மகிந்­த­வைத் தூக்கி உள்ளே போடா­மல் விட்­ட­தற்­கான தனது கர்­ம­வி­னை­யையே அனு­ப­விக்­கி­றார் ரணில்

கூட்­ட­மைப்­பு­எம்.பியின் க­ருத்­து­ இது

ஆட்­சிக்கு வந்­த­வு­டன் மகிந்த ராஜ­பக்ச குழு­வி­ன­ரைத் தூக்­கிச் சிறைக்­குள் போடா­மல் செய்த பாவத்­தையே ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று அனு­ப­வித்­துக் கொண்­டி­ருக்­கின்­றார். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சீ.யோகேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று இடம்­பெற்ற விவா­தத்­தில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

2010ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் சரத் பொன்­சே­கா­வுக்­கும், 2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் தமிழ் மக்­கள் வாக்­க­ளித்­த­னர். இவர்­கள் இரு­வ­ரும் தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­பார்­கள், இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண்­பார்­கள், உரி­மை­களை வழங்­கு­வார்­கள் என்ற எந்­த­வொரு நம்­பிக்­கை­யும் தமிழ் மக்­க­ளி­டத்­தில் இருக்­க­வில்லை. இந்­தத் தேர்­தல்­க­ளில் மகிந்த ராஜ­பக்ச வெற்­றி­பெற்று விடக்­கூ­டாது என்ற ஒரே­யொரு நோக்­கத்­துக்­கா­கவே பொன்­சே­கா­வுக்­கும், மைத்­தி­ரிக்­கும் ஆத­ரவு வழங்­கி­னார்­கள்.

தற்­போது நாட்­டில் ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் நெருக்­க­டிக்கு அரச தலை­வர் மைத்­தி­ரியே கார­ண­மா­கி­யுள்­ளார். நாட்­டில் அதர்­மம் தலை­தூக்­கி­யுள்­ளது. தர்­மம் தலை­கு­னிந்­துள்­ளது. தர்­மத்தை நிலை­நாட்ட பௌத்­த­மத தலை­வர்­கள் மைத்­தி­ரிக்கு அழுத்­தம் கொடுக்க வேண்­டு­மென ஒரு இந்­து­ம­த­கு­ரு­வா­கிய நான் இந்­தச்­ச­பை­யி­னூ­டாக வேண்­டு­கோள் விடுக்­கின்­றேன்.

2015ஆம் ஆண்டு ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆட்­சிக்கு வந்­த­வு­ட­னேயே மகிந்த ராஜ­பக்ச குழு­வி­னரை சிறைக்­குள் தூக்­கிப்­போட்­டி­ருக்க வேண்­டும். அவ்­வாறு செய்­யாத பாவமே இன்று ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைச் சூழ்ந்­துக்­கொண்­டுள்­ளது. அந்­தப் பாவத்­தைத்­தான் இன்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார் என்­றார்.

You might also like