side Add

போதையிலும் ஆண்களை வெல்ல வேண்டும்!!

சில தினங்­க­ளுக்கு முன்­னர் இரவு. இரு­பா­லைச் சந்­தி­யில் இரண்டு இளம் பெண்­பிள்­ளை­கள் மோட்­டர் சைக்­கி­ளில் செல்­லும்­போது விபத்­துக்­குள்­ளாகி மீட்­கப்­பட்­டார்­கள்.  அப்­போ­து­தான் தெரி­யவந்தது அவர்­கள் குடித்­து­விட்டு மோட்­டார் சைக்­கிள் ஓடி­ய­து. இதில் என்ன விசே­ஷம் என்றா கேட்­கி­றீர்­கள்?

இன்­றைக்கு யாழ்ப்­பா­ணத்­தில் (ஏனைய இடங்­க­ளைப் பற்­றிக் கதைக்க வர­வில்லை) பெண்­கள் எல்லா இடங்­க­ளி­லும்… இடங்­கள் என்­றால்… பரீட்­சை­யில் சித்­தி­ய­டை­வது… கோவில் திரு­வி­ழாக்­க­ளில் ஒன்­று­கூ­டு­வது… , அரச திணைக்­க­ளங்­கள், அரச தனி­யார் வங்­கி­க­ளில் பணி­யாற்­று­வது என்­பது தொடங்கி எல்­லா­வற்­றி­லும் பெண்­கள் முன்­னிலை வகிக்­கி­றார்­கள். அது ஒன்­றும் தவ­றில்லை. தேவை­யும் அதுவே.

ஆனால், யாழ்ப்­பா­ணத்­தில் மது போதை­யில் மோட்­டார் சைக்­கிள் ஓடி வழக்­குப் பதி­வு­செய்­யப்­பட்ட முத­லா­வது பெண் என்ற பெரு­மையை அந்­தப் பெண்­க­ளில் ஒரு­வர் பெற்­றுக்­கொண்­ட­தாக அறியப்படுகிறது. இறு­தி­யா­கக் கிடைத்த தக­வ­லின்­படி நீதி­மன்­றுக்­குச் சமூ­க­ம­ளிக்­காத அந்­தப் பெண்­மீது பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக…

பெண்­கள் குடிக்­கின்­றார்­களா…?
ஆண்­கள் குடித்­தால், பெண்­கள் குடிப்­ப­தில் என்ன பிழை என்ற கேள்­வி­கள் பல முனை­க­ளி­லும் கேட்­கப்­ப­டு­கின்­றன. பொது வெளி­யில் இது தொடர்­பாக யாரும் அதி­கம் கதைக்­கா­விட்­டா­லும், முக­நூல்­க­ளி­லும் சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் கருத்­துக்­களை அள்­ளி­வீ­சும் பல சமூக ஆர்­வ­லர்­கள் இது தொடர்­பா­கக் கதைக்­கத் தவ­ற­வில்லை.

பாரம்­ப­ரிய கிடுகு வேலிக் கலாசா­ரம் கொண்ட யாழ்ப்­பா­ணத்­தில் சைக்­கிள்­கூட ஓடப்­ப­ழ­காத, ஓடத்­தெ­ரி­யாத ஒரு சூழ­லில் இருந்த யாழ்ப்­பா­ணத்­துப் பெண்­கள், தாய், தகப்­பன், சகோ­த­ரங்­கள், பின்­னர் கண்­ணான கண­வன் என்று அடி­தொ­ழுது வாழ்ந்து பழக்­கப்­பட்ட யாழ்ப்­பா­ணத்­துப் பெண்­கள் இன்று ஆண்­க­ளுக்கு நிக­ரா­கக் குடித்­து­விட்டு நீதி­மன்ற வாச­லில் நிற்­கி­றார்­கள் என்­றால் இது எவ்­வ­ளவு மேன்­மை­யான விட­யம்…?

நன்­றா­கக் குடி­யுங்­கள்… குடித்­து­விட்டு மோட்­டார் சைக்­கிள் ஓடா­தீர்­கள் அல்­லது போதை இல்­லாத ஒரு­வரை மோட்­டார் சைக்­கி­ளைச் செலுத்­த­வி­டுங்­கள் என்ற போத­னை­கள் வேறு செய்­யப்­ப­டு­கின்­றன. போதை­யே­றித் தெரு­வில் விழுந்த பெண்­கள் தொடர்­பாக ஏன் ஊட­கங்­க­ளில் வெளி­யிட்டு அந்­தப் பெண்­க­ளைச் சந்தி சிரிக்க வைக்­கி­றீர்­கள்?

அவர்­க­ளுக்கு நல்ல அறிவுரைகளைச் சொல்­லிக்கொடுத்துத் திருத்­துங்­கள் என்று வேறு சில­ரும் சொல்­கி­றார்­கள். குடிப்­ப­தைப் பிழை­யா­கப் பார்க்­கா­தீர்­கள், நவீன உல­கில் பியர் அடிப்­பதோ விஸ்கி குடிப்­பதோ மோச­மான விட­யம் அல்ல. ஒக்­கே­ச­னாக அடிப்­பது ஒன்­றும் தவ­றில்லை என­வும் சம காலத்­துப் பின்­ந­வீ­னத்­துவ வாதி­கள் கருத்­துச் சொல்­கி­றார்­கள்.

அன்­றைய தினம் குடித்த பெண்­கள் ஒரு பிறந்­த­நாள் கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொண்டு மது அருந்­திப் பின்­னர் புறப்­பட்­ட­தாக முக­நூல் நண்­பர்­கள் தெரி­விக்­கி­றார்­கள். அந்த இடத்­தில் இந்­தப் பெண்­கள் மட்­டும்­தான் கலந்­து­கொண்­டார்­கள் என்று சொல்­ல­மு­டி­யாது. வேறு பல பெண்­க­ளும் கலந்­து­கொண்­டி­ருப்­பார்­கள். எனவே இது ஒன்­றும் மறை­பொ­ரு­ளான விட­யம் என்று கூறு­வ­தற்­கில்லை.

ஸ்கூட்டி ஓடும் பெண்­கள் எல்­லோ­ரும் சாதா­ரண நிலை­யில் உள்ள பெண்­க­ளாக இங்கு இல்லை. சிறந்த கல்­வி­ய­றி­வும், ஆற்­ற­லும் உள்ள இவர்­க­ளில் அநே­க­மா­னோர் நிரந்­த­ர­மான அரச, தனி­யார் வேலை­க­ளில் உள்­ள­வர்­கள்.

இந்­தச் சமூ­கத்­தில் நீண்ட பாரம்­ப­ரி­யங்­க­ளைக் கொண்ட குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். இவர்­க­ளுக்கு குடி­யால் ஏற்­ப­டும் தீமை­களோ அல்­லது அதன் பின்­னணி தரும் சிக்­கல்­களோ தெரி­யா­ம­லி­ருக்க வாய்ப்­பில்லை. புத்தி கேட்­டுத் திருந்­த­வேண்­டிய நிலை­யில் அவர்­க­ளும் இல்லை. அவர்­க­ளு­டைய அறி­வும் இல்லை. உண்­மை­யில் என்ன தான் நடக்­கி­றது?

மாலை வேளை­யில் மங்­கிய இரு­ளில் ஒன்­று­சே­ரும் ஆண்­கள் தண்ணி தண்­ணி­யாக அடித்­துச் சில­வே­ளை­க­ளில் கஞ்­சா­போன்ற போதைப் பொருள்­க­ளை­யும் பாவித்து வெறி ஏறி, ஒரு மோட்­டார் சைக்­கி­ளில் மூன்­று­பே­ராக உட்கார்ந்து கூச்­ச­லிட்­ட­வாறு வளைந்து வளைந்து காப்­பெற் சாலை­யில் வேக­மாக ஓடித் திறில் காட்­டு­வதும், சம­யங்­க­ளில் சண்­டை­பி­டிப்­ப­தும், வாய்த்தர்க்கம் கைகலப்பாகி வாள்­வெட்டு வரை­போ­வ­தும் அவர்­க­ளின் கதா­நா­ய­கத்­த­ன­மா­கப் பார்க்­கப்­ப­டு­கி­றது.

அவ்­வாறு எந்­தக் கட்­டுப்­பெட்­டித்­த­ன­மும் இல்­லா­மல் யாருக்­கும் பயப்­ப­டா­மல் சுதந்­தி­ர­மா­கச் செயற்ப­டு­வோம் எனத் தலை­தூக்­கும் சில பெண்­க­ளின் கதா­நா­ய­கித் தனங்­களே இத்­த­கைய விளை­யாட்­டுக்­க­ளின் பின்­ன­ணி­யா­கப் பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஐஸ்­கி­றீம் கடை­யில் கேக் வெட்டி, றோல் சாப்­பிட்டு, ஐஸ்­கி­றீம் குடித்­துக் கொண்­டா­டப்­பட்ட பிறந்த நாள்­களை ஒத்த கொண்­டா­ட்டங்­கள் இன்று தண் ணி­ய­டித்­துத் தலை­கீ­ழா­கும் நிலை­வரை வந்­துள்­ளதை இளம் தலை­மு­றை­யின் முன்­னேற்­றம் என்று சொல்ல முடி­யுமா?

எத்­த­கைய வச­தி­கள் இருந்­த­போ­தும் உயர் பதவி நிலை­க­ளில் இருந்­தா­லும் கட்­டிய மனை­வியை, அல்­லது கண­வ­னை­விட வேறு தொடுசல் வைத்­தி­ருப்­பதை யாரும் மதிப்­ப­தில்லை ஏற்­றுக்­கொள்­வ­தில்லை. தனி­ ம­னித ஒழுக்­கத்தை எவ­ரும் தூக்கி எறிந்­து­விட்­டுப்­போக முடி­யாது. இன்று பெண்­கள் தண்­ணி­ய­டிப்­பது சரி என வாக்­க­ளத்து வாங்­கும் எந்த ஆண்­ம­க­னும் அத்­த­கைய பின்­னணி உள்ள ஒரு பெண்­னைத் திரு­ம­ணம் செய்ய முன்­வ­ரு­வானா?

சம­கா­லத்­தில் நவீன தொழில்­நுட்ப வச­தி­கள், வாழ்க்கை முறை­கள் எல்­லாம் மாறி­விட்ட பின்­ன­ணி­யில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட அல்­லது அவ­தூறு பரப்­பப்பட்ட ஒரு பெண்ணை இந்­தச் சமூ­கம் எந்­தக் கேள்­விக்­கும் உட்­ப­டுத்­தா­மல் ஏற்­றுக்­கொள்­கின்­றதா?

திரு­ம­ணம் என்று வந்­த­வு­டன் சாத­கம் பார்த்து, சாதி குலம் கோத்­தி­ரம் எல்­லாம் விசா­ரித்து, ஆண் அல்­லது பெண்­ணின் சொந்த நடத்தை பற்­றித் துப்­ப­றிந்து இறு­தி­யில்­தானே திரு­ம­ணங்­கள் நிச்­ச­யப்­ப­டுத்­தப்­ப­டுகின் றன. ஒரு சில புற­ந­டை­க­ளைத் தவிர இவற்­றுக்கு மாற்­றீ ­டு­க­ளைக் கொண்­டு­வந்­து­விட்­டோமா?

பாட்­டுப் பாட விரும்­பு­வர்­களை மேலும் மேலும் பாடுங்­கள் என ஊக­கப்­ப­டுத்­து­கி­றோம். ஓவி­யம் வரை­ப­வர்­கள், கதை கவி­தை­கள் எழு­து­ப­வர்­கள் அவர்­கள் ஆண்­க­ளாக இருந்­தால் என்ன பெண்­க­ளாக இருந்­தால் என்ன அவர்களின் முன்­னேற்றம் காண முய­லு­கின்­றோம்.
அவ்­வாறே குடிப்­ப­ழக்­கத்­தில் உள்ள ஓர் ஆணையோ பெண்­ணையோ மேலும் மேலும் குடி­யுங்­கள் என ஊக்­கப்­ப­டுத்­த­லாமா? அல்­லது ஊக்கம் கொடுக்கத்தான் முடி­யுமா?

சும்மா ‘ஒக்­கே­ஷ­னாத்­தான் அடிக்­கி­றோம் ஒரு பெக் அடிப்­ப­தால் ஒன்­றும் பிரச்­சி­னை­ யில்லை. ஆக்­க­ளுக்கு முன்­னால கொஞ்­ச­மா­வது குடிக்­கா­மல் விடு­வது சரி­யில்லை, என்று தாம் குடிப்­ப­தற்கு நியா­யம் கற்­பிக்­கும் அன்­பர்­களே குடி­யின் எல்லை எது? குடித்­துக் குடித்து எல்லை தாண்­டும்­போது ஏற்­ப­டும் பிரச்­சி­னை­க­ளால்­தானே குடிக்கு எதி­ரான கருத்­துக்­கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. குடி­யால் ஏற்­ப­டும் பக்­க­வி­ளை­வு­களை சமூ­கத்­தில் நாளும்­பொ­ழு­தும் பார்த்­துக்­கொண்­டு­தான் எல்லை மீற மாட்டோம் என்று சொல்­லிக்­கொண்டு எல்­லோ­ருமாக குடிக்க ஆரம்­பித்து எல்­லோ­ரும் எல்லை மீறு­கின்றோம்.

அந்­தப் பெண்­கள்­கூட பிறந்தநாள் விருந்­துக்கு வெகு அட்­ட­கா­ச­மாக, அலங்­கா­ர­மாக சிறந்த ஆடை அணி­க­ளு­டன் அலட்­சி­ய­மாக வந்து முதல் றவுண்­டில் கலகலப்­பாக சிறிது சிறி­தா­கத் தண்­ணி­ய­டிக்க ஆரம்­பித்­தி­ருப்­பார்­கள்…? பின்­னர் அதன் நீட்­சி­தான் இரு­பா­லைச் சந்­தி­யில் காப்­பெற் றோட்­டில், விபத்­தாகி விழுந்து புரண்டு ஆடை­கள் அழுக்­கா­கும் வரை சென்றது.

அது வேறு சூழ­லாக இருந்­தால் போதை­யில் சுய­மி­ழந்த பெண்­க­ளுக்கு நடக்­கும் கொடு­மை­களை அறி­யா­த­வர்­களா? அந்­தப் பெண்­க­ளும் அவர்­களை ஒத்த பெண்­கள் சமூ­க­மும்போதை ஏற்­றியே பெண்­களை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தும் எத்­த­னையோ சம்­ப­வங்­கள் சமூ­கத்­தில் நடப்­பதை இவர்­க­ளும் இவர்­க­ளுக்கு வக்­கா­லத்து வாங்­கு­ப­வர்­க­ளும் அறிய மாட்­டார்­களா?

ஒரு புறத்­தில் வீறு­கொண்டு எழுந்த விடு­த­லைப்­போ­ராட்­டத்­தின் பின், அதைக் கட்­டிக்­காக்க முடி­யா­மல் அதன் தொடர் பயன்­களை அறு­வடை செய்ய முடி­யாத எங்­கள் தமிழ்த் தலை­வர்­கள் இன்று முள்­ளி­ வாய்க்­கால் நினைவு தினத்தை எப்­ப­டிக் கொண்­டா­டு­வது என்ற பிரச்­சி­னை­யில் நிற்­கும் நிலை­யில் இது­போன்ற சம்­ப­வங்­க­ளைத்­த­விர வேறு என்­ன­தான் நடக்­கும்?

பண்­பாடு மிக்க மக்­கள் கூட்­ட­மாக இருந்த எங்­கள் மக்­க­ளும் அவர்­க­ளின் விடு­ த­லைப்­போ­ராட்­டமும் உச்­ச­மாக இருந்த காலத்­தில் விடு­த­லைப் போ­ரா­ளி­க­ளாக ஆயு­தம் ஏந்­திப்­போ­ரா­டிய பெண்­க­ளும், அதற்கு ஏனைய உத­வி­க­ளைச் செய்த சமூக அமைப்­பில் இருந்த பெண்­கள் கூட்­ட­மா­க­வும் இருந்த எங்­கள் சூழல் இன்­றைக்கு எந்த நிலை­யில் வந்து நிற்­கி­றது என்­பதை யோசித்­துப் பார்க்­க­வேண்­டும்.

இதற்கு எங்­கள் அர­சி­யல் சமய சமூ­கத் தலை­வர்­கள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், மாகாண, பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள்­தான்­பொ­றுப்­பேற்க வேண்­டும். இது­பற்றி இவர்­கள் சிந்­திக்­க­ மாட்­டார்­களா?

You might also like
X