள,ஆன்மீக ரீதியான முன்னேற்றங்களை எய்துவதற்கு உரிய மருத்துவ சிகிச்சைகள், உள ஆற்றுப்படுத்தல். குழு ஆற்றுப்படுத்தல், யோகா தியானப் பயிற்சிகள், இளையோருக்கான உள சமூக வழிகாட்டல்கள் போன்ற
நிறைகாண் பணிகள் இந்த நம்பிக்கை இல்லத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

You might also like